ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள் மத்தியில், நெற்றி வேர்வை நிலத்தில் சொட்ட சொட்ட கக்ஷ்டபட்டு உழைக்கும் தொழிலாளர்கள், மற்றும் உண்மையாக பணி செய்யும் அலுவலக தொழிலாளர்கள் அனைவரும், மே தினமான 1ஆம் தியதி பெருந்திரளான மக்கள் ஒன்றாக கூடி தொழிலாளர் தினத்தை கொண்டாடி மகிழ வேண்டும்.
தொழிலாளர்களை பெருமுதலாளிகள் அடிமைகளாக நடத்துவதை எதிர்த்தும், தொழிலாளர்களின் ஊதியங்கள் சரியாக கிடைக்கவும், பென்சன் காலங்களில் வயது முதிர்ந்த நிலைகளில் மருத்துவ காப்பீடுகளை இலவசமாக கிடைக்கவும் இந்த நன்னாளில் மத்திய அரசானது தொழிலாளர்களின் நிலையை அறிந்து நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியாவில் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினமான மே 1 ஆம் தியதி வைகோ அவர்களின் தனி நபர் மசோதா மூலம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டதுதான் இன்றளவும் மக்கள் இந்த தினத்தை கொண்டாட வசதியாக அமைந்துள்ளது.
தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் ஒருவரையொருவர் அன்பு பாராட்டி, இயலாதவர்களுக்கு உதவி செய்து, அறியாதவர்களுக்கு கற்பித்து, கோபப்படுகிறவர்களுக்கு அன்பை ஊட்டி, எரிச்சலடைபவர்களுக்கு வேலையின் தன்மையை விளக்கி, செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து போற்றி தகுந்த மரியாதை கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நல்ல முறையில் செலவிட்டு, குடும்பத்தையும், சமுதாயத்தையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சபதம் ஏற்பதோடு, இந்த நாளில் தொழிலாளர்களுக்கு எனது அன்பு நிறைந்த தொழிலாளர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்