திராவிட இயக்கத்தை கட்டி காத்திடும் இடத்தில் மதிமுக உள்ளது என்பதை தோழமை கட்சிகள் அறிந்து, திராவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு தலைவர் வைகோ அவர்கள் செல்லுமிடமெல்லாம் மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்வதை காணலாம்.
அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும், அவர்களுக்கு நாம் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டுமென்று ஜாதி, மத வேற்றுமைகளற்ற பாதுகாப்பான அரசியலை முன்னெடுப்பவர் தலைவர் வைகோ அவர்களும், மதிமுகவும்.
ஜாதி, மத கலவரங்களை தூண்டி அதன் மூலம் ஆதாயம் அடைய துடிக்கும் மத்திய மோடி அரசு, மாநிலங்களின் உரிமைகளை பறித்து மாநிலங்களை மதிக்காமல செயல்படுவதால், ஆட்சியிலிருந்தே அகற்றுவது தமிழர்களின் மிகபெரிய கடமையாகும்.
மாநில சுயாட்சியை முன்னெடுக்கும் வகையில் பல மாநில தலைவர்கள் சந்திப்பு இன்றியமையாததாகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் மத்தியில் கூட்டாட்சியை நிலைநிறுத்தி, மாநிலங்களில் சுயாட்சியை நிறுவ வேண்டிய தருணம்.
இந்நிலையில்தான் நெருப்பின் மீது தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வெள்ளிவிழாவை நோக்கி நகர்கிறது.
24 ஆண்டுகள் முடிவுற்று 25 ஆம் ஆண்டின் தொடக்க நாள் மே 6. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு புத்துணர்வு கொடுக்கும் விதத்தில் மதிமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ருசைல் ரவுண்டானா அருகில் உள்ள செல் பெட்ரோல் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள “சிம்பொனி டைன் இன்” ல் (பழைய ஸ்பைஸ் வில்லேஜ் ரெஸ்டாரண்ட்) 11-05-2018 மாலை 3 மணி அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
கழகத்தின் கொள்கைகளை உயர்த்தி பிடிக்கவும், கழகத்தின் மேல் கொண்ட பற்றுறுதியை நிலைநாட்டவும், தமிழர் உரிமைகளை மீட்கவும், கடல் கடந்து வாழ்ந்தாலும், தமிழக வாழ்வாதங்களை காக்கும் தலைவர் வைகோ அவர்களின் குரலுக்கு வலிமை சேர்க்க, ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள், கழகத்தினர் என அனைத்து தமிழர்களும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
29-04-2018