தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் அந்தி சாய்கிறது வரை விரதம் இருந்து மெக்கா நோக்கி தொழுகை செய்கின்றனர்.
பிறை கண்டு நோன்பு தொடங்கி, அடுத்த பிறை காணும்போது நோன்பு முடித்துக்கொள்கின்றனர்.
அவர்களின் கடமைகளின் ஒன்றான கொடை என்ற வள்ளல் மனதால் ஏழை எழியோருக்கு உணவு உடை உறைவிடம் போன்றவையும் செய்து வருகின்றனர்.
அவர்கள் கொடையே அவர்களை செழிப்பாக வைக்கிறது என நம்புகின்றனர்.
ரமலான் காலம் கடந்த வருடமும் இந்த வருடமும் கொரொனா கொடுமை உலகை வாட்டி வதைக்கிறது. நோயோளிகளுக்கு உதவுவதிலிருந்து, மரணித்தவர்களை மண்ணில் அடக்கம் செய்ய முன்வராதவர்களை இஸ்லாமிய மக்களே தங்கள் ஈகை குணத்தால் அடக்கம் செய்து இறுதி மரியாதையையும் செய்தனர்.
கருணையுள்ளம் கொண்ட மக்களாக விளங்கும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும், ரமலானை கொண்டாடும் அனைவரும் நல் வாழ்வு வாழ ரமலான் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்