Thursday, November 18, 2021
வளைகுடா நாடுகளில் முக்கியமான நாடு ஒமான். ஒமானியர்கள் தங்கள் கலாச்சாரங்களை பேணி காப்பதில் சிறந்தவர்கள். சக மனிதர்களை பாகுபாடின்றி மதிப்பவர்களில் மேன்மையானவர்கள். ஒமான் நாட்டின் தேசிய தினம் இன்று. நாட்டு மக்கள் மேலும் சிறக்கவும், பொருளாதாரத்தில் நாடு அதிக வளர்ச்சி காணவும், சிறந்த சமாதானம் நிறைந்த நாடாகவும் விளங்கவும், ஒமான் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் ஒமான் தேசிய நாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மைக்கேல் செல்வ குமார்
via IFTTT
Thursday, November 11, 2021
அங்கன்வாடி நில அளவீடுக்கு வட்டாட்சியரிடம் மனு!
கொடுப்பைக்குழியில் சர்வே எண் 520/2 ல் 50 ஆண்டுகளாக இயங்கி வந்த அங்கன்வாடி மையம் (பாலர் பள்ளி) புதிய கட்டடத்திற்கு நில அளவீடு வேண்டி கல்குளம் துணை வட்டாட்சியரிடம் (நிலம்) கொடுப்பைக்குழி ஊர்மக்கள் சார்பாக, குருந்தன்கோடு ஊராட்சி 12 ஆவது வார்டு உறுப்பினர் திரு.N.சுதாகர், காந்திஜி இளைஞர் மன்ற தலைவர் திரு.P.செல்லதுரை, உப தலைவர் J.கஜில், செயலாளர் திரு.N.ஜாண் பீட்டர், தகவல் தொடர்பு செயலாளர் Er.KD.மைக்கேல் செல்வ குமார், திரு.துரை ஆகியோர் இன்று 11-11-2021 மனு கொடுத்தனர்.
குருந்தன்கோடு ஒன்றிய மேநாள் சேர்மன் திரு.K.T.உதயம் அவர்கள் துணை வட்டாட்சியர் அவர்களிடத்தில் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி அங்கன்வாடி மற்றும் மாதர் சங்க நில அளவுகளை எங்களுடன் வட்டாட்சியருக்கு விளக்கி கூறி, துணை வட்டாட்சியரே, நிலத்தின் பழைய சான்றிதள்கள் எடுக்க பதிவாளருக்கு கடிதம் எழுத கேட்டு பெற்று தந்தார்.
கல்குளம் வட்டாட்சியர் கொடுத்த கடிதத்தை இரணியல் சார் பதிவாளரிடம் கையளித்து நில அளவீடு பற்றி விளக்கி கூறிய போது கடிதம் பார்த்து விட்டு ஆவன செய்கிறேன் என உறுதியளித்துள்ளார்.
ஆகவே வேறு சிக்கல்கள் புதிதாக இல்லாமல் இருந்தால், விரைவில் நில அளவீடு இருக்கலாம் என எதிர் பார்க்கிறோம்.
மைக்கேல் செல்வ குமார்
கொடுப்பைக்குழி
தேதி : 11-11-2021
Tuesday, November 9, 2021
கொடுப்பைக்குழி அங்கன்வாடி நில அளவீடு வேண்டி மனு!
சர்வே எண் 520/2 ல் வடக்கு மூலையில் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் (பாலர் பள்ளி) செயல்பட்டு வந்தது. 2017 ஓகி புயலால் அங்கன்வாடி முழுதும் சேதமடைந்ததால் 01-10-2019 ல் இடிக்கப்பட்டு (பாலர் பள்ளி) தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
ஆகவே புதிதாக கட்டடம் கட்ட சர்வே எண் 520/2 அளவீட்டின் படி, அங்கன்வாடி மற்றும் மாதர் சங்கத்திற்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அளந்து தருமாறு இன்று 09-11-2021 காலையில் குருந்தன்கோடு ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் குருந்தன்கோடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுப்பைக்குழி ஊர் மக்கள், மற்றும் காந்திஜி இளைஞர் மன்றம் சார்பாக மனு கையளித்தோம்.
கொடுப்பைக்குழி
தேதி : 09-11-2021
Saturday, November 6, 2021
மது ஒழிப்பு போராளி அன்னை மாரியம்மாளுக்கு புகழஞ்சலி!
விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அன்னமிட்ட, மது ஒழிப்புக்கு உண்ணாவிரதமிருந்து மதுக்கடையை மூடிய வீரத்தாய் அன்னை மாரியம்மாளின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் குமரி மாவட்ட மதிமுகவினரால் இன்று 6-11-2021 மாலை 5.30 மணி அளவில் அனுசரிக்கப்பட்டது.
இதில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் அடியேனும் புகழஞ்சலி செலுத்தினேன்.
மைக்கேல் செல்வ குமார்
06-11-2021
Subscribe to:
Posts (Atom)