உங்கள் தந்தையார் மறைந்த செய்தி நேற்று (03-12-2021) கேட்டு துயருற்றேன். அதற்கு முந்தைய நாளில்தான் அவர் உடல் நலன் பற்றி பேசிக்கொண்டது என் மனதை வாட்டிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் அவர் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. தந்தை என்பவர் வெறுமனே இருந்தாலே நமக்கு பெரும் பலம் என்பதை அறிவேன். அவர் இல்லா உலகு நாம் தனிமை படுத்தப்பட்ட ஆடுகள்போல மேய்ப்பன் இல்லாமல் இருப்பது துர்பாக்கியம்தான். ஆனாலும் நல்ல மேய்ப்பன் அண்டையில் இருந்த ஆடுகளாக நம்மை தற்காத்து குடும்பத்தையும் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதை உங்கள் தம்பியின் பலத்துடன் இணைந்தே பலப்படுங்கள்.
தந்தை இல்லா சோகம் நம்மை போன்றவர்கள் அனுபவிப்பது காலம் தரும் அனுபவங்களே...
தளராமல் முன்னேறுங்கள். விடா முயற்சியும், கடின உழைப்பும் உங்கள் வாழ்வை வசப்படுத்தட்டும்.
தமிழீழம் சார்ந்த பதிவுகளால் எனது முகநூல் முடக்கப்பட்டதால் ஆறுதல் பதிவு கூட செய்ய இயலாத சூழல். தமிழீழ விடுதலை போராளிகளை போல நாமும் போராடுவோம்.
தந்தையாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.
தம்பி தமிழருண் துயரில் பங்கெடுக்கும் சகோதரன்,
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக
04-12-2021