Saturday, April 29, 2023

பெரியவரே ஆற்றாமையால் துடிக்கிறீர்கள். ஓய்வெடுங்கள்!

காலையிலிருந்தே அந்த பெரியவரை பற்றி எழுத வேண்டுமென்றே இருந்தேன். இப்போதுதான் சமயம் கிட்டியது.


கடந்த பொதுக்குழுவுக்கு முன்னர் முக்கியமான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அண்ணன் துரை வைகோ அவர்களை பொறுப்புக்கு நியமிக்கலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தி 104 வாக்குகளில் இரண்டு வாக்குகள் இல்லை என்றும் மீதமுள்ள 102 வாக்குகள், துரை வைகோ அவர்களுக்கு கழகத்தில் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்றும் வாக்களிக்கப்பட்டிருந்தது.

அதில் அந்த பெரியவர் கலந்துகொள்ளவில்லை. ஒமானிலிருந்து நான் அழைத்தேன் அந்த பெரியவருக்கு!. ஐயா நல்லா இருக்கீங்களா... உங்களை கூட்டத்தில் காணலயே என்றேன். உடம்பு சரியில்லயா என்று கேட்டேன். அவர் உடனே, மைக்கேல் நீங்கள் ஒமானில் இருந்தாலும் கவனித்துக்கொண்டு அழைத்திருக்கிறீர்களே மகிழ்ழ்ச்சி. கட்சி நடவடிக்கைகளை கவனித்திக்கொண்டுருக்கிறீர்கள் சரி என்றார். நானும் ஆம் ஐயா நீங்கள் இல்லாததுதான் வருத்தமாக இருந்தது என்றேன். அதற்கு அவர், கொரொனா காலம் இன்னும் சரியாகவில்லை என்பதால் வெளியில் அதிகமாக செல்லவில்லை. தலைவரிடத்தில் சொல்லிவிட்டேன் என்றார். சரி ஐயா உடல் நலனை பாத்துக்கொள்ளுங்கள் . நன்றி என்று சொல்லி அழைப்பை துண்டித்தேன்.

தலைவரை எங்களை போன்ற சிறார்கள் ஐயா என்றே அழைப்போம். அந்த பெரியவரையும், தலைவருடன் இருப்பதால், தலைவர் மதிப்பளிப்பதால் ஐயா என்று அழைப்பதுண்டு.

2017 ல் கழக இணையதள மாநாடு தாயகத்தில் நடந்தது. நான் பேசும்போது கூட கழக பொதுச் செயலாளர் அன்பு தலைவர் வைகோ, அவைத் தலைவர் திருப்பூரார் உள்ளிட்ட கழக கண்மணிகள் என்று சொல்லிதான் அவருக்கும் மரியாதை செய்திருப்போம். நேரமின்மையால் அதிகமானோர் அப்படிதான் பேசியிருப்பார்கள். இப்படியாக அவர் மேல் கழக கடைகோடி தொண்டனும் மரியாதை வைத்திருந்தார்கள்.

கொரொனா காலம், அன்பு தலைவர் சற்று சுகவீனத்தால் அதிகம் சுற்றுபயணம் செய்ய இயலாத நேரத்தில், கழக தொண்டர்களின் வறுபுறுத்துதலால்
அண்ணன் துரை வைகோ அவர்கள் கழகம் சம்பந்தமாக தீவிரமாக களமாடிக்கொண்டிருந்தார். நாம் ஒமானில் இருப்பதால் கழக அனைத்து உள் விடயங்களையும் அறிவதில்லை. நமது பணி கழகத்திற்கு எதாவது செய்ய முடியுமா என எண்ணுவதால் மற்றதை சிந்திப்பதில்லை. ஆகையால் 2021 தோப்பில் கூடுகை, கூட்டங்களில் வராதது என்பதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்தான் அண்ணன் நாகராஜ் அவர்கள் அவரது சொந்த பணி அலுவலகத்தை, மதிமுக மாவட்ட அலுவலகமாக மாற்றி திறப்புவிழா நடத்தினார்.

நமக்கு அப்போது பொறிதட்டியது, நமது தொழிற்சங்கம் பல தடைகளை தாண்டி வெற்றி கண்டுவிட்டோமே, அப்புறம் எதற்கு இவரது அலுவலகம் கழக மாவட்ட அலுவலகமாக திறக்கப்படுகிறது என நினைத்தாலும் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்துதான் தெரிந்தது தொழிற்சங்க கட்டடத்தையே துரைசாமி அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்து அவருக்கானதான மாற்றிக்கொண்டார் என்பது.

தொழிற்சங்கம் அவர் பெயருக்கு ஏன் மாறியது என்றால் அதற்கு அவர்தான் பொதுச்செயலாளர். தலைவர் வைகோ அவர்கள்தான் இருந்திருக்கணும், ஆனால் தலைவர் வைகோ அவர்கள் அண்ணா காலத்து பொதுக்குழு உறுப்பினர், நமக்கு மூத்தவர், அவர் சொந்தமாக சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் நிற்காமல் இருப்பவர் என்றெல்லாம் புழகாரம் சூட்டி அவரே பொதுச்செயலாளராக இருக்கட்டும் என்று அவரை மகுடம் சூட்டி அழகு பார்த்தார். அப்போது பொதுச்செயலாளார் பெயரில்தான் தொழிற்சங்கம் இருக்கும். அவருக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது. தலைவர் அவரை அண்ணனென்று சொல்லி அழகுபார்த்தார், அதற்கு கைமாறுதான் பெரியவர் செய்தது தன் பெயரில் தொழிற்சங்கத்தை மாற்றி தனது சொத்தாக மாற்றிக்கொண்டது.

அன்று ஓர்நாள் 2021 ல் கூடிய தோப்பு கூடுகையே கூட்டணி வேண்டாமென்று நாடகமாடி அன்றே திமுகவில் ஐக்கியமாகிவிடலாம் என்ற துரோக கனவுதான். ஆனால் காலம் அதற்கு கை கொடுக்காமல் கூட்டணி உருவானது. கூட்டணி தலைவர்கள் கூடுபாயகூடாது என்ற புரிதலால் அவர்கள் அங்கு செல்ல மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. இவ்வளவும் தெரிந்தும் தலைவர் வைகோ அவர்கள் உங்களை அருகிலே வைத்திருந்தார். நீங்களும் தெரியாதது போல சில கூட்டங்களில் கலந்துகொண்டு ஒன்றும் நடக்காதது போல காட்டிக்கொண்டீர்கள். தொழிற்சங்கத்தையும் அபகரிதுக்கொண்டீர்கள்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் துரை வைகோவையும் என்னை போன்ற தொண்டர்கள் கோவில்பட்டி வரவேற்பு தொடங்கி சென்னை தாயகம் வரை பாதுகாத்து அழைத்து வந்து பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வைத்து பொறுப்பையும் ஏற்க கொடுத்துவிட்டார்கள்.

தொழிற்சங்கம் பிரச்சினை கிளம்பிவிட கூடாது, பூதாகாரமாகிவிட கூடாது என்று அதை மறைக்க, அண்ணன் துரை வைகோ வரவு கட்சிக்கு உகந்ததல்ல. ஆகவே ஒரு சிலரை வெளியேற வைத்து கழகத்தில் சல்லி சறுக்கலை ஏற்படுத்தி, துரை வைகோ வருகையால் தொண்டர்கள் மன சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது போன்ற அவதூறுகளை அள்ளி எறிந்து அண்ணன் துரை வைகோவை காரணம் காட்டி கழக கூட்டங்களுக்கு பங்கெடுக்காமல் இருந்தீர்கள்.

தொழிற்சங்கத்தை விடமாட்டார்கள் எப்படியாவது மதிமுக பெற்றுவிடும், தன்னிடமிருந்து போய்விடும் என்ற பதட்டத்தில் திமுகவுடன் சேரவேண்டு என்று போகிற போக்கில் சொல்லி இன்று ஒரு கடிதம் மூலம் இப்போது கழகத்திற்கு ஊறு விளைவிக்க பார்க்கிறீர்கள். இதற்கு ஒத்திகை பார்க்கவே சில தினம் முன்பாக தினமலம் பத்திரிகை மூலம் மதிமுகவிலிருந்து ஒரு தனி கட்சி உருவாகபோகிறது என்று அவதூறை அள்ளி வீசியிருக்கிறீர்கள் என உணர முடிகிறது.

உங்கள் துரோகம் பலிக்காது. உங்கள் மீதுள்ள எங்கள் மரியாதை இன்றோடு காலாவதியாகிவிட்டது.

மதிமுக தனித்தன்மையோடு இயங்கும். உங்களை போன்றவர்கள் இருந்ததாலே வெற்றிக்கனிகளை அறுவடை செய்யாமல் போயிற்று.

ஆனால் நீங்கள் சொன்ன அந்த சின்ன பையன் தலைமை கழக செயலாளார் ஆன பிறகுதான் உங்கள் இடையூறுகளை எல்லாம் தகர்த்து 4 MLA, 1 MP, ஒரு ஒன்றியம், ஒரு துணை மேயர், பல பஞ்சாயத்துகள் என மதிமுகவை மகுடம் சூட வைத்திருக்கிறார். மதிமுக இன்னும் பல அதிகாரங்களை பெறும். தலைவர் வைகோ அவர்கள் அதற்கான வியூகங்களை வகுப்பார். அண்ணன் துரைவைகோ அதை செயல்படுத்துவார். மதிமுக மீண்டும் மணி மகுடம் சூடும்.

முன்பு ஒருவர் அடுக்கு மொழியும் அழகு தமிழும் பேசி தொண்டர்களால் சொந்த வீடும் பெற்றவர் சொல்வார், மதிமுக எங்கு இருக்கு என்று கேட்பர்களுக்கு சொல்லுங்கள் லண்டன், நார்வே, கனடா என்று.... இன்று அதை போல பல நாடுகளில் ஒமான், அமீரகம், குவைத், சவுதி, கத்தார், சிங்கை என்று தலைவர் வைகோ அவர்களின் கண்மணிகள் கழக துணை நிலை அமைப்பான தமிழர் மறுமலர்ச்சி பேரவையையை கட்டமைத்து அயலகத்திலே தமிழர்களுக்காக கடமையாற்றிக்கொண்டிருக்கிறோம்.

நேற்றுதான் கழக 30 ஆம் ஆண்டு உதயத் திருவிழாவுக்காக ஒமான் கழகம் சார்பில் கொடுத்திருந்த வாழ்த்து செய்தி மே 5 பதிப்பாக சங்கொலியில் பிரசுரம் ஆகியிருந்தது. முதல் இரண்டு பக்கம் தலைவர் கழக கண்மணிகளுக்கு கடிதம், கடைசி பக்கம் ஒமான் வாழ்த்து செய்தி, அதில் உதய திருநாள் வாழ்த்தும், 5 ஆம் அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

கழக கண்மணிகள் அயலகத்தில் இருந்தாலும் இயன்றளவு கழகத்தை பற்றி நினைக்கிறோம். நீங்கள் கடந்த 3 வருடங்களாக கழகத்திற்கு பணியாற்றியது என்ன? மேடையில் இடம் கிடைத்தால் பெரிய தலைவர் என்று நினைத்துக்கொள்வதா?

நீங்கள் அன்பு தலைவர் வைகோ அவர்களுடன் இருந்ததால்தானே உங்களுக்கு மதிப்பு.... இல்லையென்றால் உங்களை யாரறிவார்? ஒமானிலிருக்கும் என்னை யாரறிவார்?
வைகோதானே பிராண்ட்.
அந்த பிராண்ட் இல்லையென்றால் சந்தையில் நீங்கள் விலைபெறவே மாட்டீர்கள் என்பதை அருகிலிருந்தும் நீங்கள் அறியாமல் போனதை எண்ணி வேதனை படுகிறேன்.

தலைவர் வைகோ அவர்கள் மேல் அவதூறிகளை வீசி சென்றவர்கள் யாரையாவது மக்கள் அறிவார்களா? அவர்கள் நிலை என்ன? உங்கள் நிலையும் அவர்களை போல ஆகிறதே என்றே கவலை கொள்கிறேன்.

இப்போது சொல்கிறோம், கழக அமைப்பு தேர்தல்களால் கழக கட்டமைப்பு இன்னும் வேரூன்றி வருகிறது. அமைப்பு தேர்தல்கள் சில இடங்களில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. முடிந்ததும், பொதுக்குழு. அந்த பொதுக்குழு யாருக்கெல்லாம் அறுதியிட்டு இறுதி உரை எழுத போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.... அதைகூட தலைவர் வைகோ அவர்கள் பொறுமைகாப்பது அவரது மனிதாபிமானத்தையும், அண்ணா காலத்து எஞ்சியவர் என்பதுமானதாகும் என்றே நான் எண்ணுகிறேன்.

மதிமுக வலுபெறுவதை பார்க்கதான் போகிறீர்கள். தலைவர் வைகோ அவர்களுடன் அண்ணன் துரை வைகோ அவர்கள் கழக கண்மணிகளை உயர் நிலைய அடைய செய்யதான் போகிறார்கள்.

சமரசமில்லா மக்கள் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது.

நீங்கள்தான், இருக்கமாட்டோமே என்று, ஆற்றாமையால் துடிக்காதீர்கள். உங்களுக்கான நிலையை நீங்களே உருவாக்கிக்கொண்டீர்கள். ஆகவே நீங்களே ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.


கழக பணியில்,
மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
துணை நிலை அமைப்பு - மதிமுக
29-04-2023