Saturday, December 4, 2021

போராட்ட கள வீரன் தம்பி தமிழருண் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

உங்கள் தந்தையார் மறைந்த செய்தி நேற்று (03-12-2021) கேட்டு  துயருற்றேன். அதற்கு முந்தைய நாளில்தான் அவர் உடல் நலன் பற்றி பேசிக்கொண்டது என் மனதை வாட்டிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் அவர் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. தந்தை என்பவர் வெறுமனே இருந்தாலே நமக்கு பெரும் பலம் என்பதை அறிவேன். அவர் இல்லா உலகு நாம் தனிமை படுத்தப்பட்ட ஆடுகள்‌போல மேய்ப்பன் இல்லாமல் இருப்பது துர்பாக்கியம்தான். ஆனாலும் நல்ல மேய்ப்பன் அண்டையில் இருந்த ஆடுகளாக நம்மை தற்காத்து குடும்பத்தையும் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதை உங்கள் தம்பியின் பலத்துடன் இணைந்தே பலப்படுங்கள்.

தந்தை இல்லா சோகம் நம்மை‌ போன்றவர்கள் அனுபவிப்பது காலம் தரும் அனுபவங்களே...

தளராமல் முன்னேறுங்கள். விடா முயற்சியும், கடின உழைப்பும் உங்கள் வாழ்வை வசப்படுத்தட்டும்.

 தமிழீழம் சார்ந்த பதிவுகளால் எனது முகநூல் முடக்கப்பட்டதால் ஆறுதல் பதிவு கூட‌ செய்ய‌ இயலாத சூழல். தமிழீழ விடுதலை போராளிகளை போல நாமும்‌ போராடுவோம்.

தந்தையாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.


தம்பி தமிழருண் துயரில் பங்கெடுக்கும் சகோதரன்,

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக
04-12-2021

Thursday, November 11, 2021

அங்கன்வாடி நில‌ அளவீடுக்கு வட்டாட்சியரிடம் மனு!

கொடுப்பைக்குழியில் சர்வே எண் 520/2 ல் 50 ஆண்டுகளாக இயங்கி வந்த அங்கன்வாடி மையம் (பாலர் பள்ளி) புதிய கட்டடத்திற்கு நில அளவீடு வேண்டி கல்குளம் துணை வட்டாட்சியரிடம்‌ (நிலம்) கொடுப்பைக்குழி ஊர்மக்கள் சார்பாக, குருந்தன்கோடு ஊராட்சி 12 ஆவது வார்டு உறுப்பினர் திரு.N.சுதாகர், காந்திஜி இளைஞர் மன்ற தலைவர் திரு.P.செல்லதுரை, உப தலைவர் J.கஜில், செயலாளர் திரு.N.ஜாண் பீட்டர், தகவல் தொடர்பு செயலாளர் Er.KD.மைக்கேல் செல்வ குமார், திரு.துரை ஆகியோர் இன்று 11-11-2021 மனு கொடுத்தனர். 

குருந்தன்கோடு ஒன்றிய‌ மேநாள் சேர்மன் திரு.K.T.உதயம் அவர்கள் துணை வட்டாட்சியர் அவர்களிடத்தில் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி அங்கன்வாடி மற்றும் மாதர் சங்க நில‌ அளவுகளை எங்களுடன் வட்டாட்சியருக்கு விளக்கி கூறி, துணை வட்டாட்சியரே, நிலத்தின் பழைய சான்றிதள்கள் எடுக்க  பதிவாளருக்கு  கடிதம் எழுத கேட்டு பெற்று தந்தார்.

கல்குளம் வட்டாட்சியர் கொடுத்த கடிதத்தை இரணியல் சார் பதிவாளரிடம் கையளித்து நில அளவீடு பற்றி விளக்கி கூறிய போது கடிதம் பார்த்து விட்டு ஆவன செய்கிறேன்‌ என உறுதியளித்துள்ளார்.

ஆகவே வேறு சிக்கல்கள் புதிதாக இல்லாமல் இருந்தால், விரைவில் நில அளவீடு இருக்கலாம் என எதிர் பார்க்கிறோம்.

மைக்கேல் செல்வ குமார்
கொடுப்பைக்குழி                       
தேதி : 11-11-2021

Tuesday, November 9, 2021

கொடுப்பைக்குழி அங்கன்வாடி நில அளவீடு வேண்டி‌ மனு!

குருந்தன்கோடு‌ ஊராட்சி கொடுப்பைக்குழியில் 
சர்வே எண் 520/2 ல் வடக்கு மூலையில் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் (பாலர் பள்ளி) செயல்பட்டு வந்தது. 2017 ஓகி புயலால் அங்கன்வாடி முழுதும் சேதமடைந்ததால்  01-10-2019 ல் இடிக்கப்பட்டு (பாலர் பள்ளி) தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 

ஆகவே புதிதாக கட்டடம் கட்ட சர்வே எண் 520/2 அளவீட்டின் படி, அங்கன்வாடி மற்றும் மாதர் சங்கத்திற்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அளந்து தருமாறு இன்று 09-11-2021 காலையில் குருந்தன்கோடு ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் குருந்தன்கோடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுப்பைக்குழி ஊர் மக்கள், மற்றும் காந்திஜி இளைஞர் மன்றம் சார்பாக  மனு கையளித்தோம். 

கொடுப்பைக்குழி                       
தேதி : 09-11-2021

Saturday, November 6, 2021


via IFTTT

via IFTTT

மது ஒழிப்பு போராளி அன்னை மாரியம்மாளுக்கு புகழஞ்சலி!

விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அன்னமிட்ட, மது ஒழிப்புக்கு உண்ணாவிரதமிருந்து மதுக்கடையை மூடிய  வீரத்தாய் அன்னை மாரியம்மாளின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் குமரி மாவட்ட மதிமுகவினரால் இன்று 6-11-2021 மாலை 5.30 மணி‌ அளவில் அனுசரிக்கப்பட்டது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் அடியேனும் புகழஞ்சலி செலுத்தினேன்.

மைக்கேல்‌ செல்வ குமார்
06-11-2021