ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து தேனியில் அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் மொட்டை போட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டுக்கொண்டார். இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அவரது பெயர் வேல்முருகன். இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று இத்தனை நாளாக விரதம் இருந்த நேரு சிலை அருகில் மொட்டை போட்டு தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். வேல்முருகனின் விரதம் இதோடு முடியவில்லையாம். பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதா பிறந்த நாளில், மிக அதிக எடையுள்ள வாகனத்தை தன்மீது ஏற்றி சாதனை புரிய உள்ளாராம்.
இப்படிபட்ட அரசு அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும். ஆளூம் கட்சி ஆதரவு ஆட்கள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், எந்த சட்டத்தையும் மீறலாம் என்ற மனப்பான்மை அதிமுகவினரிடையே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே அராஜக ஆட்சியை அதிமுக கட்டவிழ்த்துள்ளது மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக போலீஸ் அதிகாரி சீருடையோடு பணியிலிருக்கும்போதே சட்டத்தை மீறியுள்ளது அதிமுக அரசின் அடாவடியை காட்டியுள்ளது. இதற்கு மத்திய புலனாய்வு துறையானது ஆய்வு செய்து அந்த காவலரை தேச துரோக வழக்கில் கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்.
No comments:
Post a Comment