குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில்
உள்ள மதுக்கடை தேவாலயங்கள், கோவிலகள்
மற்றும் பள்ளிகூடங்களுக்கு அருகில் அமைந்திருக்கிறது. இதை அகற்ற கோரி பல கட்டங்களாக
போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனர் ஊர் பொதுமக்கள். ஆனால் அகற்றபடாமலே இருந்தன. இதனால்
ஒரு மாதத்திற்கு முன்னரும் மதுக்கடைகயை அகற்ற காந்தியவாதி சசிபெருமாள் முன்னிலையில்
போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ஒரு மாதத்திற்கும் மதுக்கடையை மாற்றிவிடுவோம் என
காவல்துறையினர் வாக்கு கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மதுக்கடை
அகற்றபடாமல் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவே இருந்து வந்தது.
ஒரு மாதகால அவகாசம் கொடுத்தும் மதுக்கடையை
அகற்றாத அரசை கண்டித்து, காந்தியவாதி சசிபெருமாள் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த
போராட்டத்தில் சசிபெருமாள் மிரட்டல் விடும் விதமாக அலைபேசி கோபுரத்தில் ஏறினார். மதுக்கடையை
மூட வலியுறுத்தி போராடினார். இந்த மதுவிலக்கு
போராட்டத்தில் நாலு மணி நேரமாக
அலைபேசி கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் தமிழக காவல்துறை காந்தியவாதி
சசிபெருமாளை கீழே இறங்க நடவடிக்கை
எடுக்காமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
நடு வெயிலில் நான்கு மணி நேரத்திற்கு மேல் 200 அடி உயரத்திற்கும் மேலுள்ள அலைபேசி கோபுரத்தில்
போராடியதால் சிறு களைப்பாக இருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் கடைசியில்
அவரை கீழே இறக்க முயன்று, அவரது
உடலில் கயிறு கட்டி, வயிறு
பகுதி நெஞ்சு பகுதிகளில் சுற்றி கீழே இறக்கியுள்ளனர். கீழிறக்கும்போது மயக்க நிலையிலே இருந்துள்ளார்
சசிபெருமாள். அதனால் பொதுமக்களை அவரின் பக்கத்திலே காவல்துறை அனுமதிக்கவில்லை. உடனே
மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். பின்னர் சற்று நேரம் கழித்து சசிபெருமாள்
இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இது தமிழக
மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சசிபெருமாள் சோர்வாக இருந்ததாலும்,
மேலும் அவரை கயிறு மூலம் கட்டி இறக்கியதால், கயிறு இறுகியதினாலும் அவர் இறந்திருக்கலாம்
என பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் அவரின் உடலில் ரத்தம் இருந்ததாலும்,
அந்த ரத்தம் அவரின் மேலாடை முழுதும் பரவியதாலும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சசிபெருமாள் அவர்கள் அலைபேசி கோபுரத்தில்
ஏறியவுடனே, கடமைக்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் சசிபெருமாளை கீழிறக்காமல் நின்றுள்ளனர்
காவல்துறையினர். முதலிலே போலீசார் அவரை கீழ் இறக்கியிருந்தால் அவர் நிச்சயமாக காப்பாற்றப்பட்டிருப்பார்.
காவல்துறை அராஜக போக்கை கடைபிடித்து அவரின் உயிரை காப்பாற்ற தவறியிருக்கிறது. மேலும்
அவரின் உடலில் எவ்வாறு இவ்வளவு ரத்தம் வந்தது என்பதை காவல்துறையும் தமிழக அரசும் மக்களுக்கு
தெளிவாக விளக்கவேண்டும்.
இறந்த சசிபெருமாள் அவர்களின் உடல் ஆசாரிப்பள்ளம்
கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலே வைக்கப்பட்டிருக்கிறது. மதிமுக பொதுசெயலாளர்
வைகோ அவர்கள் நேற்று மாலை பார்வையிட்டு போஸ்ட்மார்ட்டம் நடைபெற இருந்ததை தடுத்து நிறுத்தி,
சசிபெருமாள் மகன் வந்த பின்னர் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
சசிபெருமாள் மகன் மற்றும் குடும்பத்தினர்
சசிபெருமாள் உடலை வாங்க மறுத்தனர். தமிழக அரசு மதுகடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கும்
வரை சசிபெருமாள் அவர்களின் உடலை பெற்றுகொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்துவிட்டனர். இதற்கு
குமரி மாவட்ட மக்கள் அனைவருமே முழு ஆதரவு தந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தமிழக அரசானது மதுவிலக்கிற்காக பல ஆண்டுகளாக
போராடி வருகிற காந்தியவாதி சசிபெருமாளின் உயிரை காக்க தவறிய தமிழக அரசுக்கு கடுமையான
கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சசிபெருமாள் அவர்களின் இறப்பின் மர்மத்தை
விளக்க, பணியில் இருக்கும் நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தி, குற்றங்களை கண்டுபிடிக்கவேண்டுமெனவும்
வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
மதுவிலக்கிறகாக போராடிய சசிபெருமாள் அவர்கள்
மதுவிலக்கு போராட்டக்களத்திலே உயிரைவிட்டார். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
மேலும் அன்னாரது ஆன்மா இறவனுடைய திருவருளில் சேரவும் வேண்டுகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்