கன்னியாகுமரி
மாவட்டத்தின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிஎஸ்என்எல் சார்பில் கம்பியில்லா
இணைய (wifi) வசதி செய்யப்படவுள்ளது. மேலும் கன்னியாகுமரி விவேகானந்த
கேந்திரா, காந்தி மண்டபம், நாகர்கோவில் பேருந்து நிலையம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்ளில் விரைவில் கம்பியில்லா
இணைய வசதி (wifi) வசதி செய்யப்படும் எனவும் தற்போதைய தொழில்நுட்பத்துடன் கூடிய தொலை தொடர்பு இயந்திரங்களை மாவட்டத்தில் உடனடியாக பொருத்தி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளது.
மேலும் குளச்சல், கன்னியாகுமரி, குலசேகரம், குழித்துறை, நாகர்கோவில், தக்கலை ஆகிய பி.எஸ்.என்.எல் எக்சேஞ்களில் பழைய உபகரணங்களை மாற்றி புதிய தலைமுறைகளுக்கான (3g, 4g)
உபகரணங்களை பொருத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும்.
இத்தகைய
நற்பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கும் மத்திய போக்குவரத்து,
நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, இத்தகைய மக்கள் பயன்பெறும் பணிகளை
வேகமாக செய்ய BSNL நிறுவனத்திற்கு அழுத்தம் தந்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக
கொண்டுவருவதால் குமரி மக்கள் விலையில்லா இணையதள வசதியை பெற்று தொடர்புகளுக்கு
வசதியை ஏற்படுத்தி கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்.
No comments:
Post a Comment