Wednesday, April 13, 2016

கருப்பு ஐயா அவர்களுக்கு உதித்த திருநாள் வாழ்த்துக்கள்!

இணையத்தில் இயன்ற அளவு நல்ல செய்திகளை பரப்புவதில் வல்லவர்.

நண்பர்களை ஒருங்கிணைத்து உபசரிப்பதில் உன்னதமானவர்.

கழகத்தின் கடைத் தொண்டனாய் கால் கடுக்க களப்பணியாற்றுபவர்.

பிணி தீர்க்கும் உட்பொருட்களை உவகையோடு கொடுப்பவர்.

அன்பிற்கு ஆழமான அர்த்தத்தை தன்னகத்தே சிறப்பாக கொண்டவர்.

சிறியவரையும், சிரிப்புடனே கவர்ந்திழுக்கும் காந்த குணமுடையவர்.

பார் போற்றி, புகழ் பெற, பல கோடி ஆண்டுகள் நீடூடி நீர் வாழ,

புன்னகை பூத்துக் குலுங்கும் காலை வேளையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்.

Tuesday, April 12, 2016

புரட்சி புயலின் கரும்புலிகள் தளபதி முத்தையா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்து!

தனது இளமை பருவம் தொட்டே வைகோ என்ற மாமனிதனை 30 வருடத்திற்கும் மேலாக பக்கத்தில் இருந்து பழகிய சகோதரர் மறுகால்குறிச்சி முத்தையா அவர்கள். 

தமிழின முதல்வர் என்று அன்போடு அழைக்கப்படும் வைகோ அவர்கள் உருவாக்கிய கரும்புலிகள் படை (தொண்டர் படை) யில் தளபதியாக வலம் வருகிறார். எதிரிகள் வைகோ அவர்களை அண்டாதவாறு போர் புரியும் விசுவாசத்திற்கு மரு உருவமானவர்.

எத்தனை தியாகங்களை செய்தாலும், தன் பெயர் வரவேண்டுமென்று எள்ளளவும் தன் கற்பனையில் கூட நினைத்து பார்க்காத கருப்பு மாணிக்கம். தொண்டர்களை அரவணைத்து செல்லும் ஆற்றல். 

கழக கண்மணிகளை எந்நாளும் நினைவில் வைத்திருக்கும் பேராற்றல் படைத்த அறிவி ஜீவி அண்ணன் மறுகால் குறிச்சி முத்தையா அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

பாசத்துடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, April 8, 2016

கழகத்தை உயிர் மூச்சாக கருதும் தொண்டனின் மதிமுக கொடி வண்ணம், பூசிய வீட்டின் சுவரை மறைப்பதா? பாசிச ஜெயலலிதாவின் காவல்துறைக்கு ஓமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனம்!

மதிமுக என்னும் பேரியக்கம் தொடங்கும் முன்பே, தலைவரின் வீர உரைகளாலும், செயல்களாலும் ஈர்க்கப்பட்டு தமிழின முதல்வராக போற்றப்படும் வைகோ அவர்களின்  கொள்கைகளை பின்பற்றியும், கழகத்தின் கண்மணிகளுடன் கழக தொடக்கம் முதல் இன்று வரை உறுதியோடு கழகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், ஓமன் மதிமுக இணையதள அணியின் தலைமை உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீரமங்கலம் ஊராட்சியின், முள்ளியான் வயல் என்னும் கிராமத்தை சார்ந்த ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது சொந்த ஊரில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். கடுமையான வறுமையின் மத்தியிலும் கழகத்தின் மேலுள்ள காதலால் கழகத்திற்காக ஆற்றும் பணிகளை அவர் நிறுத்தி வைக்காமல், தன்னாலான பணிகளை உலக மக்களிடத்தில் உணர்ச்சிபூர்வமாக எடுத்து செல்கிறார்.

ஜகுபர் அலி அவர்கள் வைகோ என்ற மனிதனின் கொள்கை பிடிப்பால் வைகோ அவர்களை தீவிரமாக உள்வாங்கியதால், தன்னுடைய வீட்டு சுவர், கதவு மற்றும் ஜன்னல் ஆகிய அனைத்தையும் மதிமுக கொடி தாங்கிய சிகப்பு கருப்பு சிகப்பாக மாற்றியிருந்தார்.

அது மட்டுமலாமல், வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்த வைத்த வாதங்களால், தன்னை மகனாக கருதிய வாஜ்பாய் அவர்களிடத்திலும் பேசி குவைத் நாட்டின் தலால் ஆஸ்மின் என்ற பெண்ணை, ஆந்திர காதர் பாட்சாவுடன் வாழ அனுமதி வாங்கி கொடுத்து மனிநேயத்தால், அந்த பெண்ணின் பெயரையே தனது மூத்த மகளுக்கு (10 வயது இப்போது) பெயராக சூட்டி அழகு பார்த்தார் ஜகுபர் அலி அவர்கள். மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் அனைவருக்குமே கழக கொடி வண்ணத்தினாலான உடையை வாங்கி கொடுத்து ஆனந்தமடைந்தார்.

கழக கொடி வண்ணம் வீட்டை அலங்கரித்திருந்தாலும், வீட்டின் கூரைக்கு மேல் பகுதியிலும் மதிமுக கொடி பறக்க வேண்டுமென்று எண்ணி மதிமுக கொடியை வீட்டில் மேல் மின் இணைப்பு தாங்கி செல்லும் கம்பத்திலே பட்டொளி வீசி பறக்கவிட்டார்.

இதையறிந்த ஜெயலலிதாவின் காவல் துறை 3 வார காலத்திற்கு முன் ஜகுபர் அலி அவர்களின் வீட்டிற்கு வந்து கொடியை கழற்ற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஜகுபர் அலி கொடியை கழற்ற முடியாது, கொடி என்னுடைய வீட்டில்தான் பறக்கிறது. பொது வெளியில் பறக்கவில்லை. இன்று சாயங்காலத்திற்குள் எங்கள் கூட்டணியிலுள்ள 5 கட்சிகளின் கொடியையும் கட்டுவேன் என்று சவால் விட்டு சாயங்காலத்திற்குள் வீட்டின் மேல் 5 கட்சிகளின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.

அதன் பின்னர் எப்போதும் அவர் வீட்டிற்கு தாலுகா அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகளும் வந்து கொடியை கழற்ற மிரட்டியபடியே இருந்துள்ளனர். சுவரிலோ, கதவிலோ, நீங்கள் உடுத்தும் உடையிலோ கட்சி சின்னம் இருக்க கூடாது என்று பேசி சென்றுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர் என்னுடைய பிள்ளைகள் உடையிலும் மதிமுக கொடிதான் இருக்கிறது எப்படி அகற்ற முடியும் என பேசியிருக்கிறார்.

இப்படி பரபரப்பான சூழலில் ஊர் பெரியவர்கள் சொல்லியதால், அவர்கள் மேலுள்ள மரியாதையால் வீட்டின் மேல் பறக்கவிட்ட கொடியை இறக்கினார்.

ஆனாலும் 5 நாட்களுக்கு முன்னர் தாலுகா அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களின், வீட்டிற்கு வந்து அவருடைய வீட்டின் சுவரில் வரைந்துள்ள மதிமுக கொடியின் நடுவிலுள்ள கருப்பு வண்ணத்தை செய்தி தாள்கள் கொண்டு மறைத்துள்ளனர். இதையும் பொறுத்துக் கொண்டார் ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

இந்நிலையில், நேற்று 07-04-2016 இரவு 9.30 மணி அளவில் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் பயணித்த போது ஒரு காவலர் அவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தார். அவரும் காவலர் சாதாரணமாக அமருகிறார் என்று நினைக்க ஜகுபர் அலி அவர்கள் இரவு பயணத்தால் சிறுது கண் அயர அருகில் இருந்த காவலர் ஜகுபர் அலி அவர்களின் கையில் விலங்கு மாட்டியிருக்கிறார். இந்த விலங்கு மாட்டிய கையோடுதான் துணிவுடன் காவலருடன் சேர்த்து செல்பி எடுத்தி அனுப்பி யிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்டுதான் அருகில் அமர்ந்து கைது செய்திருக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது. உடனே ஜகுபர் அலி அவர்களும் ஏன், எதற்காக கைது செய்துள்ளீர்கள் என்று கேட்க, நீ கட்சி கொடி வைத்து பிரச்சினை செய்கிறாய் என்று சொல்லி புதுக்கோட்டை டவுண் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போதும் ஜகுபர் அலி அவர்கள் என் பிள்ளைகளின் உடையிலும் மதிமுக கொடி இருக்கும், வீட்டு சுவரிலும் இருக்கும். எங்க மனதிலும் நிலைத்திருக்கும் என்று உறுதிபட கூறிவிட்டு, இது குற்றமென்றால் FIR பதிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களிடம், இந்த பிரச்சினை முதலமைச்சர் தனி பிரிவிற்கு சென்றுள்ளது (CM cell) என்று கூறியுள்ளனர். மேலும் இன்று காலை அவரை விடுவித்துள்ளனர்.

இதனால் காவல்துறை ஜனநாயகத்தை அடக்கி ஒடுக்க நினைத்து ஜகுபர் அலி அவர்களை கொடுமை செய்கிறது. இதை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வன்மையான கண்டிக்கிறோம். மேலும் இதே போல அடக்குமுறையில் ஈடுபடகூடாது எனவும் ஜெயலலிதாவின் பாசிச அரசின் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அடக்கி ஆள நினைப்பதால் அடங்கி விடுவார்கள் என நினைத்தால், இன்னும் வேகமாக மதிமுகவும், தொண்டர்களும் வீறுகொண்டெளுவோம் எனவும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

ஜகுபர் அலி அவர்களின் சொந்த வீட்டில், சொந்த செலவில் வரைந்திருக்கும் மதிமுக கொடியை மறைக்கும் ஜெயலலிதாவில் காவல்துறை, ஜெயலலிதாவின் படம் அடங்கிய, உணவகம், மருந்துகடை, கட்டடங்கள், காணொலி காட்சிகள் அனைத்திலும் ஜெயலலிதாவின் படங்களை அகற்றாதது ஏன்?

ஜனனாயகத்திற்கு ஜெயலலிதாவில் ஆட்சியில் இடமில்லாமல் போனதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆணவ போக்கையே காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை பிரவேசம். ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் மயம். இது தவிர்க்கப் படவேண்டும். இதற்கு உறுதுணையாக,  கைக்கூலியாக இருக்கும் காவல்துறையயும், ஜெயலலிதா அரசையும் கண்டிக்கிறோம். மே 16 ல் இதற்கு முடிவு கட்டப்படும்.

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி