Thursday, September 22, 2016

வையகம் போற்றும் தமிழின தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தலைவர் விரும்பாத பிறந்த நாள் கொண்டாட்டங்களை செப்டம்பர் 22 ல் அவருடைய பிறந்த நாளாக இந்த வருடத்திலிருந்து கொண்டாட திட்டம். எனவே இந்த வருடத்திலிருந்து தலைவர் வைகோ அவர்களுக்கு அண்ணா, பெரியார் பிறந்த மாதத்திலே பிறந்த நாள் கொண்டாட்டம் இருக்கும். எனவே கழக கண்மணிகள் அனைவரும் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துதலை தெரிவியுங்கள்.


சுய நலத்திற்காக தமிழினத்தை அழித்த தலைவர்களும், சுய நலத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தலைவர்களும் தங்கள் பிறந்த நாளை மாட மாளிகையில் தோரணங்கள், மேள தாளங்கள் முழங்க, ரோட்டை அடைத்து, போக்குவரத்தை மறித்து, மக்களுக்கு இடைஞ்சலை கொடுக்கிற வேளையி, தனது பிறந்த நாளையே அறியாமல், மக்களுக்கான போராட்ட வாழ்விலே ஈடுபடுத்தி கொண்டு 52 ஆண்டுகள் பொது வாழ்வில் முடித்து அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.

சிலைகள் தன்னை அபிசேகம் பண்ண கேட்பதில்லை. மனிதர்கள்தான் சிலைக்கு தானாக அபிசேகம் பண்ண வேண்டும் என்ற விதிகளின் படி, கடவுளே வேண்டாமென ஒதுக்கினாலும் பக்தர்களின் பக்தியால் அபிசேகம் செய்வதுண்டு. அதைதான் இந்த வருடத்திலிருந்தே மதிமுக கண்மணிகள், செப்டம்பர் 22 ஆம் நாளை வைகோவின் பிறந்த நாளாக கொண்டாட இருக்கின்றனர்.

எனவே கழக கண்மணிகளே இந்த வருடம் முதல் நமக்கு செப்டம்பர் மாதம் நமக்கு திருவிழா மாதமாக கருதி கொண்டாட வேண்டும். தலைவர் வைகோவின் பிறந்த நாளை நாம் நேர்மையின் தினமாக, ஊழல் ஒழிப்பு தினமாக கூட கொண்டாடும் நாளாக கூட கொண்டாடலாம்.

தமிழின முதல்வருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Thursday, September 15, 2016

பேரறிஞர் அண்ணாவின் 108 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு!

மலைக்கோட்டையை மலைக்க செய்திட,
மணி வாசகங்கள் மகுடங்களாக சூடிட,
வெண்தாடி வேதங்களை வானுயர்த்தி
அண்ணாவின் அடிநாதங்களை ஆழ்ந்துணர்ந்து,
வைகோவின் வரிப்புலிகள் புகழ் பல பெற்றிட,
திராவிட கொள்கைகளை தினம் மகிழ்ந்து பரப்பிட,
தெவிட்டாத தேன் தமிழுடன் தமிழீழம் மலர்ந்திட
துரோக சூனியத்தை சூளுரைத்து நொறுக்கிட
கழனிக்கொரு கண்மணி கழக கொடியுடன்,
களம் காண காளையர் கரைபுரண்டோடிட
அண்ணாவின் தம்பியின் புயல்வீச்சை புசித்திட,
அரபி கடலின் அலையோசை தாயகம் கேட்டிட,
கழகமே கண்ணாக கண்மணிகள் நினைத்திட
மார்தட்டி நான் மதிமுக காரன் என்று கனைத்திட
காஞ்சி தலைவன் கொள்கை கேட்க வாரீர்!
காளரை தூக்கிவிட்டு செல்வீர்!


திராவிடத்தின் உண்மையான கையிருப்பு,
தமிழின முதல்வர் வைகோ அழைக்கிறார்!

இடம்திருச்சி உழவர் சந்தை
நாள்: 15 செப்டம்பர் 2016

மறுமலர்ச்சி மைக்கேல்

Thursday, September 8, 2016

கார்த்திகை பெயர் கொண்ட அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

அண்ணனின் அளவிலா அன்புக்கு,

ஆட்கொண்டவனில் நானும் ஓர்வனாக,

ஆசைகளை விட்டெறிந்தவர், கழகமே கண்ணாக,

உயர்வென்னும் உன்னத மேடையில் வீற்றிருக்க,

பொது வாழ்வை போற்றி பாதுகாக்க,

இயலான் மேல் உயர, இவர் வழி விட்டு விலகி கூட,

இவர் புகழ் எண்ணி பொறுக்கா வண்ணம்,

எதிரியின் அசுர முகம் வெளியில் தெரிய,

அண்ணனே அகன்ற பாதை அமைத்து,

அடுத்தவர் வாழ்வியலுக்க நீர் பாய்ச்சி வித்திட,

உம் புகழ் குலையா வண்ணம் இயற்கை உமை காக்க,

பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு சகோதரனாக.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, September 2, 2016

மலேசிய தமிழின உறவுகளுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி பாராட்டு!

ஆசியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் மாநாடு மலேசியா கோலாலம்பூரில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் கலந்துகொள்ள தமிழின படுகொலையாளன் இலங்கை முன்னாள் அதிபர் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழீழ மண்ணில் 140000 தமிழர்களை படுகொலை செய்துவிட்டு அந்த ரத்தக் கறை படிந்த மண்ணில் வாழ்ந்து தமிழினத்தையே கருவறுத்த கொடியவன், கொத்து குண்டுகளை ஐநா தடை செய்த போதும் பயன்படுத்தி சின்னஞ்சிறு பிஞ்சுகளை கொன்றவன், தமிழ் யுவதிகளை வன்புணர்ந்து அழித்த கொடியவன், தமிழர்களை அடிமைகளாக அகதிகளாக உருவாக்கிய கொடுங்கோலன் ராஜபக்சே, தமிழர்கள் வாழும் பூமியாம் மலேசியாவிற்கு வருகை தருவதை எதிர்த்து, தமிழீழம் மலர தனது போராட்டை வாழ்வை 50 ஆண்டுகளுக்கு மேலாக அற்ப்பணித்திருக்கிற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை போல நாடு கடந்தும் தமிழனாக தனது பாரிய அளவிலான பங்கை தமிழீழம் மலர செயலாற்றிக்கொண்டிருக்கின்ற பேராசிரியரும், பினாங்கு துணை முதலமைச்சருமான ராமசாமி அவர்களின் தம்பிமார்களான டேவிட் மார்சல், சதீஸ் முனியாண்டி மற்றும் பெயர் தெரியாத தமிழர்கள், உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அரசியல் கட்சி பாகுபாடு பாராமல் தமிழர் என்ற ஒருமைப்பாட்டில் ஒன்றாக இணைந்து கொடியவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னங்கால் பிடரியில் விழுந்த அடியாக பின்புறமாக தங்கும் விடுதியில் இருந்து ஓட விரட்டியுள்ளதற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழர்களான நமது உணர்வுகள் ஐநாவில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நேற்றும் இன்றும் (2016 செப் 1 & 2) நீங்கள் நடத்திய கொடியவன் ராஜபக்சேக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்களை உலகம் கவனித்திருக்கிறது. காலம் மாறும். தமிழர்கள் சுந்தந்திரமாக வாழ ஒரு நாடு கிடைத்து தமிழீழம் சொந்த மண்ணில் மலரும்.

இரிட்டீரியா, மால்டோவா, தெற்கு சூடான் வரிசையில் ஸ்காட்லாந்தும் தனி நாடாகும். அதன் அடிப்படையில் தமிழர்களின் உணர்வுகளும், அவல குரலும் உலக நாடுகளின் செவிகளில் ஆக்ரோசமாக ஒலிக்க அனைத்து நாடுகளின் உண்மையான வெளிப்படையான ஆதரவுடன் தமிழருக்கான விடுதலைக்கு உண்மையான தீர்வு தமிழீழ மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று என்று பிரசல்சில் முதல்முதலாக முழங்கினாரே தென்னாட்டு சிங்கம், நாங்கள் தமிழின முதல்வராக போற்றும் வைகோ அவர்கள் சொன்னது போல தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு ஐநாவின் கண்காணிப்பில் நடக்கும். அந்த நாள் தமிழீழம் மலர்ந்து புலிக்கொடி ஐநாவில் பட்டொளி வீசி பறக்கும்.

அது வரை நமது போராட்ட களங்களை எப்போதும் போல வலுப்படித்திக்கொண்டே இருப்போம். அனைத்து நாட்டில் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க உலக நாடுகள் கவனம் தமிழர்களின் நியாமான கோரிக்கையின் உண்மையை உணர்ந்தே தீரும். கொடியவன் கொட்டம் அடக்க தொடரட்டும் உங்கள் போராட்டம். தொப்புள் கொடி உறவுகள் எப்போதும் உங்கள் விழிகளுக்கு செவிமடுப்பவர்களாகவே இருப்போம். மலேசிய தமிழ் மண்ணில் ராஜபக்சே, மற்றும் அவனை போன்ற இனபடுகொலையாளர்கள் எப்பொழுதுமே கால் பதிக்காதவாறு தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறும் கேட்டுகொள்கிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, September 1, 2016

அரபிக் கடலின் அடிவாரத்திலிருந்து நட்பின் திருமண நல் வாழ்த்து!

சின்ன வயதிலே சிரிப்போடு வேலியெல்லாம் விளையாடி,

மட்டை பந்து விளையாட்டில் மட்டை அடி பட்டதுண்டு,

முப்பிள் மிதிவண்டி பயணம், 3 ஊர்கள் தாண்டி செல்ல,

முப்பதே நிமிடத்தில் தன் நிலம் வந்து சேர்வோம்,

உன் அப்பா வரும் வேளை உனது நிலத்தில்,

அவர் சென்றதுமே பொது நிலத்தில் நண்பர்களுடன்,

சிறு குறு பருவம் முதல் வாலிபம் வரை ஒன்றானோம்.

கால் வயிறு கஞ்சிக்கு மொழி அறியா மாகாணம்,

இளமை கால வாழ்வியலின் வசந்தங்கள் தேடி வர,

உனை கட்டியணைக்க ஒரு குஞ்சு நாடி வர,

இமை பொழுதும் விழி மூடி புன் சிரிக்க,

லோகத்தினை கண்டபடி முகம் வருடி கண்ணயர,

புது வாழ்வின் பொன் நாட்கள் புது யுகங்கள் ஆகிவிட,

மலர் கட்டில் மாளிகையில் மனம்புகுந்து விலாசம் தேடி,

பூமகளை முத்தமிட்டு அன்பினால் அகம் தழுவி,

கண்ணாடி சில்லின் இசை போல மழலைகள் மொழி கேட்டு,

இன்பமுற்று இல்லறம் காண, இந்த புது நன்னாளில்,

கடல் கடந்து சுவாசித்தாலும் ஆக்சிஜனாய் நட்பு இருப்பதால்,

மனதார வாழ்த்துகிறேன். திருமண நல் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
மைக்கேல் செல்வ குமார்