Thursday, March 3, 2022

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.

இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.

மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.03.2022

Saturday, February 26, 2022

அமீரக மதிமுக பொருளாளர் தந்தை மறைவிற்கு ஒமான் மதிமுக இரங்கல்!

அமீரக மதிமுக பொருளாளர் லெனின்‌ ஜோஸ் (+971557132040 அமீரகம், +919442947553 இந்தியா) அவர்களின் தந்தையார் திரு.S.லாசர் (74) அவர்கள் இன்று (26.02.2022) காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்கள்‌ என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன்.

தந்தை மறைவு என்பது மகனுக்கு ஈடு செய்ய இயலாதது.‌ தந்தை மறைவு குடும்ப பொறுப்பு‌ கூட்டியிருக்கிறது. 

கடைசி காலங்களில்‌ அவரை கூட இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் நிம்மதியாக இளைப்பாறுவார்.

தந்தை‌ மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்தை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக.
26-02-2022

Durai Vaiko MDMK Vaiko 

Saturday, January 1, 2022

2022 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு புதிய ஆண்டின்‌‌ தொடக்க நாளாக கொண்டாடப்படும் நாள் தான் ஜனவரி 1. இந்த ஜனவரி 1ஆம் நாளில் நாம் புத்துணர்ச்சியுடனும், புதிய உறவுகளுடன், நம் வாழ்க்கையின் கஷ்டங்களை கடந்து, முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு தேடுதலையும் முயற்சித்து, வாழ்வில் வெற்றி அடைய இந்த புதிய ஆண்டில் வாழ்த்துகளுடன், புதிய ஆண்டின் தொடக்க நாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
01-01-2022
ஒமான்

Wednesday, December 8, 2021

Iam Awarded as CIO 2021!

Awarded CIO 2021 in World CIO summit 2021 in AJMAN UAE.

Thanks a lot to my Bosses Sandeep Jaitly,  Ravindra Kumar Srivastava and my Friends and Family.

#ChangeX
#CIO200Awards
#CIO
#globalcioforum