Tuesday, April 28, 2015

இளைஞர்களை பாழாக்கும் குளிர் பானங்கள் உசார்!!!!

அன்பு தமிழ் உறகளே!!! 

இந்த படத்திலுள்ள குளிர் பானங்களை பாருங்கள். அதில் அடங்கியுள்ள சர்க்கரை அளவையும் பாருங்கள். இது மக்களுக்கு தீமையை விளைவிக்க கூடியது... அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாகரீகம் என்று இப்படிபட்ட குளிர் பானங்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள். இதை பற்றி விழிப்புணர்வு செய்யும் பொருட்டு, அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் இந்த படத்தை பதியுங்கள். வருங்கால நமது தலைமுறையையாவது காப்பாற்ற முயல்வோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 14, 2015

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பிறக்கும் போது அம்மா என்னும் முதல் வார்த்தையையே தமிழில்தான் பேசி தொடங்குகிறது குழந்தை. அப்படிப்பட்ட பெருமை தமிழுக்கு உண்டு. சித்திரை திரு நாளிலே தமிழர்கள் அதனை புத்தாண்டாகவும் கொண்டாடி மகிழுகின்றனர். இந்த தினத்திலே அன்பு ஓங்கவும், சமாதானம் பெருகவும், ஒற்றுமை பெருகவும் இந்த தமிழர் சித்திரை திருநாளில் சபதம் ஏற்போம். 

இந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழ சித்திரை திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, April 12, 2015

காவிரி நீரை கேட்ககூடாது என கூறிய சு.சுவாமிக்கு கண்டனம்!

ரெய்ச்சூரில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் என கூறிக்கொள்ளும் சுப்பிரமணியன் சுவாமி, காவிரி நீரை தமிழ்நாடு கேட்க கூடாது எனவும், தண்ணீரை பெற தமிழ்நாடு வேறு வழிகளை தேடவேண்டுமெனவும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் பாஜக முத்த தலைவரே இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் பேசியிருப்பது மிகுந்த வருத்தத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சுவாமியின் இந்த தமிழ் துரோக பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது. 

காவிரி நீரை பெற தினந்தோறும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் கண்மணிகள், விவசாயிகள், பொதுமக்களென போராடிக்கொண்டிருக்கும் வேளையில் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு பேசியுள்ளது தமிழர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. 

எனவே தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் மந்திரி பொன்.ராதாகிருக்ஷ்ணன் அவர்கள் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சை கண்டிக்க வெண்டுமென கேட்டுகொள்கிறேன். மேலும் அமைச்சர் காவிரி நீர் பிரச்சினையில் மேகதாது அணைய தடுக்க பிரதமரிடத்தில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 7, 2015

₹30 ல் பிளாஸ்டிக் ஆதார் அட்டை!

ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு 30 ரூபாய் கட்டணத்தில் ஏ.டி.எம் கார்டு வடிவில் ஆதார் அட்டை வழங்கும் சேவை அரசு பொது இ-சேவை மையங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அட்டை கிழியவே கிழியாது என்பதுதான் முக்கிய அம்சமாம்.நாடுமுழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 4.74 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை தண்ணீரில் விழுந்தால் கிழிந்துவிடும் அளவில்தான் உள்ளது.அதனால் ஆதார் அட்டை தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு அட்டை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.அரசு இ-சேவை மையங்கள்இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 254 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது மற்றும் அரசின் சமூக நல திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு புதிய சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏ.டி.எம் கார்டு வடிவில்"ஆதார் அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எளிது. இதற்காக யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.ரூ.30க்கு ஆதார் கார்டுஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பிரின்ட் செய்ய முடியும். விரைவில் கருவிழி படலத்தை பதிவு செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை அங்கீகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு நபர் எத்தனை அட்டைகளை வேண்டுமானாலும் தலா ரூ.30 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை" என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, April 5, 2015

ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

மனித குலத்தின் பாவங்கலை ரட்சிக்க துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னதத் திருநாள்தான், உலகெங்கும் கிறித்தவ மக்கள் போற்றிக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும்.
அன்பையும் கருணையையும், தீங்கு புரிந்தோருக்கும் நன்மை செய்யும் மனிதநேயத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து நிந்தைக்கு ஆளாகி, பிலாத்து சபையில் வேதபாரகர்களின் தூண்டுதலால் ஏற்பட்ட நிர்பந்தத்தால் தண்டனைக்கு உள்ளாகி, சிலுவையைச் சுமந்தார், சித்ரவதைக்கு ஆளானார்.

கொல்கதா எனும் கபால ஸ்தலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். சிரசிலும், கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன. தாங்கள் செய்வது அறியாமல் செய்யும் இவர்களை பிதாவே மன்னியும்! என்று கூறியவாறு உயிர் நீத்தார்.

மூன்றாம் நாள் இயேசுநாதர் உயிர்த்து எழுந்த ஞாயிற்றுக்கிழமை புனித ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. காலம் காலமாக தமிழகம் சமய நல்லிணக்கத்தைப் போற்றி வருகிறது. ஆனால் சகிப்புத்தன்மைக்கும், சமய ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் அறைகூவலும் அச்சுறுத்தலும் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில் இயேசுநாதரின் அமுத மொழிகளை நினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்!

தமிழகத்திலும், உலகம் முழுதும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்