Wednesday, January 27, 2016

கருணை நிறைந்த கடவுள் பெயரை கொண்டவருக்கு உதித்த திருநாள் வாழ்த்துக்கள்!


லிங்கம் என்ற கடவுள் பெயரை கொண்டு!

கருணையே வடிவாய் கொண்டு!

கணவன் என்ற பேறு பெற்று!

தந்தையெனும் வரம் கிடைக்க!

நண்பர்கள் என்ற வளம் கொளிக்க!

பாசமென்ற ஊற்றருவியை கொட்ட!

அன்பென்னும் ஆற்றலை அளவிலா காட்டி!

ஆட்கொண்ட நல்லு அண்ணனே!

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



பாசத்துடன் சகோதரன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, January 22, 2016

"தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் சாத்தியமே" உங்கள் பம்பரம் டிவியில்!

உங்கள் பம்பரம் டிவியில் சனிக்கிழமை 23-01-2016 இரவு 8 மணிக்கு "தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் சாத்தியமே" என்கிற தலைப்பில் விறுவிறுப்பான விவாதமேடை நிகழ்ச்சி ஒளிபரப்பபடுகிறது. காண தவறாதீர்கள்.
 
பம்பரம் டிவியை நேரலையாக www.pambaramtv.com என்ற வலை தளத்தின் மூலம் காணலாம்.
 
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, January 20, 2016

ராமநாதபுரம் ரத்தினம் சாதிக் அலி அவர்களுக்கு உதித்த திருநாள் வாழ்த்து!

பெரு வயது குணத்தவராயினும்,

இளம் வயது துடிப்புடனே,

இணையத்தில் ஈட்டி போல,

இமை பொழுதும் ஓய்வில்லாமல்,

வைகோவின் வார்த்தைகளை வல்லமைமிக்க,

வரிகளாக, வாக்கியமாக வாசிக்க வாய்பளிக்கும்,

எங்கள் இளம் போராளி, 

இனிமைக்கு சொந்த காரர்,

எலோருக்கும் உறவுக்காரர்,

கழக உடன்பிறப்புகளின் கருணை இவர்,

பகிர்ந்தளிக்கும் பக்குவமானவர்,

கழகத்தார் கருத்து கேட்க காது கொடுப்பவர்,

ஆதங்கங்களை அமைதியாக கேட்பவர்,

அன்போடு அறிவுரை கூறுபவர்,

அவர் வாழ என் வாழ்த்து அலைபேசி ஒலியிலும்,

நூறாண்டு அவர் வாழ ஊரார் கூடி வாழ்த்த,

நானும் வாழ்த்துகிறேன் நீவிர் பிறந்த நன்னாளில்,

ராமநாதபுரம் ரத்தினமாம் சாதிக் அலி அவர்களுக்கு,

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, January 18, 2016

தன்னிகரற்ற பொதுவுடமைவாதி முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

எவன் பொருட்டும் மக்கள் நலனை காக்கவே படையமைத்து வலிமை சேர்த்துள்ளோம் என்று மக்கள் நலக் கூட்டணி அமைய காரணமாகயிருந்து கூட்டணி உருவானதும், வைகோவை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க முன்னெடுத்தவருமாகிய இந்திய கம்யுனிஸ்டு தமிழ்நாடு மாநில செயலாளர், அன்பிற்குரிய ஐயா இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள்.

அலைபேசியில் அழைத்து நான் மறுமலர்ச்சி மைக்கேல், ஓமன் மதிமுக இணையதள அணியில் இருந்து பேசுகிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. என்றதும், சிரிப்புடன் நன்றி என்றார். வாழ்த்து தெரிவித்த போது அவர் அடைந்த ஆனந்தம் அளவிட இயலாது. 

எங்கள் தலைவர் வைகோவுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்து வெற்றி நடை போடுவதற்கு நன்றி ஐயா என்றேன். சரி என்று சிரித்துகொண்டே சொன்னதாய் உணர்ந்தேன். 

வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும். மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உற்சாகமாக பாடுபடுவோம். சரி என்றார் சிரிப்புடன்.

வெளிநாடுகளில் வாழும் மக்கள் நலக் கூட்டணியினர் தாயகம் திரும்புவார்கள். களப்பணியாற்றுவார்கள் என்றேன், மேலும் சிரித்துகொண்டே சரி என்றார். 

அப்படிபட்ட பெருமகனாரை வாழ்த்துவதும், அவர் சரி என்று சிரித்துகொண்டே ஏற்றுக்கொண்டதும் நெகிழ்ச்சியாகவே இருந்தது. மீண்டொருமுறை இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ என்ற ஈரெழுத்து தாங்கிய பெருமகனை தலைவனாக கொண்ட தொண்டர்கள் கடல் கடந்து வாழ்ந்திருந்தாலும் வாழ்த்து சொல்லியிருப்பார்கள். அவரின் மனம் மிகுந்த ஆனந்தத்தை அடைந்திருக்கும் என்பதை என்னுடைய உரையாடலிலே அறிந்துகொண்டேன். 

உங்கள் பணிகள் சிறக்கட்டும். மக்களிடையே மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவும், அதிமுகவும் வேண்டாமென்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படியிருக்க ஊழலற்ற, நேர்மையாளர்களை கொண்ட மக்கள் நலக் கூட்டணியை வழி நடத்துகின்ற தலைவர்களாகிய உங்களுடன் நாங்களும் பயணிப்போம் என்பதில் பெருமையே.

வரும் காலம் மக்களுக்காக ஆட்சி அமைக்க மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம். காரணமாயிருந்த முத்தரசன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, January 15, 2016

தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அதிகாலையிலேயே சூரியன் உதிக்குமுன்னே எழும்பி, குளித்து கோலமிட்டு, பானையில் வண்ணம் தீட்டி, முக்கோணவடிவில் செங்கல் வைத்து அதன் மேல் வண்ணம் தீட்டிய பானையை வைத்து, கரும்புகளை ஒன்றோடொன்று பொங்கல் பானையின் அருகில் வைத்து, பானையிலே பொங்கலிட்டு அதை இனிப்பு செய்து ஒருவருக்கொருவர் பரிமாறி அன்பு பாராட்டி, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறோம்.

அனைவரும் மகிழ்ச்சியுடனும், குடும்பம் தழைக்க ஒற்றுமையுடனும் பொங்கலி கொண்டாடி மகிழவும், வருகிற உழவர் திருநாளில் வீட்டு விலங்குகளை சுத்தம் செய்து வர்ணமிட்டு அழகு படுத்தி, அவைகள் நமக்கு செய்த உதவிகளுக்காக அவற்றை போற்றி கொண்டாடுவோம். 

வீட்டு விலங்குகளுடன் அன்றாட நம் வாழ்க்கை கலந்ததையொட்டி அவற்றை போற்றி புகழும் தினத்தை உழவர் திருநாளை கொண்டாடி மகிழ பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, January 6, 2016

ஈஸ்வரனே பெரிய சாமியாக உதித்து கழகத்தை காப்பவரே! உதித்த திரு வாழ்த்து!

கழத்திற்கே காவலனாகவும், காவலுக்கே ஈஸ்வரனாகவும் பிறந்து திருப்பூரில் திரும்பும் இடமெல்லாம், வைகோ என்னும் ஈரெழுத்தை பரப்பி, பரம்பொருளே பாராமுகத்தோடு அதிசயிக்கும் வகையில், களத்திலே நின்று போராளியாகவும், தலைவனின் கடமையை செவ்வனே செய்து தனது மாணவர் படைக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்கும் அண்ணனே!

உங்கள் பாசத்திற்கு முன்னால் எங்களால் பாசாங்கு செய்ய முடியவில்லை. பாசங்கள் அடிநாதத்திலிருந்து வருகிறதே, உங்களின் உணர்ச்சியூட்டுகின்ற வாயின் வார்த்தைகளால் இணையத்திலே உங்கள் இணக்கத்தால் ஈடில்லா இச்சையோடு உமை இசைபாட வைத்தீரே!

தம்பி என்ற வார்த்தையை ஈஸ்வரன்தான் கண்டுபிடித்தானா என்று சொல்லும் அளவிற்கு அளவிலா பாசத்தை பக்குவமாக எடுத்துரைத்து, பணிக்கிடையேயும், பல நிமிடங்கள் பயணித்த பக்குவப்பட்ட பண்பாளனே!

இன்று உங்கள் பிறந்த நாள், ஆனால் எங்களுக்கோ புது அன்பு பெருகும் நாள். புன்னைகையோடு பூ போட்டு பூலோகமே வாழ்த்தினாலும், அன்பு தம்பியின் அளவிலா பாசத்தோடு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டனாய் அவதரித்து, மாவட்ட மாணவப் பட்டாளத்தையே இரண்டாம் தளபதியாக இருந்து, கட்டி காத்து, முன்னோக்கி வீர நடைபோட்டுக் கொண்டிருக்கும், உங்கள் வாழ்வில், வளமில்லா நன்மைகளை வளமாக்கி, ஈரெழுத்து மந்திரமாம் வைகோ என்ற பெருமகனின் ஆசியோடு கழகத்தில் உயர் நிலைகளை அன்போடு வாழ்த்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, January 1, 2016

புதிய வருட பிறப்பு தினத்தில் வளம் கொளிக்க நல் வாழ்த்துக்கள்!

ஜனவரி 1 ஆம் தியதியை புத்தாண்டாக கொண்டாடி மகிழுகிறோம். புது வருடத்தில் புத்தாடை உடுத்தி புது ஆளாக வலம் வருகிறோம். கடந்த வருடம் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் எண்ணி பார்த்து இன்பமும், சில வருத்தமுமடைகிறோம்
 
வரும் காலம் புது மனதோடு, புத்துணர்ச்சி பெற்று புகழ் சேர்த்து, தமிழர்களுக்கு நற்செயல் புரிந்து மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர வைக்கும் வரை செயலாற்ற வேண்டும் என உறுதியேற்போம். புகழின் உச்சிக்கே சென்றாலும் மாற்றானையும் மதிக்க கற்றுக் கொள்வோம். நமக்கான பாதையை நாம் செம்மையாக திட்டமிட்டு தயார் செய்வோம். புது வருடத்தில் புதுமையோடு அன்பு பாராட்டி மகிழ்ச்சியோடு வாழ என் உயிர் போன்ற எம்மின தமிழ் உறவுகளுக்கும், உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்