அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவசர பிரிவில் வருத்தமான நிலையில் இருக்கிறார் என்றதும் மிகுந்த வேதனையுற்றேன். கடந்த ஓரிரு நாட்களாக இணையதள நேரலை அண்ணன் Ammapet G Karunakaran அவர்களிடம் விபரம் கேட்டறிந்தேன். ஆனால் அண்ணனுக்கு இன்றைக்கு அழைத்து விபரம் கேட்பதற்குள் அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் இயற்கையுடன் கலந்துவிட்டார் என்ற செய்தியை இன்று 28-06-2016 காலை முகநூல் திறந்த உடனே கண்டதும் அதிர்ச்சியுற்றேன்.
நேற்றைய பொழுது சிறு முன்னேற்றம் இருக்கிறது என தகவல் வந்த போது சிறு ஆசுவாசம் அடைந்தேன். நண்பர்கள் அனைவருமே இணையத்தின் மூலமாகவே தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினார்கள். ஆனாலும் இயற்கை அவரை அரவணைத்துக்கொண்டது.
அவரின் இரண்டு குழந்தைகளும் சிறு வயதிலே தந்தையை இழந்து தவிக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் கனமாகிறது. குழந்தைகளுக்கு மன தைரியமும், மனைவிக்கு ஆறுதலும் கிடைக்கட்டும்.
அண்ணனே! நீங்கள் காட்டிய பாதையிலே இணையத்தின் கழக கண்மணிகள் நாங்கள் உறுதியோடு பயணிப்போம். அண்ணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment