தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தங்களுக்கு எதிராக,சென்னை உயர்நீதி மன்றம் மேற்கொண்டுள்ள சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றார்கள்.
வழக்கறிஞர்கள் தவறுகள் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பார்கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது அவ்வாறு இருக்க,நீதிபதிகளே நேரடியாக நடவடிக்கை எடுக்கவகை செய்யும் வகையில், சென்னை உயர்நீதி மன்றம் வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1)இன் கீழ்ப் புதிய திருத்த விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக வழக்குரைஞர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கக்கூடிய வகையிலும், வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமையை பறிக்கக்கூடிய விதத்திலும் திருத்தப்பட்டு இருப்பதாக வழக்குரைஞர்கள் கருதுவது குறித்தும் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இத்தகைய சட்டம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படிப்பட்ட சட்டத்தை உயர்நீதிமனற்ம் பிறப்பித்துள்ளது என வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்ற கருத்தையும் உயர்நீதி மன்ற தலைமைநீதிபதி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
கடந்த ஒரு மாதகாலமாக வழக்குரைஞர்கள் நீதி மன்றங்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம்,ரயில் மறியல் போன்ற நேரடி போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக வழக்காடும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்களின் பிரச்சனையாக மட்டும் கருதாது,பொது மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனையாகவும் கருதி தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு சுமுகத் தீர்வுகாண முன் வரவேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment