Sunday, September 25, 2016

தமிழீழத்தில் "எழுக தமிழ்" எழுச்சி பேரணி!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் முற்றவெளியில் ‘எழுக தமிழ்‘ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் நேற்று 24-09-2016 அன்று திரண்டெழுந்தனர். தமிழ் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கின்ற சிகப்பு மஞ்சள் கொடியை ஏந்தியவாறு எழுச்சி பேரணியில் கலந்துகொண்டனர். 

தமிழர்களின் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை சிங்கள கொட்டம் அறிந்திருக்கும். அற வழியில் தொடங்கிய போராட்டம், ஆயுதமேந்த நிர்பந்தப்படுத்தப்பட்டு, மீண்டும் அனைத்து தமிழீழ மக்களாலும் அற வழியிலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழீழ புலிக்கொடி ஐநா முன்றலில் பட்டொளி வீசி பறக்கும் நாள் வரை தமிழர்களின் தாகங்கள் தணியாமல் போராட்டம் நடபெற்றுக்கொண்டேதான் இருக்கும்.

தமிழீழத்தினை வென்றிட.... எழுக தமிழினமே...

தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, September 24, 2016

12 கோடி உலக தமிழர்களுக்கான விடுதலையின் முகவரி!

தமிழர்கள் அடிமைகளாகவே வாழ வேண்டுமா! தமிழனை தலை நிமிர நாதி இல்லையோ என்ற அவல குரல் ஒலிக்கும்போது அவலங்களை ஒழிக்க அவதாரம் எடுத்த பிள்ளைதான் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

1987 ல் சுதுமலையில் தாயக மக்களிடையே பிரபாகரன் அவர்கள் தெளிவாக உரை நிகழ்த்தும்போது,

"எம் மக்களை காப்பாற்ற ஏந்திய ஆயுதம் இந்திய படையிடம் ஒப்படைப்படைக்கும் இந்த கணத்திலிருந்து, எமது மக்களை பாதுகாக்கும் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்" 

என்று இந்தியாவை நம்பியதை, உலக தமிழர்களும், தமிழீழத்தை புரியாத தமிழர்களும் அறிய செய்யவே புகழேந்தி தங்கராஜ் அவர்கள்  தன் வாழ்நாளை ஒதுக்கி விடுதலையின் முகவரியின் முன்னுரையிலே உலகறிய செய்துள்ளார்.

9 ஜூலை 2016 ல் சென்னை கவிக்கோ அரங்கில் தமிழின முதல்வர் வைகோ வெளியிட விடுதலையின் முகவரியுடன் நெருப்பு பூச்சாண்டியும் உலகறியப்பெற்றது.

இந்த நூல் தமிழகத்தை விட்டு வெளியேறி அரபி கடலை கடந்து ஓமன் மற்றும் பல நாடுகளை சென்றடைந்திருக்கிறது. சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றிருந்ததை அறிந்து, மதிமுக இணையதள நேரலை அண்ணன் அம்மாபேட் கருணாகரன் அவர்களிடன் கேட்டபோது, 

"எதை கேட்கிறீர்கள் தமிழீழ தலைவர் பிரபாகரன் புத்தகம்தானே, உங்களுக்கு விலையில்லாமலே நான் தருகிறேன்"

என்று சொல்லி வாங்கி தந்து, அதை ஓமன் இணையதள அணி உறுப்பினர் அண்ணன் ராக்கப்பன் அவர்களிடத்தில் கொடுத்து அரபி கடல் தாண்டி அனுப்பினார். அண்ணன் ராக்கப்பன் அவர்கள் வேறு நகரத்தில் வேலை செய்வதால், நேரடியாக தர முடியாத காரணத்தால் அவருடைய நண்பர் செபஸ்டியான் அவர்களிடத்தில் கையளிக்க நான் மஸ்கட் நகரம் சென்று பெற்றுக்கொண்டேன்.

முன்னுரையிலே முகவரியை அறிந்துள்ளீர்கள், உள்ளுரையில் உணர்ச்சி பிளம்பு வெடிக்க தமிழர்கள் அழிக்கப்பட்டதை உங்களுக்கு உள்ளபடியே படித்து தருகிறேன். விடுதலையின் முகவரி 648 பக்கங்கள், நெருப்பு பூச்சாண்டி 656 பக்கங்கள் அடங்கிய வரலாற்று புத்தகத்தை அன்பளித்த அண்ணன் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட் கருணாகரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்.

Thursday, September 22, 2016

வையகம் போற்றும் தமிழின தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தலைவர் விரும்பாத பிறந்த நாள் கொண்டாட்டங்களை செப்டம்பர் 22 ல் அவருடைய பிறந்த நாளாக இந்த வருடத்திலிருந்து கொண்டாட திட்டம். எனவே இந்த வருடத்திலிருந்து தலைவர் வைகோ அவர்களுக்கு அண்ணா, பெரியார் பிறந்த மாதத்திலே பிறந்த நாள் கொண்டாட்டம் இருக்கும். எனவே கழக கண்மணிகள் அனைவரும் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துதலை தெரிவியுங்கள்.


சுய நலத்திற்காக தமிழினத்தை அழித்த தலைவர்களும், சுய நலத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தலைவர்களும் தங்கள் பிறந்த நாளை மாட மாளிகையில் தோரணங்கள், மேள தாளங்கள் முழங்க, ரோட்டை அடைத்து, போக்குவரத்தை மறித்து, மக்களுக்கு இடைஞ்சலை கொடுக்கிற வேளையி, தனது பிறந்த நாளையே அறியாமல், மக்களுக்கான போராட்ட வாழ்விலே ஈடுபடுத்தி கொண்டு 52 ஆண்டுகள் பொது வாழ்வில் முடித்து அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.

சிலைகள் தன்னை அபிசேகம் பண்ண கேட்பதில்லை. மனிதர்கள்தான் சிலைக்கு தானாக அபிசேகம் பண்ண வேண்டும் என்ற விதிகளின் படி, கடவுளே வேண்டாமென ஒதுக்கினாலும் பக்தர்களின் பக்தியால் அபிசேகம் செய்வதுண்டு. அதைதான் இந்த வருடத்திலிருந்தே மதிமுக கண்மணிகள், செப்டம்பர் 22 ஆம் நாளை வைகோவின் பிறந்த நாளாக கொண்டாட இருக்கின்றனர்.

எனவே கழக கண்மணிகளே இந்த வருடம் முதல் நமக்கு செப்டம்பர் மாதம் நமக்கு திருவிழா மாதமாக கருதி கொண்டாட வேண்டும். தலைவர் வைகோவின் பிறந்த நாளை நாம் நேர்மையின் தினமாக, ஊழல் ஒழிப்பு தினமாக கூட கொண்டாடும் நாளாக கூட கொண்டாடலாம்.

தமிழின முதல்வருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Thursday, September 15, 2016

பேரறிஞர் அண்ணாவின் 108 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு!

மலைக்கோட்டையை மலைக்க செய்திட,
மணி வாசகங்கள் மகுடங்களாக சூடிட,
வெண்தாடி வேதங்களை வானுயர்த்தி
அண்ணாவின் அடிநாதங்களை ஆழ்ந்துணர்ந்து,
வைகோவின் வரிப்புலிகள் புகழ் பல பெற்றிட,
திராவிட கொள்கைகளை தினம் மகிழ்ந்து பரப்பிட,
தெவிட்டாத தேன் தமிழுடன் தமிழீழம் மலர்ந்திட
துரோக சூனியத்தை சூளுரைத்து நொறுக்கிட
கழனிக்கொரு கண்மணி கழக கொடியுடன்,
களம் காண காளையர் கரைபுரண்டோடிட
அண்ணாவின் தம்பியின் புயல்வீச்சை புசித்திட,
அரபி கடலின் அலையோசை தாயகம் கேட்டிட,
கழகமே கண்ணாக கண்மணிகள் நினைத்திட
மார்தட்டி நான் மதிமுக காரன் என்று கனைத்திட
காஞ்சி தலைவன் கொள்கை கேட்க வாரீர்!
காளரை தூக்கிவிட்டு செல்வீர்!


திராவிடத்தின் உண்மையான கையிருப்பு,
தமிழின முதல்வர் வைகோ அழைக்கிறார்!

இடம்திருச்சி உழவர் சந்தை
நாள்: 15 செப்டம்பர் 2016

மறுமலர்ச்சி மைக்கேல்