தமிழர்கள் அடிமைகளாகவே வாழ வேண்டுமா! தமிழனை தலை நிமிர நாதி இல்லையோ என்ற அவல குரல் ஒலிக்கும்போது அவலங்களை ஒழிக்க அவதாரம் எடுத்த பிள்ளைதான் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
1987 ல் சுதுமலையில் தாயக மக்களிடையே பிரபாகரன் அவர்கள் தெளிவாக உரை நிகழ்த்தும்போது,
"எம் மக்களை காப்பாற்ற ஏந்திய ஆயுதம் இந்திய படையிடம் ஒப்படைப்படைக்கும் இந்த கணத்திலிருந்து, எமது மக்களை பாதுகாக்கும் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்"
என்று இந்தியாவை நம்பியதை, உலக தமிழர்களும், தமிழீழத்தை புரியாத தமிழர்களும் அறிய செய்யவே புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தன் வாழ்நாளை ஒதுக்கி விடுதலையின் முகவரியின் முன்னுரையிலே உலகறிய செய்துள்ளார்.
9 ஜூலை 2016 ல் சென்னை கவிக்கோ அரங்கில் தமிழின முதல்வர் வைகோ வெளியிட விடுதலையின் முகவரியுடன் நெருப்பு பூச்சாண்டியும் உலகறியப்பெற்றது.
இந்த நூல் தமிழகத்தை விட்டு வெளியேறி அரபி கடலை கடந்து ஓமன் மற்றும் பல நாடுகளை சென்றடைந்திருக்கிறது. சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றிருந்ததை அறிந்து, மதிமுக இணையதள நேரலை அண்ணன் அம்மாபேட் கருணாகரன் அவர்களிடன் கேட்டபோது,
"எதை கேட்கிறீர்கள் தமிழீழ தலைவர் பிரபாகரன் புத்தகம்தானே, உங்களுக்கு விலையில்லாமலே நான் தருகிறேன்"
என்று சொல்லி வாங்கி தந்து, அதை ஓமன் இணையதள அணி உறுப்பினர் அண்ணன் ராக்கப்பன் அவர்களிடத்தில் கொடுத்து அரபி கடல் தாண்டி அனுப்பினார். அண்ணன் ராக்கப்பன் அவர்கள் வேறு நகரத்தில் வேலை செய்வதால், நேரடியாக தர முடியாத காரணத்தால் அவருடைய நண்பர் செபஸ்டியான் அவர்களிடத்தில் கையளிக்க நான் மஸ்கட் நகரம் சென்று பெற்றுக்கொண்டேன்.
முன்னுரையிலே முகவரியை அறிந்துள்ளீர்கள், உள்ளுரையில் உணர்ச்சி பிளம்பு வெடிக்க தமிழர்கள் அழிக்கப்பட்டதை உங்களுக்கு உள்ளபடியே படித்து தருகிறேன். விடுதலையின் முகவரி 648 பக்கங்கள், நெருப்பு பூச்சாண்டி 656 பக்கங்கள் அடங்கிய வரலாற்று புத்தகத்தை அன்பளித்த அண்ணன் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட் கருணாகரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழன்புடன்,
No comments:
Post a Comment