Wednesday, March 22, 2017

பரவசமான பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

2011 ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த அந்த கொடுமையான கலவரம் மதுரை வரை சங்கமமாயிருந்தது. அந்த நேரத்தில் வைகோ மதுரை சிந்தாமணி பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு இளைஞன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டார். பதறிப்போனார் வைகோ.

காவல்துறையின் சில கண்மூடிதனமான போலீஸ்காரர் சுட்டதில் புஜத்திலும், மார்பிலும் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை, தலைவர் தாமே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

மிகப்பெரிய மரணப்போராட்டத்திற்கு பிறகு உயிர் பிளைத்தான் அந்த இளைஞன்.  

அந்த இளைஞனே இன்னாளில் அந்த தலைவனின் நிழலாக பின் தொடருகிறான். 

ஆதலால் உலக தலைவர்கள் அறிந்துகொண்ட இளைஞன் தம்பி பிரசாந்த்.   வாழ்வின் எல்லா வளமும் புகழும் கிடைத்து பெருவாழ்வு வாழ தம்பி பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன், 
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, March 8, 2017

மாணவர்களே! பெண்களே! திரண்டு வாருங்கள்! கச்சதீவை மீட்டு தாருங்கள்! சிங்களவனை கண்டிக்கிறேன்!

என் சொந்த நிலமான கச்சதீவை சிங்களவன் எப்படி பயன்படுத்த முடியும்.

என் நிலத்தை நான் பயன்படுத்தியிருந்தால் என் சகோதரன் சிங்களவன் குண்டு துளையுண்டு மடிந்திருப்பானா...?

ஏ தமிழினமே! எதற்காக போராடுகிறாய் என தெரியாமலே போராடுகிறாய்! நீதி வேண்டுமென்கிறாய்...

நீதியென்றால், பணமா?, துப்பாக்கி சூடு நிறுத்தமா? மீன்பிடி அனுமதியா? கச்சதீவு மீட்பா? என சரியான வரையறை இல்லாத வரை இந்த இனப்படுகொலையை சிங்களவன் தமிழினம் மீது நடத்திக்கொண்டேயிருப்பான்.

நாம் இந்தியத்திடம் நீதி கிடைக்காதா என 2 நாட்கள் ஆயிரக்கணகானோர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்போம்.

எனவே இப்படி செய்வதால், இதுவரை நமக்கான நீதி கிடைத்திருக்கிறதா என எண்ணிப்பார்த்தோமா?

ஒரே தீர்வு! கச்சதீவு மீட்புதான் என உலக நாடுகள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு,

"மாணவர்களே திரண்டு வாருங்கள். கச்சதீவை மீட்டு தாருங்கள்"

கச்சதீவை மீட்கும்போது தமிழகம் தானாக தனி நாடாகும் என உறுதியாக சொல்கிறேன்.

இல்லையென்றால் கீழே பதிந்திருக்கும் இந்த வீடியோவில் இருக்கும் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேந்த பிரிட்ஜோ என்ற மீசை எட்டிபார்க்கும் பருவத்திலிருந்த 21 வயது நிரம்பிய சகோதரனை சுட்டுக்கொன்றார்களே சிங்கள ஈன கொலையாளிகள், இதே நிலமை நமக்கும் ஏற்ப்படும். அப்போதுதான் நமக்கான வலியும் வேதனையும் தெரியும். இதை தடுக்க நீங்கள் எப்போது வீதிக்கு வரபோகிறீர்கள்.

நமக்கானது 2 நாள் ஒரு வார போராட்டம் அல்ல. உலகநாடுகள் தலையிடும் அளவிற்கான போராட்டம் வேண்டும். அதற்கு மாணவர்களும் பெண்களும்தான் முன்வர வேண்டும். இளைஞர்களும், பெரியவர்களும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

அவர்களை பாதுகாக்கும் அரணாக தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழர் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகள் அரண் அமைக்க வேண்டும்.

தொடர் போராட்டத்தில் கச்சதீவை மீட்டெடுத்து நம் சொந்த நிலத்தை ஏன் பயன்படுத்த முடியாது என உறுதிகொள்ளும் மன வலிமை ஏற்ப்படுத்துங்கள்.

நாளை நமது தமிழ்நாட்டுக்கு தனியான கொடி ஐநாவில் பறக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுங்கள்.

தமிழன் உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கிறானென்றால் அவன் திறமைக்காக மட்டுமே... ஆனால் அவன் நாடு அடைய மட்டும் திறமை இல்லையா என கேள்வி கேட்டோர் செவிகளில் பறையடிக்கும் விதமாக போராடி தமிழரசு அமையுங்கள்.

தமிழினத்தை, தமிழ் மொழியை பாதுக்காக்க முன்வருவீர்கள் என்ற உயரிய எண்ணத்தில்........

தமிழ் தாயக கனவுடன்,
மைக்கேல் செல்வ குமார்

Friday, March 3, 2017

இசையமைத்த இளவலுக்கு வாழ்த்துக்கள்!

மீத்தேனை விரட்டியவரை எதிர்ப்பான், ஆனால் மீத்தேன் ஆபத்துக்கு கையெழுத்து போட்டவரை ஆதரிப்பான்.

நியூட்ரினோவை ஒற்றை மனிதனாக வழக்காடி நிறுத்தியவரை கிண்டல் செய்வான்.

முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை உயர்த்த, ஊர் ஊராக சென்று , அணை உடைப்பதை கடுக்க கால் கடுக்க நடந்தவரை தடுப்பான். ஆனால் அந்த கால ஆட்சிகளை பாராட்டுவான்.

புற்று நோயை உண்டாக்குகின்ற ஸ்டெர்லைட் நாசகார ஆலை மூடி 20 வருடமாக வழக்கு தொடர்ந்து, இன்றும் உச்ச நீதிமன்றத்தில் மூட வலியுறுத்த போராடுபவரை எதிர்ப்பான்.

ஹார்போ கைட்ரஜன் வாயு எடுக்க விடாமல் முதல் அறிக்கை மற்றும் போராட்டம் நடட்தியவரை கிண்டல் செய்வான்.

ஜல்லிகட்டுக்காக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க பாராட்டியவரை, அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். மெரினா புரட்சி என்ற பெயர் உலக வரலாறை பதிய வைக்கும் விதமாக "மெரினா புரட்சி" என பெயரிட்டு அறிக்கை விட்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்தவரை விமர்சிப்பான். அந்த அறிக்கையின் பலனால்தான் வரலாற்றில் மெரினா புரட்சி என்று தெரிந்தும் தெரியாதது போல விமர்சிப்பான்.

அணு உலை விவாதத்தில் ஒற்றை உறுப்பினராக எதிர்த்தவரை விமர்சனம் செய்வான். ஆனால் அணு உலை வேண்டாம் என்றவர் போராடினால் கிண்டல் செய்வான்.

எப்படிதான் அரசியலில் நேர்மையானவரை அடையாளம் கண்டுகொள்ள தவறினாலும், கொள்ளையடித்து குடும்பத்தை ஆசியாவில் பெரும்பணக்காரகளை நம்பினாலும், சிறு வயது முதலே அவனின் துறு துறு வெட்கம் கலந்த பேச்சை கேட்டு பழகியவனல்லவா நான். அவன் தனிப்பட்ட மரியாதையை இன்றளவும் பெறுபவனல்லவா நான். அவன் செயல்களை ஊக்கப்படுத்துபவன் அல்லவா நான். இதோ இன்று, அண்ணா நான் ஒரு இசை அமைத்திருக்கிறேன். பாருங்கள் பகிருங்கள் என்றான். வேலை பளுதான். நோட்டிபிக்கேசன் அவனுடையதால் உடனே பார்த்து கேட்டுவிட்டு வாழ்த்துக்கள் தம்பி என்றேன்.

இதோ அவன் இசையமைத்த இந்த சிறிய வடிவ இசையை உங்களுக்கும் பகிருகிறேன். அவன் இசையில் பெரிய மேதைகளாக வரவேண்டும் என மனதார எண்ணுபவன். நான் பிறந்த புண்ணியபூமியாம் கொடுப்பைகுழி என்னும் உள்ளூரில் பெயர் பெற்ற கண் விழிக்காத கிராமத்தில் பிறந்து இசையில் சிகரமேறிக்கொண்டிருக்கிறான்.

அவன் பெரிய இசைஞானியாக உருவெடுக்க வேண்டும் தம்பி என கூறியதுண்டு. அவன் எண்ணப்படி உயரட்டும் வாழ்த்துக்கள் தம்பி Jim Stephen...

உன் இசை உலகை ஆளட்டும். இளைஞர்களை, முதியவர்களை, பச்சிளம் பாலகர்களை மயங்க செய்யட்டும்.

பார் போற்ற இசை முரசு கொட்டு தம்பி. வாழ்த்துக்கள்.

அன்போடு அண்ணன்,
மைக்கேல் செல்வ குமார்.