Saturday, September 26, 2020

கத்தார் மதிமுக நடத்திய பெரியார் அண்ணா பிறந்த நாள்-மைக்கேல் உரை!

கத்தார் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் இணையவழி கருத்தரங்கமாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் 25-09-2020 மாலை‌ நேரத்தில்  கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக திராவிட ரத்னா அன்பு தலைவர் வைகோ அவர்களின் போர்வாள் மல்லை தந்த முல்லை கழக துணை பொதுச் செயலாளர் ஆருயிர் அண்ணன் Mallai C E Sathya அவர்கள் நிகழ்வின் இறுதி பேருரையாக பெரியார் அண்ணா பற்றி விளக்கமாக உரையாற்றினார்கள். 

அண்ணன் ஏ.எஸ்.மோகன் மதிமுக அவர்களும் வேலை பளுவின் மத்தியிலும் உரை நிகழ்த்தினார்.

வளைகுடா அமைப்பாளர் வல்லம் பசீர் அருமையானதொரு உரை தந்தார்.

குழந்தைகளை நல்லவர்களாக வார்ப்பித்து பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர் ஒரு சகோதரனாக என்னிடத்தில் அன்பு பாராட்டுகின்ற அன்பு சகோதரி ஆசிரியர் அன்பியல் ஜேஜே தனக்கே உரிதான செருக்கோடு அழகிய தமிழ் மணக்க‌ உரை நிகழ்த்தினார்.

கத்தார் நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்கள்.

அடியேனும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் கலந்துகொண்டு பெரியா‌ர் அண்ணா பற்றி சில கருத்துக்களை கூறி சிற்றுரை நிகழ்த்தினேன்.

பெரியார் அண்ணா புகழ் ஓங்குக.

வாய்ப்பு வழங்கிய கத்தார் கழகத்தாருக்கு நன்றி.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, September 1, 2020

ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற, ₹600 கோடி நிதியா?

சென்னையில், 2019 ஜனவரி மாதம், நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், செங்கல்பட்டு அடுத்த பையனுாரில், 103.07 ஏக்கர் நிலத்தில், சாயி பல்கலை அமைக்க, தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கும், சாயி கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.


சாயி பல்கலை, முதல் ஏழு ஆண்டுகளில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில், 6,000 மாணவர்களுடன், 300 பேராசிரியர்கள், 300 நிர்வாக பணியாளர்களுடன் இயங்கும்.இரண்டாம் கட்டமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 30 லட்சம் சதுர அடி கட்டடத்தில், 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000 நிர்வாக பணியாளர்களுடன் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட உள்ள, சாயி பல்கலைக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று 31-08-2020, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அடிக்கல் நாட்டினார் என்பது மத்திய அரசுக்கு கைகூலியா தமிழக அரசு செயல்படுவதை உறுதிபடுத்துகிறது.


தனியார் பல்கலை கழகம் திட்டமிடுவதற்கு அரசின் நிதி எதற்கு வழங்கவேண்டும் என்ற கேள்வியே இப்போது மிஞ்சுகிறது.


தமிழக அரசு ஆர் எஸ் எஸ் கொள்கையை நிறைவேற்ற இந்த பல்கலை கழகத்திற்கு நிதியை வாரி வழங்குவது கண்டிக்கதக்கது.


மறுமலர்ச்சி மைக்கேல்