Sunday, November 29, 2020

முகநூல் மார்க் அவர்களுக்கு மைக்கேலின் அன்பு மடல்!


அன்பு சகோதரர் மார்க் அவர்களே!


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பயிற்றுவித்த எங்கள் பாட்டன் கணியன் பூங்கன்றனார் ஊரிலிருந்து மைக்கேல் செல்வ குமார் எழுதும் மடல்.

அன்பு சகோதரர் மார்க் அவர்களே!

தமிழ் மக்கள், முகநூலில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் படத்தையோ, தமிழீழ படத்தையோ, தமிழீழம் சார்ந்த செய்திகளையோ பதிந்தால், பதிவுகள் எங்கள் முகநூல் கணக்குகளிலிருந்து அகற்றப்படுகிறது. முகநூல் கணக்குகள் முடக்கப்படுகிறது. இது தற்போது அல்ல, சில வருடங்களாக நடைபெற்று வருகிறது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு எதிரான உங்கள் செயலாகும். இந்த முடக்கங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்து நடக்கிறதா என்று தெரியவில்லை. தெரியவில்லயென்றால் இந்த மடல் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர்களின் பதிவுகளை முகநூலில் முடக்குவதன் மூலம் தமிழர்களை விடுதலையை தடுக்குறீர்கள், அவர்களை அடிமையாகவே இனவிடுதலை அடையாமல் வைக்க நீங்கள் சிங்கள பெளத்த இலங்கை அரசுக்கு வேலை செய்கீறீர்கள் என்பதை உங்கள் மீது குற்றச்சாட்டாக வைக்கிறேன்.

தமிழீழம் சார்ந்த பதிவுகளை, நீங்கள் தமிழ் மக்களிடத்தில் பேசி அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆபாச படங்களையோ கொலை கொள்ளை சம்பவங்களையோ ஆதரிக்கும் படங்கள் முகநூலில் வந்து பெண்களை முகம் சுழிக்க வைக்கிறதே? அப்படி பட்ட பதிவுகளை நீங்கள் தடுக்காமல் தமிழர்களின் தமிழீழ உணர்வுகளை முடக்க நினைக்கிறீர்கள் என்று உங்களை குற்றம்சாட்டுகிறேன். நீங்கள் என்று சொல்வது தனிநபரான உங்களை அல்ல உங்கள் முகநூல் நிறுவனத்தை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்படியான ஆபாச பதிவு செய்பவர்களை முடக்குவதில்லை. அவர்கள் அதிகம் எழுதுகிறார்கள். அவர்கள் மேலும் சுதந்திரம் கொடுத்து எழுத தூண்டுவதுபோல அவர்களை தடை செய்யாமல் இருப்பது முகநூல் நிறுவனத்தின் நம்பகதன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ் மக்கள் இதயங்களிலிருந்து தமிழீழத்தையும் மேதகு வே பிரபாகவன் அவர்களையும் அழிக்கவோ நீக்கவோ முடக்கவோ முடியாது. மாறாக அடக்குமுறை ஒடுக்குமுறை என்பது தமிழர்களை திமிறி எழவே செய்யும் என்பதை கூறிகொள்கிறேன்.

இப்படியே எங்களின் தமிழீழ உணர்வுகளை வேகமாக வீரியமாக முடக்குவீர்களேயானால், எங்கள் உணர்வுகளை முடக்க முடக்க தமிழீழம் மலரும் காலம் விரைவாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவு கரம் நீட்டவில்லையென்றாலும் கேடு விளைவிக்காமல் இருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டு, ஆராய்ந்து புரிந்து பதிவுகள் மீதான நீக்கம், முடக்கத்தை இனிமேலாவது செய்யாமல் இருக்க வேண்டுமென்று உங்கள் முகநூல் நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறேன். இதை translator மூலம் படித்து புரியாத பட்சத்தில் உங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் உணர்வுள்ள தமிழன் மூலம் பதிவின் உண்மையை அறிந்து இனிமேலாவது தமிழர்கள், தமிழீழம் சாந்த பதிவுகளை செய்ய அனுமதிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
தமிழன், தமிழ்நாடு, இந்தியா

No comments:

Post a Comment