குமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தில் பொதுமக்களுடன் இணைந்து காந்திஜி இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் 500 க்கு மேலான நாட்டு செடிகள் இரும்பு வேலி பாதுகாப்புடன் ஏறத்தாள ₹100000 செலவில் கொடுப்பைக்குழி ஊர் முழுதுமுள்ள சாலைக்கும், ஆற்றுக்கும் அதிக இடைவெளிவிட்டு யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இன்று 30-11-2020 தமிழ்நாடு அரசு வாகனத்தில் வந்த சிலர் மரங்களை கூண்டோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்தனர்.
ஊர் மக்கள் வேண்டுகோள் வைத்தும், மரத்தின் பயனை எடுத்து கூறியும், காரணத்தை சொல்லிவிட்டு அகற்றுங்கள் என்று சொல்லியும் கேட்காமல் தான்தோன்றிதனமாக ஆவண போக்கில் மரங்களை அகற்றினார்கள் தமிழ்நாடு அரசு வாகனத்தில் வந்தவர்கள்.
ஊர் மக்கள் மரம் நட்டது, மழை தருவதற்காக பசுமை நாடாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் குழி தோண்டி புதைத்தது இன்றைய அரசு.
தமிழ்நாடு வாகனத்தில் வந்தவர்கள் எந்த அரசு ஊழியராக இருந்தாலும் பிடுங்கிய மரங்களை திரும்ப நட்டு தர வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் சாலை மறியலுக்கு உரிமைகளை வென்றெடுக்க தயாராக வேண்டும்.
மரம் அகற்றிய பாதக செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மரங்களை பிடுங்கி எறிந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அரசே அனைத்து மரங்களையும் மீண்டு நட்டு தர வேண்டுமென்று வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை காந்திஜி மன்ற உறுப்பினர் என்ற முறையில் சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
மரம் நட்டு வளர்ப்பது பிறந்த குழந்தையை பா து கா ப் து போ லா கு ம். இந்த விசம காரியத்தை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
உறுப்பினர்.
காந்திஜி இளைஞர் முன்னேற்ற சங்கம்.
கொடுப்பைக்குழி.
30-11-2020
Super
ReplyDelete