‘பேங்க் ஆப் தமிழ்நாடு’ என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்து அரசுடமையாக்கினார்கள் தமிழர்கள்.
அதை தற்போது தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு முனைவது தமிழர்களின் மீதான சுரண்டலாக கருதபடுகிறது.
ஆகவே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாருக்கு விற்பதை, தமிழ்நாடு அரசு தடுப்பதோடு, ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' என்ற பழைய பெயரில் தமிழ்நாடு அரசாங்கமே புதிய வங்கியை மறுபடியும் உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதில் தமிழர்கள் தங்கள் வங்கி கணக்குகளை திறந்து, மாநில பொருளாதாரத்தை சீரமைக்க வாய்ப்பு ஏற்படும்.
இப்போதுள்ள சூழலில் அனைவரும் தேசிய வங்கிகளிலே கணக்கு வைத்திருப்பதை தமிழ்நாடு அரசு ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' என்ற வங்கியை திறந்தவுடன் அதிலே கணக்கு தொடங்குவார்கள். மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
ஆகவே முதல்வர் M. K. Stalin அவர்களே, தமிழ்நாடு நிதி அமைச்சகத்தின் கீழ், நிதி அமைச்சரை தலைவராக கொண்டு புதிதாக நமது பழைய வங்கியான ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' மறு உருவாக்கம் செய்து தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக.
16-06-2021
No comments:
Post a Comment