நேற்று மாலை முதலே வாழ்த்து சாரலில் நனைந்து கொண்டே இருக்கிறேன்.
எளியவன் மேலும் பாசம் வைத்து வாட்சப், முகநூல், மெசஞ்சர், அலைபேசியில் என பல உறவுகள் இந்த பிறந்த நாளில் வாழ்த்திவிட்டீர்கள்.
அன்பு தலைவர் வைகோ அவர்களின் கண்மணிகளாக, குடும்பத்தாராக, நண்பர்களாக, உறவினர்களாக, தோழமைகளாக என அன்பால் என்னை கரைத்துவிட்டீர்கள்.
என் மீதுள்ள உங்கள் அன்பை தக்கவைக்க என்னை நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்களால் என் ஆயுள் கூடிக்கொண்டேயிருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
பாசம் காட்டி என்னை, அன்பால் பல்கி பெருக வைத்துவிட்டீர்கள்.
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் பறந்து வந்து நாக்கில் விழுகின்றன. ஆனாலும் எல்லாம் எழுதி சலிப்படைய செய்யாமல், உங்கள் அன்புக்கு பாத்திரமாயிருப்பேன் என்று கூறி, என் மீது பாசம் காட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை மனதார தெரிவிக்கிறேன்.
அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.
03-08-2021
No comments:
Post a Comment