Wednesday, March 23, 2022

தமிழீழம் சார்ந்து பேசினால், தொடரும் முகநூல் முடக்கம். காப்புரிமை வாங்கி தந்த தலைவர் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கோரிக்கை!

அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்ததற்காக எனது ஒரு வீடியோ சார்ந்த பதிவை முடக்கினார்கள். 30 நாள் தடை அறிவித்தார்கள். நான் அதை ஏற்கவில்லை. இப்போது அதை மறு பரிசீலனை செய்கிறோம் என்று தகவல் தந்தார்கள். இப்படியே போனால் முழுதாக முடக்கிவிடுவோம் என எச்சரிக்கை செய்துவிட்டு இந்த பதிவு தவறல்ல என்று மன்னுப்பு கோரிவிட்டு இன்று 23-03-2022 காலையில் விடுவித்துள்ளார்கள்.

ஆனாலும் live 90 நாட்களுக்கு செய்ய இயலாது. இன்னும் Account restricted என்ற நிலையிலே இருக்கிறது.

மேலும் 2009 முதல் நான் பதிவிட்ட அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் சார்ந்த அவர் கட்டியெழுப்பிய நாடு சார்ந்த பதிவுகளை முடக்கியிருக்கிறோம் என்றும் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள். அப்படியென்றால் எனது கணக்குகளை முழுதுமாக நோண்டி நோண்டி பார்க்கிறார்கள்.

இதை பார்க்கும்போது அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்தாலே என் கணக்கு முடக்கப்படவேண்டுமென செட்டப் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்திய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கோ அதன் கட்டமைப்புக்கோ தலைவருக்கோ ஆதரவாக பேசலாம் எழுதலாம் என்று இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு சட்டமாக்கி பேச்சு உரிமைக்கு காப்புரிமை வாங்கி தந்திருக்கிறார் அன்பு தலைவர் வைகோ MP அவர்கள். ஆனால் இன்னும் என்னை போன்ற ஆயிரக்கணக்கான தமிழீழ உணர்வாளர்களை எங்கள் உரிமைகளை முடக்குவது இந்திய ஒன்றிய அரசின் கடமையாக செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் மதிமுகவினர் தினமும் முடக்கப்படுகிறார்கள் எனப்தே வேதனையாக இருக்கிறது.

எத்தனை முறைதான் பலரும் பதிவாக போடுக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். ஆகவே இதை நாடாளுமன்றத்திலே மூர்க்கமாக பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அன்பு தலைவர் வைகோ MP அவர்கள் முகநூல் முடக்கம் பற்றி பேசவேண்டி கோரிக்கையாகவே வைக்கிறேன்...

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக
23-03-2021

Wednesday, March 16, 2022

தம்பி தமிழருணுக்கு திருமண வாழ்த்து!

ன்பு தலைவர் வைகோ அவர்களால் அடையாளம் காணப்பட்ட உரிமை போராளி தம்பி தே.தமிழருண் பெரம்பலூர். பின்புலம் இல்லாது, பொருளாதார கோரப்பிடியிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளராக சிறப்பாக செயலாற்றி தனது களப்பணியால் மாநில துணை அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இன்று அவர் தனது இல்லற வாழ்வில் புகுந்திருக்கிறார். தமிழ் பெயரை தனதாக்கிய அரசியை, தனது பள்ளி பருவ தோழியையே காதலியாக கொண்டு இன்று மனைவியாக்கியிருக்கிறார். அன்புத் தம்பியின் சுகத்திலும், சுகவீனத்திலும் தங்கை தமிழரசி உறுதுணையாக இருந்து குடும்பத்தை மாளிகையாக கட்டியெழுப்ப வேண்டும். தம்பியின் திருமணம், தம்பியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையில் இன்று சிறப்பாக நடைபெற்றிருக்கிறது நினைத்து உள்ளபடியே மனம் மகிழ்கிறேன். தந்தையும் தாயும் இல்லாத நிலையில் தலைவர் வைகோ அவர்களும் டெல்லியில் இருக்கும் நிலையில் கலந்துகொள்ளாத நிலையிலும், இயற்கை அவர்களும் இருக்கிறதென்ற நிலையில் அவர்கள் இல்லற வாழ்வில் வளம் பெற, யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டு தாழ்பணிந்து மகிழ்வுடன் வாழ திருமண நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன், மைக்கேல் செல்வ குமார் செயலாளர் ஒமான் மதிமுக 16-03-2021

Thursday, March 3, 2022

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.

இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.

மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.03.2022