அன்பு தலைவர் வைகோ அவர்களால் அடையாளம் காணப்பட்ட உரிமை போராளி தம்பி தே.தமிழருண் பெரம்பலூர். பின்புலம் இல்லாது, பொருளாதார கோரப்பிடியிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளராக சிறப்பாக செயலாற்றி தனது களப்பணியால் மாநில துணை அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.
இன்று அவர் தனது இல்லற வாழ்வில் புகுந்திருக்கிறார். தமிழ் பெயரை தனதாக்கிய அரசியை, தனது பள்ளி பருவ தோழியையே காதலியாக கொண்டு இன்று மனைவியாக்கியிருக்கிறார். அன்புத் தம்பியின் சுகத்திலும், சுகவீனத்திலும் தங்கை தமிழரசி உறுதுணையாக இருந்து குடும்பத்தை மாளிகையாக கட்டியெழுப்ப வேண்டும். தம்பியின் திருமணம், தம்பியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையில் இன்று சிறப்பாக நடைபெற்றிருக்கிறது நினைத்து உள்ளபடியே மனம் மகிழ்கிறேன். தந்தையும் தாயும் இல்லாத நிலையில் தலைவர் வைகோ அவர்களும் டெல்லியில் இருக்கும் நிலையில் கலந்துகொள்ளாத நிலையிலும், இயற்கை அவர்களும் இருக்கிறதென்ற நிலையில் அவர்கள் இல்லற வாழ்வில் வளம் பெற, யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டு தாழ்பணிந்து மகிழ்வுடன் வாழ திருமண நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன், மைக்கேல் செல்வ குமார் செயலாளர் ஒமான் மதிமுக 16-03-2021
No comments:
Post a Comment