Wednesday, March 23, 2022

தமிழீழம் சார்ந்து பேசினால், தொடரும் முகநூல் முடக்கம். காப்புரிமை வாங்கி தந்த தலைவர் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கோரிக்கை!

அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்ததற்காக எனது ஒரு வீடியோ சார்ந்த பதிவை முடக்கினார்கள். 30 நாள் தடை அறிவித்தார்கள். நான் அதை ஏற்கவில்லை. இப்போது அதை மறு பரிசீலனை செய்கிறோம் என்று தகவல் தந்தார்கள். இப்படியே போனால் முழுதாக முடக்கிவிடுவோம் என எச்சரிக்கை செய்துவிட்டு இந்த பதிவு தவறல்ல என்று மன்னுப்பு கோரிவிட்டு இன்று 23-03-2022 காலையில் விடுவித்துள்ளார்கள்.

ஆனாலும் live 90 நாட்களுக்கு செய்ய இயலாது. இன்னும் Account restricted என்ற நிலையிலே இருக்கிறது.

மேலும் 2009 முதல் நான் பதிவிட்ட அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் சார்ந்த அவர் கட்டியெழுப்பிய நாடு சார்ந்த பதிவுகளை முடக்கியிருக்கிறோம் என்றும் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள். அப்படியென்றால் எனது கணக்குகளை முழுதுமாக நோண்டி நோண்டி பார்க்கிறார்கள்.

இதை பார்க்கும்போது அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்தாலே என் கணக்கு முடக்கப்படவேண்டுமென செட்டப் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்திய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கோ அதன் கட்டமைப்புக்கோ தலைவருக்கோ ஆதரவாக பேசலாம் எழுதலாம் என்று இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு சட்டமாக்கி பேச்சு உரிமைக்கு காப்புரிமை வாங்கி தந்திருக்கிறார் அன்பு தலைவர் வைகோ MP அவர்கள். ஆனால் இன்னும் என்னை போன்ற ஆயிரக்கணக்கான தமிழீழ உணர்வாளர்களை எங்கள் உரிமைகளை முடக்குவது இந்திய ஒன்றிய அரசின் கடமையாக செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் மதிமுகவினர் தினமும் முடக்கப்படுகிறார்கள் எனப்தே வேதனையாக இருக்கிறது.

எத்தனை முறைதான் பலரும் பதிவாக போடுக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். ஆகவே இதை நாடாளுமன்றத்திலே மூர்க்கமாக பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அன்பு தலைவர் வைகோ MP அவர்கள் முகநூல் முடக்கம் பற்றி பேசவேண்டி கோரிக்கையாகவே வைக்கிறேன்...

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக
23-03-2021

No comments:

Post a Comment