Wednesday, January 20, 2016

ராமநாதபுரம் ரத்தினம் சாதிக் அலி அவர்களுக்கு உதித்த திருநாள் வாழ்த்து!

பெரு வயது குணத்தவராயினும்,

இளம் வயது துடிப்புடனே,

இணையத்தில் ஈட்டி போல,

இமை பொழுதும் ஓய்வில்லாமல்,

வைகோவின் வார்த்தைகளை வல்லமைமிக்க,

வரிகளாக, வாக்கியமாக வாசிக்க வாய்பளிக்கும்,

எங்கள் இளம் போராளி, 

இனிமைக்கு சொந்த காரர்,

எலோருக்கும் உறவுக்காரர்,

கழக உடன்பிறப்புகளின் கருணை இவர்,

பகிர்ந்தளிக்கும் பக்குவமானவர்,

கழகத்தார் கருத்து கேட்க காது கொடுப்பவர்,

ஆதங்கங்களை அமைதியாக கேட்பவர்,

அன்போடு அறிவுரை கூறுபவர்,

அவர் வாழ என் வாழ்த்து அலைபேசி ஒலியிலும்,

நூறாண்டு அவர் வாழ ஊரார் கூடி வாழ்த்த,

நானும் வாழ்த்துகிறேன் நீவிர் பிறந்த நன்னாளில்,

ராமநாதபுரம் ரத்தினமாம் சாதிக் அலி அவர்களுக்கு,

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, January 18, 2016

தன்னிகரற்ற பொதுவுடமைவாதி முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

எவன் பொருட்டும் மக்கள் நலனை காக்கவே படையமைத்து வலிமை சேர்த்துள்ளோம் என்று மக்கள் நலக் கூட்டணி அமைய காரணமாகயிருந்து கூட்டணி உருவானதும், வைகோவை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க முன்னெடுத்தவருமாகிய இந்திய கம்யுனிஸ்டு தமிழ்நாடு மாநில செயலாளர், அன்பிற்குரிய ஐயா இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள்.

அலைபேசியில் அழைத்து நான் மறுமலர்ச்சி மைக்கேல், ஓமன் மதிமுக இணையதள அணியில் இருந்து பேசுகிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. என்றதும், சிரிப்புடன் நன்றி என்றார். வாழ்த்து தெரிவித்த போது அவர் அடைந்த ஆனந்தம் அளவிட இயலாது. 

எங்கள் தலைவர் வைகோவுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்து வெற்றி நடை போடுவதற்கு நன்றி ஐயா என்றேன். சரி என்று சிரித்துகொண்டே சொன்னதாய் உணர்ந்தேன். 

வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும். மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உற்சாகமாக பாடுபடுவோம். சரி என்றார் சிரிப்புடன்.

வெளிநாடுகளில் வாழும் மக்கள் நலக் கூட்டணியினர் தாயகம் திரும்புவார்கள். களப்பணியாற்றுவார்கள் என்றேன், மேலும் சிரித்துகொண்டே சரி என்றார். 

அப்படிபட்ட பெருமகனாரை வாழ்த்துவதும், அவர் சரி என்று சிரித்துகொண்டே ஏற்றுக்கொண்டதும் நெகிழ்ச்சியாகவே இருந்தது. மீண்டொருமுறை இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ என்ற ஈரெழுத்து தாங்கிய பெருமகனை தலைவனாக கொண்ட தொண்டர்கள் கடல் கடந்து வாழ்ந்திருந்தாலும் வாழ்த்து சொல்லியிருப்பார்கள். அவரின் மனம் மிகுந்த ஆனந்தத்தை அடைந்திருக்கும் என்பதை என்னுடைய உரையாடலிலே அறிந்துகொண்டேன். 

உங்கள் பணிகள் சிறக்கட்டும். மக்களிடையே மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவும், அதிமுகவும் வேண்டாமென்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படியிருக்க ஊழலற்ற, நேர்மையாளர்களை கொண்ட மக்கள் நலக் கூட்டணியை வழி நடத்துகின்ற தலைவர்களாகிய உங்களுடன் நாங்களும் பயணிப்போம் என்பதில் பெருமையே.

வரும் காலம் மக்களுக்காக ஆட்சி அமைக்க மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம். காரணமாயிருந்த முத்தரசன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, January 15, 2016

தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அதிகாலையிலேயே சூரியன் உதிக்குமுன்னே எழும்பி, குளித்து கோலமிட்டு, பானையில் வண்ணம் தீட்டி, முக்கோணவடிவில் செங்கல் வைத்து அதன் மேல் வண்ணம் தீட்டிய பானையை வைத்து, கரும்புகளை ஒன்றோடொன்று பொங்கல் பானையின் அருகில் வைத்து, பானையிலே பொங்கலிட்டு அதை இனிப்பு செய்து ஒருவருக்கொருவர் பரிமாறி அன்பு பாராட்டி, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறோம்.

அனைவரும் மகிழ்ச்சியுடனும், குடும்பம் தழைக்க ஒற்றுமையுடனும் பொங்கலி கொண்டாடி மகிழவும், வருகிற உழவர் திருநாளில் வீட்டு விலங்குகளை சுத்தம் செய்து வர்ணமிட்டு அழகு படுத்தி, அவைகள் நமக்கு செய்த உதவிகளுக்காக அவற்றை போற்றி கொண்டாடுவோம். 

வீட்டு விலங்குகளுடன் அன்றாட நம் வாழ்க்கை கலந்ததையொட்டி அவற்றை போற்றி புகழும் தினத்தை உழவர் திருநாளை கொண்டாடி மகிழ பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, January 6, 2016

ஈஸ்வரனே பெரிய சாமியாக உதித்து கழகத்தை காப்பவரே! உதித்த திரு வாழ்த்து!

கழத்திற்கே காவலனாகவும், காவலுக்கே ஈஸ்வரனாகவும் பிறந்து திருப்பூரில் திரும்பும் இடமெல்லாம், வைகோ என்னும் ஈரெழுத்தை பரப்பி, பரம்பொருளே பாராமுகத்தோடு அதிசயிக்கும் வகையில், களத்திலே நின்று போராளியாகவும், தலைவனின் கடமையை செவ்வனே செய்து தனது மாணவர் படைக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்கும் அண்ணனே!

உங்கள் பாசத்திற்கு முன்னால் எங்களால் பாசாங்கு செய்ய முடியவில்லை. பாசங்கள் அடிநாதத்திலிருந்து வருகிறதே, உங்களின் உணர்ச்சியூட்டுகின்ற வாயின் வார்த்தைகளால் இணையத்திலே உங்கள் இணக்கத்தால் ஈடில்லா இச்சையோடு உமை இசைபாட வைத்தீரே!

தம்பி என்ற வார்த்தையை ஈஸ்வரன்தான் கண்டுபிடித்தானா என்று சொல்லும் அளவிற்கு அளவிலா பாசத்தை பக்குவமாக எடுத்துரைத்து, பணிக்கிடையேயும், பல நிமிடங்கள் பயணித்த பக்குவப்பட்ட பண்பாளனே!

இன்று உங்கள் பிறந்த நாள், ஆனால் எங்களுக்கோ புது அன்பு பெருகும் நாள். புன்னைகையோடு பூ போட்டு பூலோகமே வாழ்த்தினாலும், அன்பு தம்பியின் அளவிலா பாசத்தோடு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டனாய் அவதரித்து, மாவட்ட மாணவப் பட்டாளத்தையே இரண்டாம் தளபதியாக இருந்து, கட்டி காத்து, முன்னோக்கி வீர நடைபோட்டுக் கொண்டிருக்கும், உங்கள் வாழ்வில், வளமில்லா நன்மைகளை வளமாக்கி, ஈரெழுத்து மந்திரமாம் வைகோ என்ற பெருமகனின் ஆசியோடு கழகத்தில் உயர் நிலைகளை அன்போடு வாழ்த்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, January 1, 2016

புதிய வருட பிறப்பு தினத்தில் வளம் கொளிக்க நல் வாழ்த்துக்கள்!

ஜனவரி 1 ஆம் தியதியை புத்தாண்டாக கொண்டாடி மகிழுகிறோம். புது வருடத்தில் புத்தாடை உடுத்தி புது ஆளாக வலம் வருகிறோம். கடந்த வருடம் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் எண்ணி பார்த்து இன்பமும், சில வருத்தமுமடைகிறோம்
 
வரும் காலம் புது மனதோடு, புத்துணர்ச்சி பெற்று புகழ் சேர்த்து, தமிழர்களுக்கு நற்செயல் புரிந்து மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர வைக்கும் வரை செயலாற்ற வேண்டும் என உறுதியேற்போம். புகழின் உச்சிக்கே சென்றாலும் மாற்றானையும் மதிக்க கற்றுக் கொள்வோம். நமக்கான பாதையை நாம் செம்மையாக திட்டமிட்டு தயார் செய்வோம். புது வருடத்தில் புதுமையோடு அன்பு பாராட்டி மகிழ்ச்சியோடு வாழ என் உயிர் போன்ற எம்மின தமிழ் உறவுகளுக்கும், உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, December 28, 2015

இணையத ஏகலவன் அண்ணன் சிவராமகிருஷ்ணனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்!

கடல் கடந்து சென்று தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் உழைக்க சென்றிருந்தாலும், தான் ஏற்றுக் கொண்ட தலைவன் வைகோவின் அசைவுகள் அனைத்தையும் தோழர்களுடன் இணைந்து இயக்கம் வளர்ச்சி பெற அகிலத்துக்கு எடுத்து செல்லுகின்ற மகத்தான பணிகளை இணையத்தில் செவ்வனே செய்யும் மதிமுகவின் இணையதள அணி சகோதரர் சிவ ராமகிருஷ்ணன் அவர்கள், பல்லாண்டுகள் வாழ நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, December 20, 2015

தமிழின முதல்வர் வைகோ அழைப்பு - நிவாரணத்திற்கு நன்றி - நெகிழ்ந்த தொண்டன்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
 
இன்று 20-12-2015 இரவு உணவருந்த செல்ல நண்பருக்காக காத்திருந்த போது எனது அலைபேசிக்கு இரண்டு குறுந்தகவல் வந்தது, அன்பிற்குரிய அண்ணன் அருணகிரி அவர்களிடமிருந்து... ஏதுமறியாதவனாய் அங்கலாய்த்துக்கொண்டு மறுகணமே அழைத்தேன். அண்ணன் அவர்கள் மைக்கேலா, நீங்கதானே 68000 அனுப்பிருந்தீங்க என்று கேட்டார். ஆம் அண்ணா என்றேன். சரி என்று சொல்லிவிட்டு மைக்கேல் லைனில் என்று சொல்லி கொடுத்தார்.
 
என் வாழ்நாளில் நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட, தனக்கென்று ஒரு தனி வழ்வு இல்லை என்று சொல்லி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எந்நாளும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும், ஆகாயம் தேடாத ஆதாயம், தமிழின முதல்வர், உலக தமிழ் மக்கள் அனைவரும் பேச தவமிருக்கும் தலைவர் வைகோ அவர்கள், காந்த குரலில், இந்த எளியவனிடம்...
 
நான் வைகோ பேசுகிறேன், நல்லா இருக்கீங்களா என்றார்.
 
ஐயா நல்லா இருக்கிறேன். உங்களின் ஒரு வார்த்தைக்காக எவ்வளவு நாள் ஏங்கி க்கொண்டிருந்தேனோ இன்று அது நிறைவேறி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி ஐயா என்றேன்.
 
வெளிநாட்டில் போய் இவ்வளவு கஸ்டப்பட்டு சம்பாதித்ததை அனுப்பிருக்கீங்க என்றார்.
 
ஆம் ஐயா, தமிழ்நாட்டில் ஒருபெரும் தலைவருக்கு அனுப்பினால், அது முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்று அதீத நம்பிக்கையால் நண்பர்களிடத்தில் பிரித்து உங்களுக்கு அனுப்பி தந்தோம் ஐயா. 
 
சரி. அந்த பணம் முறையாக பொருட்கள் வாங்கி மக்களிடத்தில் கொடுக்கப்படும். எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள்.
 
சரி ஐயா மிக்க நன்றி ஐயா. எங்களுடைய கவலையெல்லாம் உங்களை பற்றிதான் ஐயா. நீங்கள் ஓய்வில்லாமல் தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கடந்த ஜூன் 25 ஆம் தேதி உங்களை நாகர்கோயிலில் சந்தித்த போது கூட உங்கள் உடல் நலனை பற்றி கேட்டேன். கொஞ்சம் ஓய்வெடுங்கள் ஐயா.
 
சரி. கன்னியாகுமரியில் மாவட்ட செயலாளர் போன உடன் அனைவருமே நம்மோடு வந்துவிட்டார்கள். வெற்றிவேலை மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறோம்.
 
ஆம் ஐயா, அண்ணன் வெற்றிவேல் அவர்களுக்கு நான், தில்லை செல்வம் போன உடனே அழைத்தேன். தலைவருக்கு நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லியிருந்தேன் ஐயா. ஆம் எனக்கு தெரியும் ஐயா அவர் மாவட்ட செயலாளர் என்று. நன்றி ஐயா.
 
சரி நன்றி.
 
இப்படியாக என்னுடைய உரையாடல் தலைவருடன் இருந்தது. 
 
எந்த இயக்கத்தில் உலகமே போற்றும் தலைவன் தன் கட்சி தொண்டனுக்கு அழைத்து பேசி நன்றி சொல்லுவார்கள். தொண்டனின் மனதை அறிந்த தலைவன் அல்லவா. பாசத்தை ஊட்டி உதிரத்தில் உணர்வேற்றும் தலைவன் அல்லவா. கழகத்தை ஒரு குடும்பமாக வார்ப்பித்து, அதை உணர்வுபூர்வமாக அனைவரையும் அரவணைத்து செயல்படுத்த, இந்த பூவுலகில் எங்கள் தலைவனை போல யாராவது உண்டா.
 
குஞ்சுகளுக்கு ஆபத்து வரும்போது, தாய் ஒடி வந்து காப்பாத்துவதை போல நீங்கள்தான் கழகத்தை காப்பாற்றுகிறீர்கள் என்று தொண்டர்களிடம் சொன்ன தலைவனின் கரங்களை வலுப்படுத்துவோம். 
 
இப்படிப்பட்ட தன்னலமில்லாத தலைவனின் பாசத்திற்காக கோடிக்கணக்கான என்னை போன்ற தொண்டர்கள் இருக்கின்றோம் என்பதை எதிரிகளுக்கு உணர்த்துவோம். வரும் காலம் வைகோவின் காலம் என்பதை எடுத்துக்காட்டுவோம். தமிழின முதல்வர் வைகோவை தமிழக முதல்வராக புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க சபதம் ஏற்போம்.
 
விதைத்துக் கொண்டிருக்கிறோம், அறுவடைக்கு தயாராவோம் 2016 ல்... 
 
மறுமலர்ச்சி மைக்கேல்