Tuesday, November 9, 2021

கொடுப்பைக்குழி அங்கன்வாடி நில அளவீடு வேண்டி‌ மனு!

குருந்தன்கோடு‌ ஊராட்சி கொடுப்பைக்குழியில் 
சர்வே எண் 520/2 ல் வடக்கு மூலையில் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் (பாலர் பள்ளி) செயல்பட்டு வந்தது. 2017 ஓகி புயலால் அங்கன்வாடி முழுதும் சேதமடைந்ததால்  01-10-2019 ல் இடிக்கப்பட்டு (பாலர் பள்ளி) தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 

ஆகவே புதிதாக கட்டடம் கட்ட சர்வே எண் 520/2 அளவீட்டின் படி, அங்கன்வாடி மற்றும் மாதர் சங்கத்திற்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அளந்து தருமாறு இன்று 09-11-2021 காலையில் குருந்தன்கோடு ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் குருந்தன்கோடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுப்பைக்குழி ஊர் மக்கள், மற்றும் காந்திஜி இளைஞர் மன்றம் சார்பாக  மனு கையளித்தோம். 

கொடுப்பைக்குழி                       
தேதி : 09-11-2021

Saturday, November 6, 2021


via IFTTT

via IFTTT

மது ஒழிப்பு போராளி அன்னை மாரியம்மாளுக்கு புகழஞ்சலி!

விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அன்னமிட்ட, மது ஒழிப்புக்கு உண்ணாவிரதமிருந்து மதுக்கடையை மூடிய  வீரத்தாய் அன்னை மாரியம்மாளின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் குமரி மாவட்ட மதிமுகவினரால் இன்று 6-11-2021 மாலை 5.30 மணி‌ அளவில் அனுசரிக்கப்பட்டது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் அடியேனும் புகழஞ்சலி செலுத்தினேன்.

மைக்கேல்‌ செல்வ குமார்
06-11-2021

Friday, August 13, 2021

அருணகிரிநாதர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

மனிதம் போற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.

மதம் சாராமல் மனிதம் மட்டுமே பார்த்த பெரியவர், சைவ மதமே தமிழர் மதம் என்று உரக்க சொன்னவர், இந்து அறநிலைய துறை என்பதை சைவ அறநிலையதுறை என்ற தமிழர்களின் உண்மையான பெயரை சூட்ட வேண்டுமென்று வலியுறுத்துயவர்‌, பெரும்‌ இலக்கியவாதி, அன்பு தலைவர் வைகோ அவர்கள் மீது எல்லையற்ற பாசம் வைத்திருந்தவர். சமூக‌ நல்லிணக்கத்தை வாழ்நாள் முழுதும் காத்தவர் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பு.

ஆதீன மக்களுக்கும், தமிழர்களான சைவர்களுக்கு பேரிழப்பு. அவரது மறைவிற்கு ஒமான தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
13-08-2021

Tuesday, August 3, 2021

வாழ்த்திய அன்புகளுக்கு நன்றி!

நேற்று மாலை முதலே வாழ்த்து சாரலில் நனைந்து கொண்டே இருக்கிறேன். 

எளியவன் மேலும் பாசம் வைத்து வாட்சப், முகநூல், மெசஞ்சர், அலைபேசியில் என‌ பல உறவுகள் இந்த பிறந்த நாளில் வாழ்த்திவிட்டீர்கள்.

அன்பு தலைவர் வைகோ அவர்களின் கண்மணிகளாக, குடும்பத்தாராக, நண்பர்களாக, உறவினர்களாக, தோழமைகளாக என அன்பால் என்னை கரைத்துவிட்டீர்கள்.

என் மீதுள்ள உங்கள் அன்பை தக்கவைக்க என்னை நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்த்துக்களால் என் ஆயுள் கூடிக்கொண்டேயிருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பாசம் காட்டி என்னை, அன்பால் பல்கி பெருக வைத்துவிட்டீர்கள்.

உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் பறந்து வந்து நாக்கில் விழுகின்றன. ஆனாலும் எல்லாம் எழுதி சலிப்படைய செய்யாமல், உங்கள் அன்புக்கு பாத்திரமாயிருப்பேன் என்று கூறி, என் மீது பாசம்‌ காட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை மனதார தெரிவிக்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.
03-08-2021