அகிலமெங்கும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள், ரமதான் காலங்களில் காலை முதல் மாலை வரை உண்ணாமல் அருந்தாமல் பசி தாகங்களை பொறுத்துக்கொண்டு விரதம் மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.
இஸ்லாமியப் பெருமக்கள், விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன் மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். எனவே சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்
இஸ்லாமியப் பெருமக்கள் இனிய ரமலான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, குடும்பத்தில் சந்தோசம் ஒளிர ரமதான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment