Friday, October 30, 2015

ஊருக்கு ஊரு சாராயம் பாடல் பாடிய கோவன் கைதுக்கு கடும் கண்டனம்!

ஊருக்கு ஊரு சாராயம், மூடு டாஸ்மாக் மூடு பாடல் பாடிய, மக்கள் கலை இலக்கிய கழகத்தின், மைய கலைக்குழுவை சார்ந்த கோவன் அவர்களை, திருச்சியில் நள்ளிரவில் 2 மணி அளவில் சென்னை குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 124ஏ தேசதுரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் எங்குள்ளார் என்பதை தெரிவிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகாரம் சார்பாக ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடல் பாடி மக்களுக்கு மதுவின் கொடுமைகளை விழிப்புணர்வு பாடலாக வெளியிட்டார்கள். இந்த பாடலில், ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம், ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசில் உல்லாசம், மூடு டாஸ்மாக்கை மூடு,   என்ற இரண்டு பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதற்காக மக்கள் பாடகர் தோழர்.கோவன் அவர்களை தமிழக அதிமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் பாடிய பாடல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனனாயகத்தை அடியோடு அழிக்கின்ற செயல்களில் ஜெயா அரசு ஈடுபட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மக்களின் மீது ஏதேச்சாரமாக தமிழக அரசு நடந்துகொள்கிறது கண்டிக்கதக்கது. சொந்த மாநில மக்களையே கொடுமைபடுத்தும் நிலமை கேவலமான செயலாகும். இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் இனியும் ஜெயா அரசு ஈடுபடகூடாது எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Thursday, October 22, 2015

தலித் படுகொலை அலட்சியம், மத்திய மந்திரி வி.கே.சிங்கிற்கு கடும் கண்டனம்!

அரியானாவில் தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டனர். இதற்கு கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை மந்திரி வி.கே.சிங், நாட்டில் நடைபெறும் அனைத்திற்கும் அரசையே குறை கூறாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இது இரு குடும்பங்களுக்கு இடையேயான பகையால் நிகழ்ந்தது. நாய் மீது யாரோ ஒருவர் கல் எறிந்தால், அதற்கு அரசு பொறுப்பில்லை என்று அலட்சியமாக பேசியுள்ளார்.

மத்தியை ஆளும் அமைச்சர் தனது நாட்டு மக்களை சாதி வெறியை தூண்டி விடுகிற செயல் போல இவரின் பேச்சு அமைகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இவர் இந்த வார்த்தையை திரும்ப பெற்று குறைந்தபட்சம், மன்னிப்பு கடிதம் வெளியிட வேண்டுமெனவும், இது போன்ற வார்த்தைதளில் நாட்டு மக்களை தரம் தாழ்த்தி அவதூறாக பேச கூடாது எனவும், தன் தவறையும், தான் ஒரு பொது ஜன பிரதிநிதி என்பதயும் உணர்ந்து திருந்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, October 21, 2015

இளம் போராளி "முகேஷ்" க்கு மலர்ந்த நாள் வாழ்த்து!

தமிழீழத்தை மூச்சாக கொண்ட அருமை சகோதரர் "முகேஷ்" தன் சிறிய வயதிலே அதன் போராடங்களுக்காக செலவளித்துள்ளார். தன் வாழ்நாளில் லட்சிய பாதையான மதிமுக வில் இணைந்து போராடி தமிழீழம் கிடைக்கவேண்டுமென்பதே அவருடைய இலட்சியமாக இருக்கிறது. தமிழையும் தமிழீழத்தையும் மிகவும் நேசிக்கும் நபர். நண்பர்களுக்கு ஊக்கமாகவும், நல்ல பண்பாளனாகவும் திகழுபவர். 

மதிமுக கழக அமைப்பான மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளராக கரூர் மாவட்டத்திலே திறம்பட கழக் பணிகளை செய்பவர். கழக போராட்டங்களை ஒருங்கிணைத்து போராடுபவர். இயற்கையிலே போராட்ட குனம் கொண்ட ஒரு தன்னிகரில்லா போராளி. 

தம்பி முகேஷ், வாழ்வில் வெற்றி பல கிடைக்கவும், கழகத்தில் உயர் பதவிகளை அடையவும், அவருக்கு அன்பின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, October 19, 2015

தமிழீழத்தை சுவாசிக்கும் சோமுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

கொங்கு மண்டலத்தில் தமிழீழத்தை தாங்கிய பெயரை தனது விருப்பமாக கொண்டதால், தமிழீழத்தி மேலுள்ள தீராத பற்றால், தமிழீழ சோமு என்று தனது பெயரை பயன்படுத்தினார். அனைவரும் தமிழீழ என்ற அடைமொழியோடே தமிழீழ சோமு என அழைத்தனர். 


நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர் சோமு, அன்பு பாராட்டுவதில் பகவானையும் மிஞ்சியவர். மிக சிறந்த பண்பாளர், ஊரறிந்த உத்தமர். என் அன்பிற்கினிய இளவல். அவர் வாழ்வில் பல ஏற்றங்களை பெற்று மகிழ்ச்சியோடு தழைக்க என் மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, October 18, 2015

தமிழீழ உணர்வாளன் தம்பி தீபனுக்கு பிறந்த தின வாழ்த்து!

திலீபன் அழைப்பது சாவையா! இந்த சின்ன வயசில் இது தேவையா என உணர்ச்சி பொங்க பாடினாரே தமிழீழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், திலீபனுக்காக அந்த கவிதை வரிகளை பெற்று தந்தாரே 1987 ஆம் வருடம் அதன் நினவால் வாடும்போதே அதற்கு அடுத்த வருடம் 1988 ஆம் வருடம் செப்டம்பரை அடுத்த அக்டோபர் திங்கள் 18 ஆம் நாளில்தான் தீபன் பிறந்தார். 

தமிழீழ மக்களின் விடியலுக்காக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலையிலே உயிரை மாய்த்தானே அதே உணர்வால்தான் இந்த தம்பிக்கு தீபன் என்றும் அவருடைய சகோதரருக்கு திலீபன் பெயர் சூட்டபட்டுவிட்டது. 

ஒரு திலீபன் காவியமானான். இரண்டு திலீபன்கள் உருவெடுத்தார்கள். தமிழீழ கொள்கையை தன் வாழ்நாளெல்லாம் தாங்கி பிடித்திருக்கின்ற கொள்கை தலைவன் ஈரெழுத்து மந்திரம் வைகோ என்னும் காவலனை தமிழீழ லட்சியத்திற்காக கரம் பிடித்தார்கள்.

தம்பி தீபன் தமிழ் மீதும், தமிழீழம் மீதும் பிறப்பாலே பற்றுக்கொண்டவர். அதை தனது கொள்கையாகவே கடைபிடிப்பவர். அவர் கண் முன்னே நிழலாடும், வரலாற்று சுவடுகளை அவ்வப்போது நமது முகத்திரையிலும் வெளிச்சம் போட்டு காட்டி நினைவூட்டுபவர். 

மறுமலர்ச்சி திமு கழகத்தின் இணையதள வித்தகர், உடுமலைபேட்டை மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர், ஈடிணையில்லா நட்பிற்கு நாணயமானவர். அவர் வாழ்வாங்கு வாழ எனது இதயத்தின் கதவுகளை முழுவதுமாக திறந்து பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, October 17, 2015

கருணைக்கு வாழ்த்து!

நாமக்கல்லின் நவரத்தினமே!
மயிலாடுதுறை தந்த மாணிக்கமே!
சிரிப்பிற்கு சிகரம் தந்த சினேகிதனே!
நட்பிற்கு பெருமை சேர்த்த பெருந்தகையே!
ஊராருக்கு ஊன்றுகோலாகின்ற உன்னதரே!
தாய்லாந்து தாலாட்டுகிற பவள முத்தே!
கடல் தாண்டி பயணிக்கு கழக ஓடமே!
இந்நாள் முடிய உம் இமை மூடும் தருணம்!
இரவிலே நான் வாழ்த்த, அது மறவா வாழ்த்தாக!
இரவு வணக்கத்தோடு நட்பின் நயத்தோடு நீர் வாழ்க!

நட்புடன், 
மறுமலர்ச்சி மைக்கேல்