முகநூலில் முகமறிந்து, ஈரோட்டில் இருகை கொடுத்து தூக்கியெடுத்து ஆராதித்த நேரத்தை எண்ணி நினைத்து பெருமைப்படுகிறேன். வண்டியிலிருந்து இறங்கியபோதும், நண்பர்களிடத்தில் உரையாட அவரை அழைத்து ஓரிடத்தில் விட்டதையும், சகோதரர் சோமு மண மேடையில் கொண்டு சேர்த்ததையும், போகும்போதும் வண்டியில் கைகொடுத்து இருக்கையில் அமர்த்தியதையும் எண்ணி பார்க்கிறேன்.
தம்பி வசந்த ப்ரியன் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்ற திறனுடைய ஒரு போராளி. தமிழகத்தின் தன்னலமில்லா போராளி, தமிழ்நாட்டின் ஊழியன் வைகோவே தம்பியின் எழுத்துக்களை பற்றி பெருமைபட்டது வசந்திற்கு வசந்தம் வீச செய்ததன்றோ.
தம்பியே! உன் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க, உன் எழுத்துக்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க, தொடர்ந்து போராடும் உன் குணத்தால் வாழ்வில் ஒளி வீச பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment