மனித குல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான் ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலமாகும்.
அந்தகார இருள் விலகி ஒளி வெள்ளம் பாய்வது போல் மூன்றாம் நாள் இயேசுபெருமான் உயிர்த்தெழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்தவப் பெருமக்கள் கொண்டாடுகிறார்கள்.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இதயத்தில் அமைதியையும், இளைப்பாருதலையும் வழங்குகிற இயேசுநாதரின் அறிவுரைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானவை ஆகும். கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுங்குண்டவர்களுக்கும் விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் ஏற்படுத்துகிறது.
இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார். மீட்பரின் போதனைகள் மனித குலத்துக்கு வழிகாட்டின.
அனைவருக்கும் வாழ்வில் ஒளியேற ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்