முகம் பாரா நட்புகள் உருவாகி அரசியல் பற்றிய விவாதங்கள், பொதுவான
விவாதங்கள், நக்கல் நைய்யாண்டிகள், சுவாரஸ்யமான
உண்மை சம்பவங்கள் என எல்லாவற்றையும் விவாதிக்கும் தளமாக விவாதித்து வருகிறோம்.
கடைசியாக நடந்த சுவாதி கொலை வழக்கும் அதில் அடக்கம்.
கடந்த சட்டசபை
தேர்தலில் தினமும் விடிய விடிய விவாதங்களும் நடைபெற்றது. இதில் குழுவாக இருக்கும்
அனைவருமே வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள்தான். ஆனாலும் நட்புகளாக உணர்வுபூர்வமாக
இருப்பது எங்கள் அனைவருக்குமான ஒன்றிணைந்த பாசமாகும்.
இந்த குழுவில் நக்கல் செய்யும்போது அண்ணன் பாண்டி அவர்களை
ஓட்ட வேண்டுமென்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். ஏனென்றால் அவர் அவ்வளவு
அன்பானவர். சிரித்துக்கொண்டே நக்கலடிப்பார். நாங்கள் அரசியல் பேசும்போது எங்கள்
எதிரணியாயினும் அவர் அசராமல் பதிலளிப்பார். அவ்வளவு பொறுமை.
இந்த குழுவில் இளைஞர்கள் முதல் வழிகாட்டும் பெரியோர்கள் வரை
இருக்கிறோம். பெரியவர் என்றால் அது திரவியம் சார்தான். அவர் எங்களுக்கு நல்ல
ஆலோசனைகளை வழங்குவார். முகம்பாராமல் உருவான குழுவிற்கு அதிகமான நண்பர்கள்
எண்ணிக்கைக்காக சேர்ப்பதில்லை. உணர்வுபூர்வமான உருத்துள்ள நண்பர்களையே
சேர்க்கிறோம்.
கடந்த தேர்தலில் விடிய விடிய விவாதம் செய்தும், பகல்
விடியும் போதும் விவாதம் செய்கிற ஒலி, காதில்
ஒலித்து எழுந்த நாட்களும் உண்டு. அப்படி 24/7 என்கிற தொனியில்
போய்க்கொண்டிருக்கும் விவாத மேடை களம். இணையத்தில் விவாதம் செய்வதோடு
மட்டுமல்லாமல், வாய்ப்புள்ள நண்பர்கள் நேரில் சென்று, சேர்ந்து
தேனீர் பருகி அதில் ஒரு மகிச்ச்சியை தேடி, அந்த
நிகழ்வை குழுவில் பகிரும்போது மற்ற நண்பர்களும் சேர்ந்து இருந்தது போன்ற உணர்வை
ஏற்ப்படுத்துகிறது.
01-01-2016 அன்று அண்ணன் பாலசுப்ரமணி
அவர்களால் உருவாக்கப்பட்டு உணர்வுபூர்வமாக தோழமையுடன் செயல்பட்டு வருகிற இந்த
குழுதான் வாட்சப்பில் "விவாத மேடை" என்று பெயர் பெற்றது. இதில் பாண்டி
அண்ணனும் அனைவரையும் அரவணைக்கும் பிம்பமாகவே செயல்படுகிறார். இதில் வக்கீல்கள், பொறியாளர்கள், புகைப்பட
கலைஞர்கள், ஆசிரியர்கள், அரசு
மேலாளர்கள், மற்றும் ஏனையவர்கள் அடங்கும்.
விவாத மேடையின் நண்பர்கள் குமரியை சேர்ந்தவர்களாக
இருந்தாலும் வேலையின் நிமித்தமாக அரபு தேசம், சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை
மற்றும் இந்திய உபகண்டத்தின் பகுதிகள் என சிதறி வாழ்கிறோம். ஆனால் விவாத மேடையில்
சந்திக்கிறோம்.
இதில் தம்பி சிவா, வக்கீல்
அய்யனார், முத்துசாமி அண்ணன், பால
முரளி அண்ணன், குமார் அண்ணன், ராஜ்குமார்
அண்ணன், நடராஜன் அண்ணன், சந்திரன்
அண்ணன், வக்கீல் செந்தில் குமார் மற்றும் சில அண்ணன்மார்கள் வந்து
விவாதத்தை சூடேற்றுவார்கள். திரவியம் சார், மணி
அண்ணன் வந்து அதை மெருகேற்றுவார்கள். பாண்டி அண்ணன் வந்து விவாதத்தை காமடி
களமாக்குவார். அவ்வப்போது நானும் விவாததத்தில் கலந்துகொண்டு காரசாமமாக கேள்விகளை
(அரசியல் மட்டும்) பாண்டி அண்ணாவிடம் கேட்பேன்.
இந்த குழுவிலிருந்து ஒரு மாதமாக திட்டம் தீட்டி நண்பர்கள்
ஒன்று சேர்ந்து ஒரு சிறு ஒருங்கிணைப்பு நிகழ்வை நடத்தலாம் என்று நினைத்து நேற்று
17-07-2016 ஞாயிறு நிறைவேறியது.
நண்பர்களான அண்ணன் மணி, அண்ணன்
குமார், அண்ணன் பால முரளி, அண்ணன்
பாண்டி, அண்ணன் நடராஜன், அண்ணன்
முத்துசாமி, சகோ அய்யனார், சகோ
சிவா ஆகியோர் குமாி மாவட்டம் சிதறால் சமண படுகைக்கு 16-07-2016 அன்று சென்று
அரட்டை அடித்து சுற்றி பார்த்து விட்டு, 17-07-2016
அன்று உணவு சமைத்து சாப்பிட அனைத்து பொருட்களையும் தயார் படுத்தி எடுத்து சென்று
சுற்றி பார்த்து விட்டு இராமனாதிச்சன் புதூர் பண்ணை தோட்டத்தில் நண்பர்கள் கைப்பட
சமையல் செய்து சாப்பிட்டு விட்டு நீச்சல் குளத்தில் நீராடி வீடு
திரும்பியிருக்கின்றனர் (நான் அன்று உங்களுடன் இல்லையே என்ற வருத்தம் எனக்கு) .
பின்னர் அனைவரும் அவரவர் வேலைகளுக்காக திரும்பியிருக்கிறார்கள். இந்த குழுவில்
இருக்கும் அனைவருக்கும், அடியேனின் நெஞ்சார்ந்த பாராட்டுகளை நட்புடன்
தெரிவித்துக்கொள்கிறேன். இதே போல எப்போதும் தொடர விழைகிறேன்.
நான் இதை எதற்கு சொல்ல வருகிறேனென்றால், ஒரு
வாட்சப் குழு என்பது வெறுமனே நேரத்தை செலவிட மட்டுமல்லாது உணர்வுபூர்வமான நட்புகளை
சேகரிக்கும் கூடமாகவும், நல்ல ஆரோக்கியமான முன்னோட்டமான செய்திகளை பகிர்ந்து
வாழ்வியலுக்கு உதவிகரமாகவும், குடும்ப
உணர்வை ஏற்படுத்தவும் எங்கள் விவாத மேடை போன்று வேறு குழுக்களும் பயன்படுத்தலாம்
என்ற நல்லெண்ணம் தான். இந்த குழுவில் நல்லுள்ளம் கொண்டவர்கள் கொடையுள்ளம்
கொண்டவர்களாகவும் இருப்பதே பெரும் சிறப்பு. கொடையுள்ளம் வாழ்வியலுக்காக மட்டுமே.
வேறு குழுக்கள் இருக்கலாம். அப்படியிருந்தால் தெரியப்படுத்துவதன் மூலம் இதை
மற்றவர்களும் செயல்படுத்தி மகிழ்ச்சியான வாழ்வு வாழ வழிவகை செய்யும்.
எனவே அனைவரும் திட்டமிட்டு நல்ல நட்புகளை பெற்று
மகிழ்ச்சியடையுங்கள்.
நட்புடன்,