Wednesday, January 6, 2016

ஈஸ்வரனே பெரிய சாமியாக உதித்து கழகத்தை காப்பவரே! உதித்த திரு வாழ்த்து!

கழத்திற்கே காவலனாகவும், காவலுக்கே ஈஸ்வரனாகவும் பிறந்து திருப்பூரில் திரும்பும் இடமெல்லாம், வைகோ என்னும் ஈரெழுத்தை பரப்பி, பரம்பொருளே பாராமுகத்தோடு அதிசயிக்கும் வகையில், களத்திலே நின்று போராளியாகவும், தலைவனின் கடமையை செவ்வனே செய்து தனது மாணவர் படைக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்கும் அண்ணனே!

உங்கள் பாசத்திற்கு முன்னால் எங்களால் பாசாங்கு செய்ய முடியவில்லை. பாசங்கள் அடிநாதத்திலிருந்து வருகிறதே, உங்களின் உணர்ச்சியூட்டுகின்ற வாயின் வார்த்தைகளால் இணையத்திலே உங்கள் இணக்கத்தால் ஈடில்லா இச்சையோடு உமை இசைபாட வைத்தீரே!

தம்பி என்ற வார்த்தையை ஈஸ்வரன்தான் கண்டுபிடித்தானா என்று சொல்லும் அளவிற்கு அளவிலா பாசத்தை பக்குவமாக எடுத்துரைத்து, பணிக்கிடையேயும், பல நிமிடங்கள் பயணித்த பக்குவப்பட்ட பண்பாளனே!

இன்று உங்கள் பிறந்த நாள், ஆனால் எங்களுக்கோ புது அன்பு பெருகும் நாள். புன்னைகையோடு பூ போட்டு பூலோகமே வாழ்த்தினாலும், அன்பு தம்பியின் அளவிலா பாசத்தோடு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டனாய் அவதரித்து, மாவட்ட மாணவப் பட்டாளத்தையே இரண்டாம் தளபதியாக இருந்து, கட்டி காத்து, முன்னோக்கி வீர நடைபோட்டுக் கொண்டிருக்கும், உங்கள் வாழ்வில், வளமில்லா நன்மைகளை வளமாக்கி, ஈரெழுத்து மந்திரமாம் வைகோ என்ற பெருமகனின் ஆசியோடு கழகத்தில் உயர் நிலைகளை அன்போடு வாழ்த்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, January 1, 2016

புதிய வருட பிறப்பு தினத்தில் வளம் கொளிக்க நல் வாழ்த்துக்கள்!

ஜனவரி 1 ஆம் தியதியை புத்தாண்டாக கொண்டாடி மகிழுகிறோம். புது வருடத்தில் புத்தாடை உடுத்தி புது ஆளாக வலம் வருகிறோம். கடந்த வருடம் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் எண்ணி பார்த்து இன்பமும், சில வருத்தமுமடைகிறோம்
 
வரும் காலம் புது மனதோடு, புத்துணர்ச்சி பெற்று புகழ் சேர்த்து, தமிழர்களுக்கு நற்செயல் புரிந்து மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர வைக்கும் வரை செயலாற்ற வேண்டும் என உறுதியேற்போம். புகழின் உச்சிக்கே சென்றாலும் மாற்றானையும் மதிக்க கற்றுக் கொள்வோம். நமக்கான பாதையை நாம் செம்மையாக திட்டமிட்டு தயார் செய்வோம். புது வருடத்தில் புதுமையோடு அன்பு பாராட்டி மகிழ்ச்சியோடு வாழ என் உயிர் போன்ற எம்மின தமிழ் உறவுகளுக்கும், உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, December 28, 2015

இணையத ஏகலவன் அண்ணன் சிவராமகிருஷ்ணனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்!

கடல் கடந்து சென்று தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் உழைக்க சென்றிருந்தாலும், தான் ஏற்றுக் கொண்ட தலைவன் வைகோவின் அசைவுகள் அனைத்தையும் தோழர்களுடன் இணைந்து இயக்கம் வளர்ச்சி பெற அகிலத்துக்கு எடுத்து செல்லுகின்ற மகத்தான பணிகளை இணையத்தில் செவ்வனே செய்யும் மதிமுகவின் இணையதள அணி சகோதரர் சிவ ராமகிருஷ்ணன் அவர்கள், பல்லாண்டுகள் வாழ நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, December 20, 2015

தமிழின முதல்வர் வைகோ அழைப்பு - நிவாரணத்திற்கு நன்றி - நெகிழ்ந்த தொண்டன்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கண்மணிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
 
இன்று 20-12-2015 இரவு உணவருந்த செல்ல நண்பருக்காக காத்திருந்த போது எனது அலைபேசிக்கு இரண்டு குறுந்தகவல் வந்தது, அன்பிற்குரிய அண்ணன் அருணகிரி அவர்களிடமிருந்து... ஏதுமறியாதவனாய் அங்கலாய்த்துக்கொண்டு மறுகணமே அழைத்தேன். அண்ணன் அவர்கள் மைக்கேலா, நீங்கதானே 68000 அனுப்பிருந்தீங்க என்று கேட்டார். ஆம் அண்ணா என்றேன். சரி என்று சொல்லிவிட்டு மைக்கேல் லைனில் என்று சொல்லி கொடுத்தார்.
 
என் வாழ்நாளில் நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட, தனக்கென்று ஒரு தனி வழ்வு இல்லை என்று சொல்லி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எந்நாளும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும், ஆகாயம் தேடாத ஆதாயம், தமிழின முதல்வர், உலக தமிழ் மக்கள் அனைவரும் பேச தவமிருக்கும் தலைவர் வைகோ அவர்கள், காந்த குரலில், இந்த எளியவனிடம்...
 
நான் வைகோ பேசுகிறேன், நல்லா இருக்கீங்களா என்றார்.
 
ஐயா நல்லா இருக்கிறேன். உங்களின் ஒரு வார்த்தைக்காக எவ்வளவு நாள் ஏங்கி க்கொண்டிருந்தேனோ இன்று அது நிறைவேறி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி ஐயா என்றேன்.
 
வெளிநாட்டில் போய் இவ்வளவு கஸ்டப்பட்டு சம்பாதித்ததை அனுப்பிருக்கீங்க என்றார்.
 
ஆம் ஐயா, தமிழ்நாட்டில் ஒருபெரும் தலைவருக்கு அனுப்பினால், அது முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்று அதீத நம்பிக்கையால் நண்பர்களிடத்தில் பிரித்து உங்களுக்கு அனுப்பி தந்தோம் ஐயா. 
 
சரி. அந்த பணம் முறையாக பொருட்கள் வாங்கி மக்களிடத்தில் கொடுக்கப்படும். எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள்.
 
சரி ஐயா மிக்க நன்றி ஐயா. எங்களுடைய கவலையெல்லாம் உங்களை பற்றிதான் ஐயா. நீங்கள் ஓய்வில்லாமல் தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கடந்த ஜூன் 25 ஆம் தேதி உங்களை நாகர்கோயிலில் சந்தித்த போது கூட உங்கள் உடல் நலனை பற்றி கேட்டேன். கொஞ்சம் ஓய்வெடுங்கள் ஐயா.
 
சரி. கன்னியாகுமரியில் மாவட்ட செயலாளர் போன உடன் அனைவருமே நம்மோடு வந்துவிட்டார்கள். வெற்றிவேலை மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறோம்.
 
ஆம் ஐயா, அண்ணன் வெற்றிவேல் அவர்களுக்கு நான், தில்லை செல்வம் போன உடனே அழைத்தேன். தலைவருக்கு நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லியிருந்தேன் ஐயா. ஆம் எனக்கு தெரியும் ஐயா அவர் மாவட்ட செயலாளர் என்று. நன்றி ஐயா.
 
சரி நன்றி.
 
இப்படியாக என்னுடைய உரையாடல் தலைவருடன் இருந்தது. 
 
எந்த இயக்கத்தில் உலகமே போற்றும் தலைவன் தன் கட்சி தொண்டனுக்கு அழைத்து பேசி நன்றி சொல்லுவார்கள். தொண்டனின் மனதை அறிந்த தலைவன் அல்லவா. பாசத்தை ஊட்டி உதிரத்தில் உணர்வேற்றும் தலைவன் அல்லவா. கழகத்தை ஒரு குடும்பமாக வார்ப்பித்து, அதை உணர்வுபூர்வமாக அனைவரையும் அரவணைத்து செயல்படுத்த, இந்த பூவுலகில் எங்கள் தலைவனை போல யாராவது உண்டா.
 
குஞ்சுகளுக்கு ஆபத்து வரும்போது, தாய் ஒடி வந்து காப்பாத்துவதை போல நீங்கள்தான் கழகத்தை காப்பாற்றுகிறீர்கள் என்று தொண்டர்களிடம் சொன்ன தலைவனின் கரங்களை வலுப்படுத்துவோம். 
 
இப்படிப்பட்ட தன்னலமில்லாத தலைவனின் பாசத்திற்காக கோடிக்கணக்கான என்னை போன்ற தொண்டர்கள் இருக்கின்றோம் என்பதை எதிரிகளுக்கு உணர்த்துவோம். வரும் காலம் வைகோவின் காலம் என்பதை எடுத்துக்காட்டுவோம். தமிழின முதல்வர் வைகோவை தமிழக முதல்வராக புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க சபதம் ஏற்போம்.
 
விதைத்துக் கொண்டிருக்கிறோம், அறுவடைக்கு தயாராவோம் 2016 ல்... 
 
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, November 27, 2015

நவம்பர் 27 மாவீரர் நாளில் தமிழீழம் மலர உறுதியேற்போம்!

தமிழர் தாயகமான தமிழீழ பகுதிகளில் நடந்த போரில், சிங்கள கொலைவெறி ராணுவத்துடன் நடந்த போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழர்கள் தமிழீழத்தில் மாவீரர்கள் தினம் துக்கதினமாக அனுசரிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. அந்த நாள்தான் மாவீரர் தினமாக இன்றளவும் அனுசரிக்கப்படுகிறது.

தமிழீழ மண்ணை காக்க தனது உயிரை கொடையளித்த மாவீரர்கள் அனைவருக்கும் நமது இதய அஞ்சலியை காணிக்கையாக்குவோம். அவர்கள் தமிழீழ மண்ணில் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் சிந்திய குருதியால் தமிழர் வாழ்வு உயர் நிலையை அடையும் நாள் தூரத்தில் இல்லை. மாவீரர்களின் கனவான தமிழீழத்தை அடையவே நமது இலட்சியமாக கொள்வோம்.

"தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்"

மறுமலர்ச்சி மைக்கேல் 

Thursday, November 26, 2015

தமிழர்களை பாரினில் தலை நிமிர செய்தவருக்கு பிறந்த நாள் வாழ்த்து!

இலங்கை தீவில் இரண்டு இனங்கள் வாழ்கின்றன. ஒன்று தமிழினம், மற்றொன்று சிங்களம், தமிழின பகுதி தமிழீழ நாடாகும். அந்த தமிழீழத்தில்தான் சிங்களவர்களின் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்று தமிழர்களை உலகறிய செய்தவர்தான் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் கொண்டிராத முப்படைகளான, ராணுவ படை யான விடுதலைபுலிகள், கடற்படையான கடற்புலிகள், வான்படையான வான்புலிகளோடு நான்காவது படையாக கரும்புலிகள் படையையும் உருவாக்கிய புகழ் மிக்க தலைவன் பிரபாகரன்.

சிங்கள தேசத்திலிருந்து அடிமைப்பட்டிருந்த மக்களை விடுவித்து தலை நிமிர்ந்து வாழ வைத்த தெய்வம்தான் பிரபாகரன் என்று அனைத்துலக தமிழ் மக்களாலும் போற்றப்படுபவர். தமிழினத்திற்கான நாட்டை சிங்களவர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி, கொடுமையான சித்திரவதை பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்த வேளையில் ஒரு கை துப்பாக்கியுடன் தனது சகாக்களுடன் வன்னிக்காட்டிற்கு சென்று சிங்கள ராணுவத்திற்கு எதிராக போராட தொடங்கியவர்தான் பிரபாகரன் அவர்கள். பின்னாளில் சகாக்கள் கொண்ட அணியை படையாக பெருக்கினார். படைகளுக்கு பெயரிட்டார். 

உலகிலே எந்த இயக்கமும் பெற்றிராத முப்படைகளை அமைத்து தானே கண்காணித்தார். உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றார். தமிழீழ மக்களுக்கான தனி தமிழீழ அரசாங்கத்தை அமைத்து அரசியல், நிதிதுறை, நீதி துறை, போக்குவரத்து, பள்ளி, கல்லூரி, சிறார் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் ஏராளமான ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கி தனி நாடாக செயல் வடிவம் கொடுத்து இயக்கி காட்டி உஅலகையே திரும்பி பர்க்க வைத்த மாவீரன் பிரபாகரன். 

தமிழீழத்திற்கான போர்க்கருவிகளை ராணுவமே தயாரிக்கவும், நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கவும் வீரர்களை திறமையானவர்களாக உருவாக்கினார். அனைத்து போர் படைகளுக்கும் தனி சீருடை மற்றும் பயிற்ச்சிகள் வழங்கினார். படைகளுக்கு தமிழிலே பயிற்ச்சிகளை வழங்கி தமிழை பேணி காத்தார். 

தமிழீழத்தில் யார் வேண்டுமானாலும் எந்த நடுநிசை நேரத்திலும் பாதுகாப்பாக சென்று வர முடியும் என்ற நிலையை கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தினார். மது இல்லா நாடாக கட்டமைத்திருந்தார். 12 கோடி மக்களுக்கான தமிழர் தேசமாக தமிழீழத்தை கட்டமைத்தார்.

கலை இலக்கியம், பொறியியல் போன்ற அனைத்திலும் தமிழீழ மக்கள் சிறந்து விளங்கவேண்டுமென்று அனைத்து துறைகளையும் மேம்படுத்தினார். தமிழீழ நாடு அமைதியின் உருவாக உருவெடுத்து தனி நாடாக உருவாகும் அனைத்து சாத்திய கூறுகளையும் உருவாக்கினார் பிரபாகரன். 

ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ புலிக்கொடி பறக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில் பொறுக்க முடியாத சிங்கள படை பிரபாகரனின் விடுதலைபுலிகளோடு தனியாக போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து, உலக நாடுகளை துணைக்கு அழைத்து தமிழர்களை படுகொலை செய்து, திட்டமிட்டு சிறார்களையும், சிசுக்களையும் கொன்று தமிழினத்தையே அழித்தது. இது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலையாகும். தமிழீழ ராணுவமான விடுதலைப்புலிகளான தமிழீழ தமிழர்கள் போர்க்களத்தில் வீழ்ந்திருந்தாலும், அவர்களுடைய போராட்ட குணம் சற்றும் குறையாமல் இன்னும் வேகமாக கூடுதலாகவே இருக்கிறது. போராட்ட வடிவம் மட்டுமே மாறி இருந்தாலும், இலட்சியத்தில் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

உலக தமிழர்களை உலகமே போற்றும் அளவிற்கு தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிய மாவீரன் பிரபாகரன் அவர்களின் இன்றைய பிறந்த நாளில் நேரடியாக வாழ்த்து சொல்ல முடியாமல் போனாலும், தமிழர்களாகிய நாம் அனைவரும் பிரபாகரன் பிறந்த நாளை "தமிழர்களின் விடுதலை நாளாக" கொண்டாடுவோம். ஒற்றுமையுடனும், தமிழீழ மண்ணை வென்றெடுக்கவும் இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழீழம் மலரும் நாளில் தமிழர்கள் ஐநாவில் பதவிகளில் அலங்கரிப்பார்கள் என்பது சாத்தியமாகும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். தமிழீழ புலிக்கொடி ஐநாவில் பறக்கும் நாள் வெகு விரைவில் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். "தமிழீழ குடியரசை" வென்றெடுப்போம்.

"தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்"

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, November 22, 2015

சிங்கப்பூரின் சீவக சிந்தாமணி, துவார் சுப்பையா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்து!

திராவிட இயக்க கொள்கைகளை அடி மாறாமல் எடுத்துரைக்கும் வரலாற்று பெட்டகம் அண்ணன் துவார் சுப்பையா அவர்கள், இன்று தனது பிறந்த நாளிலும், கழகத்தின் மீதும், உலக தமிழர்கள் மீதும் பற்றுள்ளவர்.
 
எங்கெல்லாம் தமிழர்கள் தாக்கபடுகிறார்களோ, தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனரோ அவற்றிற்கெல்லாம் கண்டனம் தெரிவிப்பவர்.
 
அவ்வாறு தமிழ், தமிழர்கள், தமிழினத்தின் மீது காதல் கொண்ட சகோதரர் துவார் பொன் சுப்பையா அவர்கள் கடந்த 3 நாட்களாக தமிழீழ தமிழர்களுக்கான மனித உரிமை மீறல்களுக்கான தலைவர் வைகோ அவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்கள். தாய் தமிழக தலைவர்களுடனும், தமிழீழ தலைவர்களுடனும் பங்குபெற்று வருவது சிறப்பாகும்.
 
அவருடைய தமிழ் உணர்வும், கழகத்தின் பால் காதலும் போற்றுதலுக்குரியது. அண்ணனின் கடமைகள் கச்சிதமாக நிறைவேற புதிய பிறந்த நாளை தமிழால் மக்களுக்கான தொண்டாற்ற செயல்படுத்துவதற்காக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ஓமன் மதிமுக இணையதள அணி