தமிழர் தாயகமான தமிழீழ பகுதிகளில் நடந்த போரில், சிங்கள
கொலைவெறி ராணுவத்துடன் நடந்த போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
தமிழர்கள் தமிழீழத்தில் மாவீரர்கள் தினம் துக்கதினமாக அனுசரிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர்
வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய்
நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே
நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. அந்த நாள்தான்
மாவீரர் தினமாக இன்றளவும் அனுசரிக்கப்படுகிறது.
தமிழீழ மண்ணை காக்க தனது உயிரை கொடையளித்த மாவீரர்கள்
அனைவருக்கும் நமது இதய அஞ்சலியை காணிக்கையாக்குவோம். அவர்கள் தமிழீழ மண்ணில்
போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் சிந்திய குருதியால் தமிழர் வாழ்வு உயர் நிலையை
அடையும் நாள் தூரத்தில் இல்லை. மாவீரர்களின் கனவான தமிழீழத்தை அடையவே நமது
இலட்சியமாக கொள்வோம்.
"தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்"
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment