Saturday, July 2, 2016

வழக்கறிஞர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்!

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தங்களுக்கு எதிராக,சென்னை உயர்நீதி மன்றம் மேற்கொண்டுள்ள சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றார்கள்.
வழக்கறிஞர்கள் தவறுகள் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பார்கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது அவ்வாறு இருக்க,நீதிபதிகளே நேரடியாக நடவடிக்கை எடுக்கவகை செய்யும் வகையில், சென்னை உயர்நீதி மன்றம் வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1)இன் கீழ்ப் புதிய திருத்த விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக வழக்குரைஞர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கக்கூடிய வகையிலும், வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமையை பறிக்கக்கூடிய விதத்திலும் திருத்தப்பட்டு இருப்பதாக வழக்குரைஞர்கள் கருதுவது குறித்தும் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இத்தகைய சட்டம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படிப்பட்ட சட்டத்தை உயர்நீதிமனற்ம் பிறப்பித்துள்ளது என வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்ற கருத்தையும் உயர்நீதி மன்ற தலைமைநீதிபதி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
கடந்த ஒரு மாதகாலமாக வழக்குரைஞர்கள் நீதி மன்றங்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம்,ரயில் மறியல் போன்ற நேரடி போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக வழக்காடும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்களின் பிரச்சனையாக மட்டும் கருதாது,பொது மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனையாகவும் கருதி தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு சுமுகத் தீர்வுகாண முன் வரவேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, June 28, 2016

அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் காற்றோடு கலந்தார்!

அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவசர பிரிவில் வருத்தமான நிலையில் இருக்கிறார் என்றதும் மிகுந்த வேதனையுற்றேன். கடந்த ஓரிரு நாட்களாக இணையதள நேரலை அண்ணன் Ammapet G Karunakaran அவர்களிடம் விபரம் கேட்டறிந்தேன். ஆனால் அண்ணனுக்கு இன்றைக்கு அழைத்து விபரம் கேட்பதற்குள் அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் இயற்கையுடன் கலந்துவிட்டார் என்ற செய்தியை இன்று 28-06-2016 காலை முகநூல் திறந்த உடனே கண்டதும் அதிர்ச்சியுற்றேன்.

நேற்றைய பொழுது சிறு முன்னேற்றம் இருக்கிறது என தகவல் வந்த போது சிறு ஆசுவாசம் அடைந்தேன். நண்பர்கள் அனைவருமே இணையத்தின் மூலமாகவே தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினார்கள். ஆனாலும் இயற்கை அவரை அரவணைத்துக்கொண்டது.

அவரின் இரண்டு குழந்தைகளும் சிறு வயதிலே தந்தையை இழந்து தவிக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் கனமாகிறது. குழந்தைகளுக்கு மன தைரியமும், மனைவிக்கு ஆறுதலும் கிடைக்கட்டும்.

அண்ணனே! நீங்கள் காட்டிய பாதையிலே இணையத்தின் கழக கண்மணிகள் நாங்கள் உறுதியோடு பயணிப்போம். அண்ணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, June 24, 2016

தனியார் பள்ளிகளை முந்தும் கொடுப்பைக்குழி அரசு பள்ளி!

இந்திய தேசத்தின் தென் முனையில் அமைந்திருக்கும், தமிழ்நாடு மாநிலத்தின் எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமான கொடுப்பைக்குழியில் பல உயர் பதவிகளை வகித்து வரும் அதிகாரிகளை உருவாக்கிய அரசு மேல் நிலை பள்ளி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

அதனுடன் அரசு தொடக்கப் பள்ளியும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆங்கில மொழி தெரிந்திருந்தால் வேலை வாய்ப்புகளுக்கு தொடர்பு மொழியாக பயன்படும் என்ற காரணத்தினால், கிராமப்புற மாணவர்களுக்கும் ஆங்கில வழிக் கல்வி கொண்டு சேர்க்கும் பொருட்டு இந்த கல்வியாண்டு (2016-2017) முதல் LKG, UKG வகுப்புகளும் 1 முதல் 4 வகுப்புகள் வரையிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த வகுப்புகளுக்கு ஆங்கில புலமை மிக்க திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்தி கற்கும் மாணவர்களுக்கும், தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்ட முதல் வருடத்திலேயே 25 மாணவர்களை பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்திருக்கிறார்கள். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை தொடக்கப் பள்ளியிலும் சேர்த்து 96 மாணவர்களாக உயர்ந்து தரமான கல்வியை பெற்று வருகிறார்கள்.

தரமான ஆங்கில வழி கல்வியை கொடுக்கும் கொடுப்பைக்குழி அரசு பள்ளியின் இந்த அதிரடி மாணவர் சேர்க்கையால், தனியார் பள்ளிகளை கல்வி தரத்தில் பின்னுக்கு தள்ளி, கொடுப்பைக்குழி அரசு பள்ளியானது தர வரிசையில் முந்திக் கொண்டிருக்கிறது என்று கல்வியாளர்களும், கொடுப்பைக்குழி வட்டார மக்களும் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுற்றுவட்டார பொதுமக்களும் தங்களது குழந்தைகளை, கொடுப்பைக்குழி அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பள்ளியில் சேராத மாணவர்களை பெற்றோர்கள், தரமான கல்வியின் தேவையை உணர்ந்து விரைவில் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருங்கால தமிழக உயர் அதிகாரிகளாக மாற்ற வித்திடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வளர்ச்சிக்கு அயராத முயற்ச்சியில் ஈடுபட்ட பள்ளி தலைமையாசிரியர் திரு. மரியமிக்கேல், ஆசிரியர்கள் மற்றும் கொடுப்பைக்குழி வட்டார மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பள்ளியானது மேலும் அதீத வளர்ச்சி பெற வாழ்த்துவதோடு, சுற்றுவட்டார இளைஞர்களும், முன்னாள் மாணவர்களும் பள்ளி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றவும் அன்போடு விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
[முன்னாள் மாணவன்]

Tuesday, June 14, 2016

வைகோ மற்றும் அவரின் தொண்டனுக்கும் இணையத்தின் ஈடில்லா வாழ்த்துக்கள்!

44 ஆண்டுகளுக்கு முன் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் வைகோ-ரேணுகாதேவி தம்பதியரின் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்பாறினார். அந்த தம்பதியர்தான் இன்றளவும் நாடறிய நல் வாழ்க்கை நடத்தும் தம்பதியர் என்ற பெயருக்கு சொந்தகாரர்கள். கணவனின் பொது வாழ்விற்கு சற்றும் எதிர்மறை இல்லாமல், எதிர்பார்ப்பிற்கு மேலாக ஊக்கமும் ஆதரமும் அளிப்பவர்தான் திருமதி வைகோ அவர்கள்.


தலைவர் வைகோ அவர்களும் பொது வாழ்வில் கடந்த 52 ஆண்டுகளாக ஈடுபட்டு நாடறியும் தலைவர்களில் ஒருவராய், குடும்பத்தை செவ்வனே வழி நடத்தி, கழக கண்மணிகளுக்கு முன்மாதிரியார் விளங்குகிறார்.


உலக மூலையில் இருந்தெல்லாம் வாழ்த்துக்கள் குவிந்திருக்கும். அடியேனும் தொண்டனாக திருமதி&திரு வைகோ தம்பதியினருக்கு நெஞ்சார்ந்த திருமண நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


தலைவருக்கு திருமண நாளென்றால், அவரது தொண்டருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னால் புலவர் செவந்தியப்பன் தலைமையில் திருமணம் நடந்தேறியுள்ளது. அந்த வைகோயிஸ்ட் தான் சிங்கப்பூர் மறுமலர்ச்சி பேரவையின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமான தூண் துவார் சுப்பையா அவர்கள். அவர்களுக்கும் நெஞ்சார்ந்த திருமண நாள்.


இந்த ஜூன் 14 ஆம் தேதியின் சிறப்பு என்னவென்றால் புரட்சியாளன் சே குவேரா பிறந்த தினமும் இன்றுதான்.


மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, April 13, 2016

கருப்பு ஐயா அவர்களுக்கு உதித்த திருநாள் வாழ்த்துக்கள்!

இணையத்தில் இயன்ற அளவு நல்ல செய்திகளை பரப்புவதில் வல்லவர்.

நண்பர்களை ஒருங்கிணைத்து உபசரிப்பதில் உன்னதமானவர்.

கழகத்தின் கடைத் தொண்டனாய் கால் கடுக்க களப்பணியாற்றுபவர்.

பிணி தீர்க்கும் உட்பொருட்களை உவகையோடு கொடுப்பவர்.

அன்பிற்கு ஆழமான அர்த்தத்தை தன்னகத்தே சிறப்பாக கொண்டவர்.

சிறியவரையும், சிரிப்புடனே கவர்ந்திழுக்கும் காந்த குணமுடையவர்.

பார் போற்றி, புகழ் பெற, பல கோடி ஆண்டுகள் நீடூடி நீர் வாழ,

புன்னகை பூத்துக் குலுங்கும் காலை வேளையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்.

Tuesday, April 12, 2016

புரட்சி புயலின் கரும்புலிகள் தளபதி முத்தையா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்து!

தனது இளமை பருவம் தொட்டே வைகோ என்ற மாமனிதனை 30 வருடத்திற்கும் மேலாக பக்கத்தில் இருந்து பழகிய சகோதரர் மறுகால்குறிச்சி முத்தையா அவர்கள். 

தமிழின முதல்வர் என்று அன்போடு அழைக்கப்படும் வைகோ அவர்கள் உருவாக்கிய கரும்புலிகள் படை (தொண்டர் படை) யில் தளபதியாக வலம் வருகிறார். எதிரிகள் வைகோ அவர்களை அண்டாதவாறு போர் புரியும் விசுவாசத்திற்கு மரு உருவமானவர்.

எத்தனை தியாகங்களை செய்தாலும், தன் பெயர் வரவேண்டுமென்று எள்ளளவும் தன் கற்பனையில் கூட நினைத்து பார்க்காத கருப்பு மாணிக்கம். தொண்டர்களை அரவணைத்து செல்லும் ஆற்றல். 

கழக கண்மணிகளை எந்நாளும் நினைவில் வைத்திருக்கும் பேராற்றல் படைத்த அறிவி ஜீவி அண்ணன் மறுகால் குறிச்சி முத்தையா அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

பாசத்துடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, April 8, 2016

கழகத்தை உயிர் மூச்சாக கருதும் தொண்டனின் மதிமுக கொடி வண்ணம், பூசிய வீட்டின் சுவரை மறைப்பதா? பாசிச ஜெயலலிதாவின் காவல்துறைக்கு ஓமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனம்!

மதிமுக என்னும் பேரியக்கம் தொடங்கும் முன்பே, தலைவரின் வீர உரைகளாலும், செயல்களாலும் ஈர்க்கப்பட்டு தமிழின முதல்வராக போற்றப்படும் வைகோ அவர்களின்  கொள்கைகளை பின்பற்றியும், கழகத்தின் கண்மணிகளுடன் கழக தொடக்கம் முதல் இன்று வரை உறுதியோடு கழகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், ஓமன் மதிமுக இணையதள அணியின் தலைமை உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீரமங்கலம் ஊராட்சியின், முள்ளியான் வயல் என்னும் கிராமத்தை சார்ந்த ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது சொந்த ஊரில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். கடுமையான வறுமையின் மத்தியிலும் கழகத்தின் மேலுள்ள காதலால் கழகத்திற்காக ஆற்றும் பணிகளை அவர் நிறுத்தி வைக்காமல், தன்னாலான பணிகளை உலக மக்களிடத்தில் உணர்ச்சிபூர்வமாக எடுத்து செல்கிறார்.

ஜகுபர் அலி அவர்கள் வைகோ என்ற மனிதனின் கொள்கை பிடிப்பால் வைகோ அவர்களை தீவிரமாக உள்வாங்கியதால், தன்னுடைய வீட்டு சுவர், கதவு மற்றும் ஜன்னல் ஆகிய அனைத்தையும் மதிமுக கொடி தாங்கிய சிகப்பு கருப்பு சிகப்பாக மாற்றியிருந்தார்.

அது மட்டுமலாமல், வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்த வைத்த வாதங்களால், தன்னை மகனாக கருதிய வாஜ்பாய் அவர்களிடத்திலும் பேசி குவைத் நாட்டின் தலால் ஆஸ்மின் என்ற பெண்ணை, ஆந்திர காதர் பாட்சாவுடன் வாழ அனுமதி வாங்கி கொடுத்து மனிநேயத்தால், அந்த பெண்ணின் பெயரையே தனது மூத்த மகளுக்கு (10 வயது இப்போது) பெயராக சூட்டி அழகு பார்த்தார் ஜகுபர் அலி அவர்கள். மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் அனைவருக்குமே கழக கொடி வண்ணத்தினாலான உடையை வாங்கி கொடுத்து ஆனந்தமடைந்தார்.

கழக கொடி வண்ணம் வீட்டை அலங்கரித்திருந்தாலும், வீட்டின் கூரைக்கு மேல் பகுதியிலும் மதிமுக கொடி பறக்க வேண்டுமென்று எண்ணி மதிமுக கொடியை வீட்டில் மேல் மின் இணைப்பு தாங்கி செல்லும் கம்பத்திலே பட்டொளி வீசி பறக்கவிட்டார்.

இதையறிந்த ஜெயலலிதாவின் காவல் துறை 3 வார காலத்திற்கு முன் ஜகுபர் அலி அவர்களின் வீட்டிற்கு வந்து கொடியை கழற்ற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஜகுபர் அலி கொடியை கழற்ற முடியாது, கொடி என்னுடைய வீட்டில்தான் பறக்கிறது. பொது வெளியில் பறக்கவில்லை. இன்று சாயங்காலத்திற்குள் எங்கள் கூட்டணியிலுள்ள 5 கட்சிகளின் கொடியையும் கட்டுவேன் என்று சவால் விட்டு சாயங்காலத்திற்குள் வீட்டின் மேல் 5 கட்சிகளின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.

அதன் பின்னர் எப்போதும் அவர் வீட்டிற்கு தாலுகா அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகளும் வந்து கொடியை கழற்ற மிரட்டியபடியே இருந்துள்ளனர். சுவரிலோ, கதவிலோ, நீங்கள் உடுத்தும் உடையிலோ கட்சி சின்னம் இருக்க கூடாது என்று பேசி சென்றுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர் என்னுடைய பிள்ளைகள் உடையிலும் மதிமுக கொடிதான் இருக்கிறது எப்படி அகற்ற முடியும் என பேசியிருக்கிறார்.

இப்படி பரபரப்பான சூழலில் ஊர் பெரியவர்கள் சொல்லியதால், அவர்கள் மேலுள்ள மரியாதையால் வீட்டின் மேல் பறக்கவிட்ட கொடியை இறக்கினார்.

ஆனாலும் 5 நாட்களுக்கு முன்னர் தாலுகா அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களின், வீட்டிற்கு வந்து அவருடைய வீட்டின் சுவரில் வரைந்துள்ள மதிமுக கொடியின் நடுவிலுள்ள கருப்பு வண்ணத்தை செய்தி தாள்கள் கொண்டு மறைத்துள்ளனர். இதையும் பொறுத்துக் கொண்டார் ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

இந்நிலையில், நேற்று 07-04-2016 இரவு 9.30 மணி அளவில் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் பயணித்த போது ஒரு காவலர் அவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தார். அவரும் காவலர் சாதாரணமாக அமருகிறார் என்று நினைக்க ஜகுபர் அலி அவர்கள் இரவு பயணத்தால் சிறுது கண் அயர அருகில் இருந்த காவலர் ஜகுபர் அலி அவர்களின் கையில் விலங்கு மாட்டியிருக்கிறார். இந்த விலங்கு மாட்டிய கையோடுதான் துணிவுடன் காவலருடன் சேர்த்து செல்பி எடுத்தி அனுப்பி யிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்டுதான் அருகில் அமர்ந்து கைது செய்திருக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது. உடனே ஜகுபர் அலி அவர்களும் ஏன், எதற்காக கைது செய்துள்ளீர்கள் என்று கேட்க, நீ கட்சி கொடி வைத்து பிரச்சினை செய்கிறாய் என்று சொல்லி புதுக்கோட்டை டவுண் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போதும் ஜகுபர் அலி அவர்கள் என் பிள்ளைகளின் உடையிலும் மதிமுக கொடி இருக்கும், வீட்டு சுவரிலும் இருக்கும். எங்க மனதிலும் நிலைத்திருக்கும் என்று உறுதிபட கூறிவிட்டு, இது குற்றமென்றால் FIR பதிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களிடம், இந்த பிரச்சினை முதலமைச்சர் தனி பிரிவிற்கு சென்றுள்ளது (CM cell) என்று கூறியுள்ளனர். மேலும் இன்று காலை அவரை விடுவித்துள்ளனர்.

இதனால் காவல்துறை ஜனநாயகத்தை அடக்கி ஒடுக்க நினைத்து ஜகுபர் அலி அவர்களை கொடுமை செய்கிறது. இதை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வன்மையான கண்டிக்கிறோம். மேலும் இதே போல அடக்குமுறையில் ஈடுபடகூடாது எனவும் ஜெயலலிதாவின் பாசிச அரசின் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அடக்கி ஆள நினைப்பதால் அடங்கி விடுவார்கள் என நினைத்தால், இன்னும் வேகமாக மதிமுகவும், தொண்டர்களும் வீறுகொண்டெளுவோம் எனவும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

ஜகுபர் அலி அவர்களின் சொந்த வீட்டில், சொந்த செலவில் வரைந்திருக்கும் மதிமுக கொடியை மறைக்கும் ஜெயலலிதாவில் காவல்துறை, ஜெயலலிதாவின் படம் அடங்கிய, உணவகம், மருந்துகடை, கட்டடங்கள், காணொலி காட்சிகள் அனைத்திலும் ஜெயலலிதாவின் படங்களை அகற்றாதது ஏன்?

ஜனனாயகத்திற்கு ஜெயலலிதாவில் ஆட்சியில் இடமில்லாமல் போனதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆணவ போக்கையே காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை பிரவேசம். ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் மயம். இது தவிர்க்கப் படவேண்டும். இதற்கு உறுதுணையாக,  கைக்கூலியாக இருக்கும் காவல்துறையயும், ஜெயலலிதா அரசையும் கண்டிக்கிறோம். மே 16 ல் இதற்கு முடிவு கட்டப்படும்.

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி