Tuesday, June 30, 2015

சட்டத்தை மதிக்காமல் சீருடையுடன் மொட்டையடித்த அதிமுக போலீஸுக்கு கடும் கண்டனம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து தேனியில் அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் மொட்டை போட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டுக்கொண்டார். இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அவரது பெயர் வேல்முருகன். இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று இத்தனை நாளாக விரதம் இருந்த நேரு சிலை அருகில் மொட்டை போட்டு தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். வேல்முருகனின் விரதம் இதோடு முடியவில்லையாம். பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதா பிறந்த நாளில், மிக அதிக எடையுள்ள வாகனத்தை தன்மீது ஏற்றி சாதனை புரிய உள்ளாராம்.

இப்படிபட்ட அரசு அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும். ஆளூம் கட்சி ஆதரவு ஆட்கள் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், எந்த சட்டத்தையும் மீறலாம் என்ற மனப்பான்மை அதிமுகவினரிடையே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே அராஜக ஆட்சியை அதிமுக கட்டவிழ்த்துள்ளது மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக போலீஸ் அதிகாரி சீருடையோடு பணியிலிருக்கும்போதே சட்டத்தை மீறியுள்ளது அதிமுக அரசின் அடாவடியை காட்டியுள்ளது. இதற்கு மத்திய புலனாய்வு துறையானது ஆய்வு செய்து அந்த காவலரை தேச துரோக வழக்கில் கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Thursday, June 25, 2015

மனித உறவுகள் சீராக இருக்க A to Z 🔔

இல்லத்தில்...அலுவலகத்தில்... பொது வாழ்வில்...
மனித உறவுகள் சீராக இருக்க A to Z 🔔
 
🔔APPRECIATION - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்
 
🔔BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்
 
🔔COMPROMISE - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
 
🔔DEPRESSION - மற்றவர்களின் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்
 
🔔EGO - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்
 
🔔FORGIVE - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்
 
🔔GENUINENESS - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்
 
🔔HONESTY - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
கௌரவமாகக் கருதுங்கள்
 
🔔INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்
 
🔔JEALOUSY - பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.
 
🔔KINDNESS - இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்
 
🔔LOOSE TALK - சம்பந்தளிலாமலும் , அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்
 
🔔MISUNDERSTANDING - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்
 
🔔NEUTRAL - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்
 
🔔OVER EXPECTATION -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்
 
🔔PATIENCE - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்
 
🔔QUIETNESS -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்
 
🔔ROUGHNESS - பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்
 
🔔STUBBORNNESS - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்
 
🔔TWISTING - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை  இங்கேயும் சொல்வதை விடுங்கள்
 
🔔UNDERESTIMATE - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்
 
🔔VOLUNTARY -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று  காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்
 
🔔WOUND - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்
 
🔔XEROX - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்
 
🔔YIELD - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை
 
🔔ZERO - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, May 1, 2015

தொழிலாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த மேதின வாழ்த்து!

ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள் மத்தியில், நெற்றி வேர்வை நிலத்தில் சொட்ட சொட்ட கக்ஷ்டபட்டு உழைக்கும் தொழிலாளர்கள், மற்றும் உண்மையாக பணி செய்யும் அலுவலக தொழிலாளர்கள் அனைவரும், மே தினமான 1ஆம் தியதி பெருந்திரளான மக்கள் ஒன்றாக கூடி தொழிலாளர் தினத்தை கொண்டாடி மகிழ வேண்டும். 

தொழிலாளர்களை பெருமுதலாளிகள் அடிமைகளாக நடத்துவதை எதிர்த்தும், தொழிலாளர்களின் ஊதியங்கள் சரியாக கிடைக்கவும், பென்சன் காலங்களில் வயது முதிர்ந்த நிலைகளில் மருத்துவ காப்பீடுகளை இலவசமாக கிடைக்கவும் இந்த நன்னாளில் மத்திய அரசானது தொழிலாளர்களின் நிலையை அறிந்து நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும். 

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியாவில் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினமான மே 1 ஆம் தியதி வைகோ அவர்களின் தனி நபர் மசோதா மூலம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டதுதான் இன்றளவும் மக்கள் இந்த தினத்தை கொண்டாட வசதியாக அமைந்துள்ளது.

தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் ஒருவரையொருவர் அன்பு பாராட்டி, இயலாதவர்களுக்கு உதவி செய்து, அறியாதவர்களுக்கு கற்பித்து, கோபப்படுகிறவர்களுக்கு அன்பை ஊட்டி, எரிச்சலடைபவர்களுக்கு வேலையின் தன்மையை விளக்கி, செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து போற்றி தகுந்த மரியாதை கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நல்ல முறையில் செலவிட்டு, குடும்பத்தையும், சமுதாயத்தையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சபதம் ஏற்பதோடு, இந்த நாளில் தொழிலாளர்களுக்கு எனது அன்பு நிறைந்த தொழிலாளர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 28, 2015

இளைஞர்களை பாழாக்கும் குளிர் பானங்கள் உசார்!!!!

அன்பு தமிழ் உறகளே!!! 

இந்த படத்திலுள்ள குளிர் பானங்களை பாருங்கள். அதில் அடங்கியுள்ள சர்க்கரை அளவையும் பாருங்கள். இது மக்களுக்கு தீமையை விளைவிக்க கூடியது... அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாகரீகம் என்று இப்படிபட்ட குளிர் பானங்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள். இதை பற்றி விழிப்புணர்வு செய்யும் பொருட்டு, அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் இந்த படத்தை பதியுங்கள். வருங்கால நமது தலைமுறையையாவது காப்பாற்ற முயல்வோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 14, 2015

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பிறக்கும் போது அம்மா என்னும் முதல் வார்த்தையையே தமிழில்தான் பேசி தொடங்குகிறது குழந்தை. அப்படிப்பட்ட பெருமை தமிழுக்கு உண்டு. சித்திரை திரு நாளிலே தமிழர்கள் அதனை புத்தாண்டாகவும் கொண்டாடி மகிழுகின்றனர். இந்த தினத்திலே அன்பு ஓங்கவும், சமாதானம் பெருகவும், ஒற்றுமை பெருகவும் இந்த தமிழர் சித்திரை திருநாளில் சபதம் ஏற்போம். 

இந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழ சித்திரை திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, April 12, 2015

காவிரி நீரை கேட்ககூடாது என கூறிய சு.சுவாமிக்கு கண்டனம்!

ரெய்ச்சூரில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் என கூறிக்கொள்ளும் சுப்பிரமணியன் சுவாமி, காவிரி நீரை தமிழ்நாடு கேட்க கூடாது எனவும், தண்ணீரை பெற தமிழ்நாடு வேறு வழிகளை தேடவேண்டுமெனவும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் பாஜக முத்த தலைவரே இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் பேசியிருப்பது மிகுந்த வருத்தத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சுவாமியின் இந்த தமிழ் துரோக பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது. 

காவிரி நீரை பெற தினந்தோறும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் கண்மணிகள், விவசாயிகள், பொதுமக்களென போராடிக்கொண்டிருக்கும் வேளையில் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு பேசியுள்ளது தமிழர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. 

எனவே தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் மந்திரி பொன்.ராதாகிருக்ஷ்ணன் அவர்கள் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சை கண்டிக்க வெண்டுமென கேட்டுகொள்கிறேன். மேலும் அமைச்சர் காவிரி நீர் பிரச்சினையில் மேகதாது அணைய தடுக்க பிரதமரிடத்தில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, April 7, 2015

₹30 ல் பிளாஸ்டிக் ஆதார் அட்டை!

ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு 30 ரூபாய் கட்டணத்தில் ஏ.டி.எம் கார்டு வடிவில் ஆதார் அட்டை வழங்கும் சேவை அரசு பொது இ-சேவை மையங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அட்டை கிழியவே கிழியாது என்பதுதான் முக்கிய அம்சமாம்.நாடுமுழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 4.74 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை தண்ணீரில் விழுந்தால் கிழிந்துவிடும் அளவில்தான் உள்ளது.அதனால் ஆதார் அட்டை தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு அட்டை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.அரசு இ-சேவை மையங்கள்இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 254 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது மற்றும் அரசின் சமூக நல திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு புதிய சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏ.டி.எம் கார்டு வடிவில்"ஆதார் அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எளிது. இதற்காக யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.ரூ.30க்கு ஆதார் கார்டுஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பிரின்ட் செய்ய முடியும். விரைவில் கருவிழி படலத்தை பதிவு செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை அங்கீகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு நபர் எத்தனை அட்டைகளை வேண்டுமானாலும் தலா ரூ.30 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை" என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி மைக்கேல்