Thursday, September 8, 2016

கார்த்திகை பெயர் கொண்ட அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

அண்ணனின் அளவிலா அன்புக்கு,

ஆட்கொண்டவனில் நானும் ஓர்வனாக,

ஆசைகளை விட்டெறிந்தவர், கழகமே கண்ணாக,

உயர்வென்னும் உன்னத மேடையில் வீற்றிருக்க,

பொது வாழ்வை போற்றி பாதுகாக்க,

இயலான் மேல் உயர, இவர் வழி விட்டு விலகி கூட,

இவர் புகழ் எண்ணி பொறுக்கா வண்ணம்,

எதிரியின் அசுர முகம் வெளியில் தெரிய,

அண்ணனே அகன்ற பாதை அமைத்து,

அடுத்தவர் வாழ்வியலுக்க நீர் பாய்ச்சி வித்திட,

உம் புகழ் குலையா வண்ணம் இயற்கை உமை காக்க,

பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு சகோதரனாக.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, September 2, 2016

மலேசிய தமிழின உறவுகளுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி பாராட்டு!

ஆசியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் மாநாடு மலேசியா கோலாலம்பூரில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் கலந்துகொள்ள தமிழின படுகொலையாளன் இலங்கை முன்னாள் அதிபர் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழீழ மண்ணில் 140000 தமிழர்களை படுகொலை செய்துவிட்டு அந்த ரத்தக் கறை படிந்த மண்ணில் வாழ்ந்து தமிழினத்தையே கருவறுத்த கொடியவன், கொத்து குண்டுகளை ஐநா தடை செய்த போதும் பயன்படுத்தி சின்னஞ்சிறு பிஞ்சுகளை கொன்றவன், தமிழ் யுவதிகளை வன்புணர்ந்து அழித்த கொடியவன், தமிழர்களை அடிமைகளாக அகதிகளாக உருவாக்கிய கொடுங்கோலன் ராஜபக்சே, தமிழர்கள் வாழும் பூமியாம் மலேசியாவிற்கு வருகை தருவதை எதிர்த்து, தமிழீழம் மலர தனது போராட்டை வாழ்வை 50 ஆண்டுகளுக்கு மேலாக அற்ப்பணித்திருக்கிற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை போல நாடு கடந்தும் தமிழனாக தனது பாரிய அளவிலான பங்கை தமிழீழம் மலர செயலாற்றிக்கொண்டிருக்கின்ற பேராசிரியரும், பினாங்கு துணை முதலமைச்சருமான ராமசாமி அவர்களின் தம்பிமார்களான டேவிட் மார்சல், சதீஸ் முனியாண்டி மற்றும் பெயர் தெரியாத தமிழர்கள், உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அரசியல் கட்சி பாகுபாடு பாராமல் தமிழர் என்ற ஒருமைப்பாட்டில் ஒன்றாக இணைந்து கொடியவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னங்கால் பிடரியில் விழுந்த அடியாக பின்புறமாக தங்கும் விடுதியில் இருந்து ஓட விரட்டியுள்ளதற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழர்களான நமது உணர்வுகள் ஐநாவில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நேற்றும் இன்றும் (2016 செப் 1 & 2) நீங்கள் நடத்திய கொடியவன் ராஜபக்சேக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்களை உலகம் கவனித்திருக்கிறது. காலம் மாறும். தமிழர்கள் சுந்தந்திரமாக வாழ ஒரு நாடு கிடைத்து தமிழீழம் சொந்த மண்ணில் மலரும்.

இரிட்டீரியா, மால்டோவா, தெற்கு சூடான் வரிசையில் ஸ்காட்லாந்தும் தனி நாடாகும். அதன் அடிப்படையில் தமிழர்களின் உணர்வுகளும், அவல குரலும் உலக நாடுகளின் செவிகளில் ஆக்ரோசமாக ஒலிக்க அனைத்து நாடுகளின் உண்மையான வெளிப்படையான ஆதரவுடன் தமிழருக்கான விடுதலைக்கு உண்மையான தீர்வு தமிழீழ மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று என்று பிரசல்சில் முதல்முதலாக முழங்கினாரே தென்னாட்டு சிங்கம், நாங்கள் தமிழின முதல்வராக போற்றும் வைகோ அவர்கள் சொன்னது போல தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு ஐநாவின் கண்காணிப்பில் நடக்கும். அந்த நாள் தமிழீழம் மலர்ந்து புலிக்கொடி ஐநாவில் பட்டொளி வீசி பறக்கும்.

அது வரை நமது போராட்ட களங்களை எப்போதும் போல வலுப்படித்திக்கொண்டே இருப்போம். அனைத்து நாட்டில் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க உலக நாடுகள் கவனம் தமிழர்களின் நியாமான கோரிக்கையின் உண்மையை உணர்ந்தே தீரும். கொடியவன் கொட்டம் அடக்க தொடரட்டும் உங்கள் போராட்டம். தொப்புள் கொடி உறவுகள் எப்போதும் உங்கள் விழிகளுக்கு செவிமடுப்பவர்களாகவே இருப்போம். மலேசிய தமிழ் மண்ணில் ராஜபக்சே, மற்றும் அவனை போன்ற இனபடுகொலையாளர்கள் எப்பொழுதுமே கால் பதிக்காதவாறு தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறும் கேட்டுகொள்கிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, September 1, 2016

அரபிக் கடலின் அடிவாரத்திலிருந்து நட்பின் திருமண நல் வாழ்த்து!

சின்ன வயதிலே சிரிப்போடு வேலியெல்லாம் விளையாடி,

மட்டை பந்து விளையாட்டில் மட்டை அடி பட்டதுண்டு,

முப்பிள் மிதிவண்டி பயணம், 3 ஊர்கள் தாண்டி செல்ல,

முப்பதே நிமிடத்தில் தன் நிலம் வந்து சேர்வோம்,

உன் அப்பா வரும் வேளை உனது நிலத்தில்,

அவர் சென்றதுமே பொது நிலத்தில் நண்பர்களுடன்,

சிறு குறு பருவம் முதல் வாலிபம் வரை ஒன்றானோம்.

கால் வயிறு கஞ்சிக்கு மொழி அறியா மாகாணம்,

இளமை கால வாழ்வியலின் வசந்தங்கள் தேடி வர,

உனை கட்டியணைக்க ஒரு குஞ்சு நாடி வர,

இமை பொழுதும் விழி மூடி புன் சிரிக்க,

லோகத்தினை கண்டபடி முகம் வருடி கண்ணயர,

புது வாழ்வின் பொன் நாட்கள் புது யுகங்கள் ஆகிவிட,

மலர் கட்டில் மாளிகையில் மனம்புகுந்து விலாசம் தேடி,

பூமகளை முத்தமிட்டு அன்பினால் அகம் தழுவி,

கண்ணாடி சில்லின் இசை போல மழலைகள் மொழி கேட்டு,

இன்பமுற்று இல்லறம் காண, இந்த புது நன்னாளில்,

கடல் கடந்து சுவாசித்தாலும் ஆக்சிஜனாய் நட்பு இருப்பதால்,

மனதார வாழ்த்துகிறேன். திருமண நல் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

Wednesday, August 24, 2016

நாஞ்சில் நாட்டு மைந்தன் சிங்கப்பூர் மறுமலர்ச்சி நண்பர்கள் செயலாளர் அண்ணன் சுகுமாரன்!

தமிழ்நாட்டின் தென் கோடியாம் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் குமரி மாவட்டத்தின் மைந்தன் அண்ணன் சுகுமாரன் அவர்களிடம் முகநூலில் பேசியிருக்கிறேன். அவரை பற்றி மிக அறிந்திருந்தாலும் அவரிடம் அலைபேசியினூடாக பேசியதில்லை. ஆனால் நேற்று 23-08-2016 அரை மணி நேரத்திறு மேலாக உரையாடினார்.

நேற்று இரவு முகநூலில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணன் சுகுமாரன் அவர்கள் அழைக்கிறேன் என்றார். சரி அண்ணா என்று எனது அலைபேசி இலக்கத்தை பரிமாற அழைப்பு வந்தது. 

அண்ணா நலமா என விசாரிக்க அவரும் நலம் விசாரித்தார். ஊர் பற்றி பேசினோம். இப்போது அதிக மாற்றங்கள் ஊரில் இருக்கிறது என்பதை பற்றியும், ஊரில் இருக்கும் குடும்பங்கள், நண்பர்கள் அனைவரையும் பற்றி பேசினோம்.

அப்போது அவர் ஊரான மேல்கரை அருகிலுள்ள திங்கள் சந்தை பற்றி பேசும்போது சம்பத் சந்திரா அவர்கள் தொடங்கி கழக பேச்சுக்கள் தொடர்ந்தன. மக்கள் மனோ நிலை தேர்தலில் எப்படி மாறுபடுகிறது என்பதையும் பேசினோம். 

அண்ணன் சிங்கப்பூர் மறுமலர்ச்சி நண்பர்கள் செயலாளராக இருப்பதால் சிங்கப்பூர் வாழ்க்கை முறைகள், வாழ்வில் ஏற்ப்படுகின்ற சந்தோசங்கள், இழப்புகளால் ஏற்ப்படுகின்ற மன வருத்தங்கள் அனைத்தையும் அசைபோட்டோம். ஆனாலும் நாஞ்சில் நாட்டு மண்ணுக்கே உண்டான வீரம் நிறைந்திருப்பதால் அண்ணன் அனைத்து தடைகளையும் தாண்டி சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்று சொல்ல எனக்கும் மனதில் மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது நான் ஓமனில் இருப்பதை பேசும்போது, அவரும் 20 வருடத்திற்கு முன்னர் நான் இருக்கும் ஊரின் அருகிலுள்ள பர்க்கத் அல் மவுஸ் என்னும் இடத்தில் அவர் வேலை பார்த்ததையும், அந்த வேலைகளை விட்டு இடம் பெயர்ந்ததையும் சொல்லும்போதே அண்ணன் கழக வாஞ்சை அந்த காலத்திலேயே மேலோங்கி இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது,

எங்கள் மாவட்டத்து காரர் அண்ணன் சுகுமாரன் அவர்கள் 2014 ல் மலேசியாவில் ஒரு வார காலம் தங்கி தலைவர் வைகோ அவர்களுடன் இருந்ததையும், பின்னர் சென்னையில் தலைவரையும் சந்தித்ததையும் பேச இன்னும் பல நினைவலைகள் எங்கள் மனதில் நிழலாடின.

தமிழனுக்கே உரிய அன்பு கலந்து உங்களிடன் பேசவேண்டும் என நினைப்பேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. அதனால்தான் இன்று அழைத்தேன் என்று அண்ணன் சொன்னபோது, என் மனதில் எவ்வளவு பெரிய ஆள் எளியவனான என்னையும் அழைத்து நலம் விசாரித்து அன்பு பாராட்டுகிறார் என்று நினைக்க, அதற்கு காரணமானவர் ஈரெழுத்து மந்திரம் வைகோ அவர்கள் தான் என்பது இன்னும் உணர்வுபூர்வமானது. 

மதிமுக என்பதே ஒரு குடும்ப உணர்விலே இயங்கும் இயக்கம் என்பது இதே போன்ற சான்றுகள் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அயல் நாட்டிலிருந்தாலும் கழக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார். அனைத்து சவால்களையும் திறம்பட கையாண்டு அண்ணன் இன்னும் வாழ்வில் அதிக வெற்றியடைய வேண்டும்.

அன்பு பாராட்டிய அண்ணனுக்கு மிக்க நன்றிகள்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, August 23, 2016

இசை நாயகன் ஜிம்-க்கு பிறந்த நாள் வாழ்த்து!

கச்சி விளையாடிய பருவத்தில்,

கிணத்தருகே வேடிக்கை பார்ப்பான்,

சிங்காம்பிள்ளை விளையாடும்போது,

சினத்துடன் சீறி செல்வான்.

மட்டைப்பந்து விளையாடும்போது

மல்லு கட்டி மடை திறப்பான்.

உடற்பயிற்ச்சி கூடத்தினை

அவன் பெயராலே அழைத்ததுண்டு.



நாங்களே சிறுவர்கள், ஆனால் அவனோ,

எங்களுக்கே சிறுவனாக தெரிந்தான்.

நாங்களோ படித்து, பரதேசம் தேடி,

அவனோ வளர்ந்து வாலிபனாகிவிட்டான்.

தொண்டாற்றும் தன்மை கொண்டான்.

வருடங்கள் கடந்தன கல்லூரி மாணவனானன்.

இசையால் பல சபைகளை கையாண்டான்

இன்றோ இசையை உருவாக்கும் மேதையவன்.



இசையில் இயக்குனராகலாமே என்றேன். 

சினிமாவில் நாட்டமிலை என்றான்.

உயிருள்ள பொது இசையை நாடினாய்,

நாடு போற்றும் இசை கலைஞனாவாய்.

புகழ் பெரிதும் கிடைத்திடவே

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, August 21, 2016

"நாங்கள் கண்டெடுத்த திரவியம்" ஐயாவுக்கு பிறந்த தின வாழ்த்து!


விவாதத்திற்கு வேரமைத்து,

நீர் ஊற்றி தாகம் தணிக்க,

புயலாய் வந்து அசைத்து பார்த்து,

சக்தி உண்டா என சோதனையிட்டு,

பக்குவமாய எடுத்துரைத்தும்,

பண்பினை சொல்லி கொடுத்தும்,

அறுபதையும் ஆற்றலுடன் தாண்டி,

எங்கள் இளம் வயதை கவர்ந்திழுத்து,

அனைவரையும் தன்னில் அரவணைத்து,

அன்பென்னும் ஆயுதத்தால் ஆட்கொண்ட,

எங்களுக்கு கிடைத்த திரவியமே!

ஊர் போற்ற உங்கள் வாழ்வு

நாள் தோறும் சிறப்புற்றிட

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, August 19, 2016

பன்னாட்டு ஒளிப்பட தினமாம்!


இன்று 19-08-2016 பன்னாட்டு ஒளிப்பட தினமாம்...
.
இந்த ஒளிப்படத்தை விட நான் வேறென்ன ஒளிப்படத்தை பதிவிட முடியும். என் இனம் இன்னும் முள் வேலிக்குள் அல்லவா அடைந்து கிடக்கிறது. நஞ்சை அல்லவா அருந்த செய்கிறான் சிங்களவன். தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால் தமிழனுக்கு இந்த அவலம் நடந்திருக்குமா...
.
துரோகிகளும் எட்டப்பர்களும் இருக்கும் நாட்டில் தமிழீழ குடியரசு மலரும் நாள் தான் எமக்கான ஒளிப்படம் விடுதலையின் ஒளிப்படமாக இருக்கும்.

.
மறுமலர்ச்சி மைக்கேல்