தமிழ்நாட்டின் தென் கோடியாம் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் குமரி மாவட்டத்தின் மைந்தன் அண்ணன் சுகுமாரன் அவர்களிடம் முகநூலில் பேசியிருக்கிறேன். அவரை பற்றி மிக அறிந்திருந்தாலும் அவரிடம் அலைபேசியினூடாக பேசியதில்லை. ஆனால் நேற்று 23-08-2016 அரை மணி நேரத்திறு மேலாக உரையாடினார்.
நேற்று இரவு முகநூலில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணன் சுகுமாரன் அவர்கள் அழைக்கிறேன் என்றார். சரி அண்ணா என்று எனது அலைபேசி இலக்கத்தை பரிமாற அழைப்பு வந்தது.
அண்ணா நலமா என விசாரிக்க அவரும் நலம் விசாரித்தார். ஊர் பற்றி பேசினோம். இப்போது அதிக மாற்றங்கள் ஊரில் இருக்கிறது என்பதை பற்றியும், ஊரில் இருக்கும் குடும்பங்கள், நண்பர்கள் அனைவரையும் பற்றி பேசினோம்.
அப்போது அவர் ஊரான மேல்கரை அருகிலுள்ள திங்கள் சந்தை பற்றி பேசும்போது சம்பத் சந்திரா அவர்கள் தொடங்கி கழக பேச்சுக்கள் தொடர்ந்தன. மக்கள் மனோ நிலை தேர்தலில் எப்படி மாறுபடுகிறது என்பதையும் பேசினோம்.
அண்ணன் சிங்கப்பூர் மறுமலர்ச்சி நண்பர்கள் செயலாளராக இருப்பதால் சிங்கப்பூர் வாழ்க்கை முறைகள், வாழ்வில் ஏற்ப்படுகின்ற சந்தோசங்கள், இழப்புகளால் ஏற்ப்படுகின்ற மன வருத்தங்கள் அனைத்தையும் அசைபோட்டோம். ஆனாலும் நாஞ்சில் நாட்டு மண்ணுக்கே உண்டான வீரம் நிறைந்திருப்பதால் அண்ணன் அனைத்து தடைகளையும் தாண்டி சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்று சொல்ல எனக்கும் மனதில் மகிழ்ச்சியாக இருந்தது.
அப்போது நான் ஓமனில் இருப்பதை பேசும்போது, அவரும் 20 வருடத்திற்கு முன்னர் நான் இருக்கும் ஊரின் அருகிலுள்ள பர்க்கத் அல் மவுஸ் என்னும் இடத்தில் அவர் வேலை பார்த்ததையும், அந்த வேலைகளை விட்டு இடம் பெயர்ந்ததையும் சொல்லும்போதே அண்ணன் கழக வாஞ்சை அந்த காலத்திலேயே மேலோங்கி இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது,
எங்கள் மாவட்டத்து காரர் அண்ணன் சுகுமாரன் அவர்கள் 2014 ல் மலேசியாவில் ஒரு வார காலம் தங்கி தலைவர் வைகோ அவர்களுடன் இருந்ததையும், பின்னர் சென்னையில் தலைவரையும் சந்தித்ததையும் பேச இன்னும் பல நினைவலைகள் எங்கள் மனதில் நிழலாடின.
தமிழனுக்கே உரிய அன்பு கலந்து உங்களிடன் பேசவேண்டும் என நினைப்பேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. அதனால்தான் இன்று அழைத்தேன் என்று அண்ணன் சொன்னபோது, என் மனதில் எவ்வளவு பெரிய ஆள் எளியவனான என்னையும் அழைத்து நலம் விசாரித்து அன்பு பாராட்டுகிறார் என்று நினைக்க, அதற்கு காரணமானவர் ஈரெழுத்து மந்திரம் வைகோ அவர்கள் தான் என்பது இன்னும் உணர்வுபூர்வமானது.
மதிமுக என்பதே ஒரு குடும்ப உணர்விலே இயங்கும் இயக்கம் என்பது இதே போன்ற சான்றுகள் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அயல் நாட்டிலிருந்தாலும் கழக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார். அனைத்து சவால்களையும் திறம்பட கையாண்டு அண்ணன் இன்னும் வாழ்வில் அதிக வெற்றியடைய வேண்டும்.
அன்பு பாராட்டிய அண்ணனுக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment