Tuesday, January 31, 2017

கருஞ்சட்டை காதலன், களப்போராளி ஆட்டோ ராஜ் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வைகோவின் வானம்பாடி, ராஜபக்சேவை விரட்டி நேராக கறுப்பு கொடி காட்டிய மாவீரன், கழகத்தை காவல் காக்கும் காவலன், தெய்வத்திற்கு நிகராக தலைவனை மதிக்கும் தொண்டன். அன்பு காட்டும் ஆதிக்க வெறியர். அனைவரையும் தனது சிரிப்பால் கவரும் ஆளுமை. கருஞ்சட்டை காதலர், என்னிலும் அளவற்ற பாசம் கொண்டு சகோதரா என அழைக்கும், அண்ணன் பிறந்த பொன்னாளில், ஆயிரம் ஆண்டு காலம் நலமோடு வாழ்ந்து தமிழகத்திற்காக போராடும் புரட்சி புயலின் ஓசையில் வலம் வர வேண்டி அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

படம்: தம்பி ஜெயத்திற்கு நூல் வெளியீட்டு விழாவில் (4-1-17) எடுக்கப்பட்டது.

Friday, January 27, 2017

அவசர மருத்துவத்திற்கு உதவும் உலங்கு வானூர்தி தளம்!

இன்று 27-01-2017 காலை உணவிற்கு பின் என்னுடன் வேலை செய்யும் சகோதரர் Ismail Hussain அவர்கள் சற்று உடல் நலன் சரியில்லாத காரணத்தால் அவருடன் நானும் ஓமன் நாட்டின் நிஸ்வா நகரின் பொது அரசு மருத்துவமனை சென்றேன். அவருக்கு சிகிச்சையளித்துவிட்டு இடைவெளியில் மருத்துவருக்காக காத்திருந்தபோது ஏற்கனவே பார்த்த உலங்கு வானூர்தி நிறுத்தும் தளம் (Heli Pad) கண்ணில் பட்டது. உடனே சென்று ஒரு புகைப்படம் எடுத்தேன்.

அந்த மருத்துவமனையில் உலங்கு வானூர்தி நிறுத்தும் தளம் (Heli Pad) எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறதென்றால் அவசர தேவை மருத்துவத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம் தமிழ்நாட்டில் இப்படி அவசர மருத்துவ வசதிகள் கொடுக்க விரைவு பயணத்திற்காக வசதிகள் செய்யப்பdட மருத்துவமனைகள் இருக்கிறதா?

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.

Friday, January 20, 2017

ஓமன் வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டத்தில் அடியேன்!

கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழின உணர்வோடு, தமிழர் பண்பாட்டை, தமிழர் கலாச்சாரத்தை, தமிழர் அடையாளத்தை காக்கும் விதமாக இன்று 20-01-2017 காலை 10 மணி அளவில் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும் ஒன்று கூடி எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டது.

அரபு தேசம் என்பதால் இது போன்ற எழுச்சி போராட்டங்களுக்கு அனுமதி இல்லாததாலும், உள் அரங்கத்திலே உணர்வுமிக்க இளைஞர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

500 வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்ட அரங்கத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக 3000 பேருக்கு அதிகமாக தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கம் பெரிதாக இருந்ததாலும், ஓரளவு சமாளித்தாலும், கூட்டம் கட்டுக்கடங்காத காரணத்தால், தமிழின உணர்வாளர்கள் அரங்கத்தின் வெளியிலும் நின்றிருந்தனர்.

இதில் ஜல்லிகட்டு ஆதரவாக எழுச்சி முழக்கங்களையும், பீட்டாவுக்கு தடை செய்ய எதிர்ப்பு வீர முழக்கங்களையும் பெண்களும், இளைஞர்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்களும் முழங்கினார்கள்.

ஓமன் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 200 கிலோ மீட்டர், 300 கிலோ மீட்டர், 400 கிலோ மீட்டர், 500 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் தமிழர்கள் வந்து தமிழர் கலாச்சாரத்தை காக்க ஆதரவு முழக்கங்களை பதிவு செய்து இந்தியாவை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வலியுறுத்தவும், பீட்டாவை தடை செய்யவும் திரண்டிருந்தது, தமிழர் ஒற்றுமையை அரபு தேசத்திலே நிலைநாட்டப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே!

அடியேனும் தமிழின உணர்வோடு கலந்துகொண்டு வீரமுழக்கங்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுப்பியதும், பீட்டாவை தடை செய்ய கோரியதும் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியதென்பதை என் தமிழின உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை நீக்கும் வரையும், வாடிவாசல் திறந்து காளைகள் ஓடி வந்து ஜல்லிகட்டு நடந்து காளைகளை வீரர்கள் தழுவி வீரத்தை வெளிப்படுத்தும் வரையிலும், மேலும் ஓவ்வொரு வருடமும் தமிழர் பாரம்பரியத்தை எந்த வித தங்கு தடையின்றி எந்த வித போராட்டமின்றி நடத்த நிரந்தர அனுமதி உத்தரவை தமிழக இந்திய அரசு தரும் வரை தாய் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் போராட்டத்தை கைவிட வேண்டாம் எனவும் ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, January 14, 2017

சல்லிகட்டுக்கு ஆர்ப்பாட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் தாக்குதலுக்கு கண்டனம்! காவல்துறையை வசம் வைத்திருந்த முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி இன்று 14-01-2017 அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமனை காவல்துறையினர் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்திருக்கின்றன. இதை காணொளியாக காணும்போது தமிழினமும், தமிழனும் ஒடுக்கப்படுவதாகவே உணருகிறேன்.

என்னுடைய கேள்வி முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு... முதல்வர் அவர்களே! சல்லிகட்டை தமிழ்நாடு உறுதி செய்யும் என்று சொன்ன உங்கள் வீரவசனம் என்ன ஆயிற்று. குறைந்த பட்சம் உங்களிடம் வைத்திருக்கும் காவல் துறையையாவது அமைதியாக இருக்க வைக்க உங்களிடம் திராணி இல்லையா?

நீங்களும் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல பேசி, தமிழினத்தையே ஒடுக்க நினைக்கிறீர்களா? முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டாலே தீதும், சூதும் கை வந்த கலை என நிரூபிக்க முற்ப்படுகிறீரா?

கையாலாகாத முதல்வர் என்று நினைத்த முதல்வர் அதிரடியாக சல்லிகட்டு நடக்கும் என அறிவித்ததை வரவேற்ற 7.5 கோடி தமிழர்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு இந்த தடியடிதானா?

இதில் சாஸ்டாங்கம் விழுவதற்கு வித்தியாசமான விளக்கம் வேறு... உங்களை போன்ற அடிமைகள் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கு சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.

தமிழர் பண்பாட்டுக்காக போராடிய இயக்குநர் கவுதமனை காட்டுமிராண்டி போல இழுத்து அங்குமிங்குமாக அலைகழித்து அடித்து துன்புறுத்திய தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காட்டுமிராண்டிதனமாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தடியடி நடக்க காரணமாயிருந்த, காவல்துறையை தன் வசம் வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழர்களை, பண்பாட்டை கலாசாரத்தை, உணர்வுகளை ஒடுக்க நினைத்த தமிழக முதல்வர் தனது வாக்கை காப்பாற்றாமல் துரோகம் இழைத்த காரணத்தால் தார்மீக உணர்வின் அடிபடையில் தனது இயலாமையை ஒப்புகொண்டு பதவி விலக வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

தமிழர்கள் வரும் காலங்களிலாவது இப்படிபட்ட துரோகங்களை தேர்தல் காலங்களில் நினைத்து பார்த்து தன்மானமுள்ளவர்களை, தமிழினத்தையும், தமிழர் நலன் காக்கிறவர்களை இனம் கண்டு வெற்றியடைய செய்து தமிழினத்தை இப்படிபட்ட துரோகங்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு தமிழனாக,
மைக்கேல் செல்வ குமார்

Friday, January 13, 2017

பீட்டா (PETA) அமைப்புக்கு மைக்கேல் எதிர்ப்பு! சல்லிகட்டுக்கு ஆதரவு! பொங்கல் வாழ்த்து!

பீட்டா (PETA) அமைப்பிற்கு எதிராகவும், அந்த அமைப்பை இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டுமெனவும், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிகட்டுக்கு ஆதரவாகவும், இன்று 13-01-2017 ல் PETA என எழுதி அதை எதிர்க்கும் விதமாக அமைதியான முறையில் எரித்து போராட்டம் நடத்தினேன்.

சகோதரர் ராஜ்மோகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டம் நாடுகடந்தும் அமைதியாக நடந்தேறியுள்ளது.

இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழர்களின் அடையாளமான சல்லிகட்டு நடத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டு மக்களின் மன நிலையை புரிந்துகொள்ளாமல், ஏதேச்சாதிகரமாக நடத்துமானால், தமிழக முதல்வர் கூறியபடி சல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு அரசு இருப்பதால் நாம் தடையை மீறி நம் கலாச்சார பண்பாட்டை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எனவே நாம் இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பீட்டா (PETA) அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பீட்டா (PETA) என எழுதி அதை எரித்து தமிழர்களான உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள்.

சல்லிகட்டை நடத்தி தமிழர் வீரத்தை பறைசாற்றுவோம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல் 

Friday, January 6, 2017

பள்ளி கல்லூரிகளில் வாரம் ஒருமுறை வேட்டி கட்டாயமாக்க தமிழக அரசுக்கு மைக்கேல் வேண்டுகோள்!

வேட்டி தினம்... தமிழர்களின் அடையாளம் வேட்டி, நமது பாரம்பரிய அடையாளத்தை சில வருடங்களுக்கு முன்பு தொலைத்துவிடுவோமோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றியதுண்டு... ஆனால் முதன் முதலாக என தாத்தாவின் வேட்டையை கட்டி மகிழ்ந்த தினம் இன்னமும் பசுமரத்தாணி போல நினைவலைகளாக எண்ணும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழின், தமிழரின் நாகரீகத்தின் அடையாளமாகவும் வேட்டி திகழ்கிறது. இதை வருங்கால தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும். இப்போதைய கால சூழலில் சில ஓரிரு பள்ளிகளில் வேட்டியை சீருடையாக வைத்திருக்கிக்கிறார்கள் என சில மாதங்களுக்கு முன் கேள்விபட்டு அந்த புகைப்படங்களை பார்த்தது மனதில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இனி வரும் காலங்களில் அனைத்து கல்லூரி பள்ளிகளில், தமிழர் பண்பாட்டை காக்கும் விதமாக, ஒரு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் வேட்டியணிந்து வர தமிழக அரசு ஏற்ப்பாடுகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, இந்த நாளை அனைத்து தமிழர்களும், அனைத்து இந்திய மக்களும் கொண்டாடி மகிழ வேண்டுமென்று, தமிழர் பண்பாட்டை காக்கும் இந்த வேட்டி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்