பீட்டா (PETA) அமைப்பிற்கு எதிராகவும், அந்த அமைப்பை இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டுமெனவும், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிகட்டுக்கு ஆதரவாகவும், இன்று 13-01-2017 ல் PETA என எழுதி அதை எதிர்க்கும் விதமாக அமைதியான முறையில் எரித்து போராட்டம் நடத்தினேன்.
சகோதரர் ராஜ்மோகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டம் நாடுகடந்தும் அமைதியாக நடந்தேறியுள்ளது.
இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழர்களின் அடையாளமான சல்லிகட்டு நடத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டு மக்களின் மன நிலையை புரிந்துகொள்ளாமல், ஏதேச்சாதிகரமாக நடத்துமானால், தமிழக முதல்வர் கூறியபடி சல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு அரசு இருப்பதால் நாம் தடையை மீறி நம் கலாச்சார பண்பாட்டை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எனவே நாம் இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பீட்டா (PETA) அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பீட்டா (PETA) என எழுதி அதை எரித்து தமிழர்களான உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள்.
சல்லிகட்டை நடத்தி தமிழர் வீரத்தை பறைசாற்றுவோம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment