Sunday, March 7, 2021

நாகர்கோவில் டவுண் பள்ளிவிளை ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தாததால், இந்த முன்பதிவு வசதி திருவனந்தபுரத்திற்கு மாறும் அபாயம்!

நாகர்கோயில் வெட்டூர்ணிமடம் அருகே 
பள்ளிவிளையில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பயணசீட்டு முன்பதிவு மையம் தினசரி காலை 8:00 முதல் மாலை 8:00 வரை செயல்பட்டு வருகின்றது. 

இந்த முன்பதிவு மையத்தை மக்கள், பயண சீட்டு முன்பதிவு ‌செய்ய, அதிகம் பயன்படுத்தாத காரணத்தால், அங்கிருந்து தட்கல் டிக்கெட்டுகள் அதிக பயணிகளுக்கு கிடைக்க பெறுகின்றது.

இந்த முன்பதிவு மையம் அதிக பயணிகள் அதிக அளவில் முன்பதிவு செய்து பயன்படுத்தினால் மட்டுமே,‌ நாகர்கோயில் டவுண் ரயில் நிலையத்தில் பயணசீட்டு முன்பதிவு வசதி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஆகவே நாகர்கோயில் டவுண் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள், அதிக பணம் கொடுத்து தட்கல் பயண சீட்டு பெற்று பயணம் செய்வதை தவிர்த்து, முன்பதிவு செய்து ‌குறைவான கட்டணம் கொண்ட பயணசீட்டு பெற்று பயனடையுங்கள்.  

அப்போது நம்‌ முன்பதிவு மையத்தையும் இருப்பில் வைக்க முடியும். மக்கள் முன்பதிவு செய்து பயன்பெறவில்லையென்றால், இந்த முன்பதிவு மையத்தை திருவனந்தபுரம் கோட்டம் இங்கிருந்து எடுத்துவிடும்.

பின்னர் அந்த பகுதி மக்கள் ‌அனைவரும் நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கால் கடுக்க கியூவில், நெருக்கடிக்கு மத்தியில் நின்று பயண சீட்டு எடுக்கும் நிலை வரும்‌என்பதை எச்சரிக்கையாக பதிவு செய்கிறேன்.

ஆகவே நாகர்கோயில் டவுண் ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பயண சீட்டு முன்பதிவிற்காக பயன்படுத்த உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

சக பயணியாக, 

மைக்கேல் செல்வ குமார்.
நாகர்கோயில் டவுண் பயணி
07-03-2021

No comments:

Post a Comment