Saturday, April 29, 2023

பெரியவரே ஆற்றாமையால் துடிக்கிறீர்கள். ஓய்வெடுங்கள்!

காலையிலிருந்தே அந்த பெரியவரை பற்றி எழுத வேண்டுமென்றே இருந்தேன். இப்போதுதான் சமயம் கிட்டியது.


கடந்த பொதுக்குழுவுக்கு முன்னர் முக்கியமான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அண்ணன் துரை வைகோ அவர்களை பொறுப்புக்கு நியமிக்கலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தி 104 வாக்குகளில் இரண்டு வாக்குகள் இல்லை என்றும் மீதமுள்ள 102 வாக்குகள், துரை வைகோ அவர்களுக்கு கழகத்தில் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்றும் வாக்களிக்கப்பட்டிருந்தது.

அதில் அந்த பெரியவர் கலந்துகொள்ளவில்லை. ஒமானிலிருந்து நான் அழைத்தேன் அந்த பெரியவருக்கு!. ஐயா நல்லா இருக்கீங்களா... உங்களை கூட்டத்தில் காணலயே என்றேன். உடம்பு சரியில்லயா என்று கேட்டேன். அவர் உடனே, மைக்கேல் நீங்கள் ஒமானில் இருந்தாலும் கவனித்துக்கொண்டு அழைத்திருக்கிறீர்களே மகிழ்ழ்ச்சி. கட்சி நடவடிக்கைகளை கவனித்திக்கொண்டுருக்கிறீர்கள் சரி என்றார். நானும் ஆம் ஐயா நீங்கள் இல்லாததுதான் வருத்தமாக இருந்தது என்றேன். அதற்கு அவர், கொரொனா காலம் இன்னும் சரியாகவில்லை என்பதால் வெளியில் அதிகமாக செல்லவில்லை. தலைவரிடத்தில் சொல்லிவிட்டேன் என்றார். சரி ஐயா உடல் நலனை பாத்துக்கொள்ளுங்கள் . நன்றி என்று சொல்லி அழைப்பை துண்டித்தேன்.

தலைவரை எங்களை போன்ற சிறார்கள் ஐயா என்றே அழைப்போம். அந்த பெரியவரையும், தலைவருடன் இருப்பதால், தலைவர் மதிப்பளிப்பதால் ஐயா என்று அழைப்பதுண்டு.

2017 ல் கழக இணையதள மாநாடு தாயகத்தில் நடந்தது. நான் பேசும்போது கூட கழக பொதுச் செயலாளர் அன்பு தலைவர் வைகோ, அவைத் தலைவர் திருப்பூரார் உள்ளிட்ட கழக கண்மணிகள் என்று சொல்லிதான் அவருக்கும் மரியாதை செய்திருப்போம். நேரமின்மையால் அதிகமானோர் அப்படிதான் பேசியிருப்பார்கள். இப்படியாக அவர் மேல் கழக கடைகோடி தொண்டனும் மரியாதை வைத்திருந்தார்கள்.

கொரொனா காலம், அன்பு தலைவர் சற்று சுகவீனத்தால் அதிகம் சுற்றுபயணம் செய்ய இயலாத நேரத்தில், கழக தொண்டர்களின் வறுபுறுத்துதலால்
அண்ணன் துரை வைகோ அவர்கள் கழகம் சம்பந்தமாக தீவிரமாக களமாடிக்கொண்டிருந்தார். நாம் ஒமானில் இருப்பதால் கழக அனைத்து உள் விடயங்களையும் அறிவதில்லை. நமது பணி கழகத்திற்கு எதாவது செய்ய முடியுமா என எண்ணுவதால் மற்றதை சிந்திப்பதில்லை. ஆகையால் 2021 தோப்பில் கூடுகை, கூட்டங்களில் வராதது என்பதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்தான் அண்ணன் நாகராஜ் அவர்கள் அவரது சொந்த பணி அலுவலகத்தை, மதிமுக மாவட்ட அலுவலகமாக மாற்றி திறப்புவிழா நடத்தினார்.

நமக்கு அப்போது பொறிதட்டியது, நமது தொழிற்சங்கம் பல தடைகளை தாண்டி வெற்றி கண்டுவிட்டோமே, அப்புறம் எதற்கு இவரது அலுவலகம் கழக மாவட்ட அலுவலகமாக திறக்கப்படுகிறது என நினைத்தாலும் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்துதான் தெரிந்தது தொழிற்சங்க கட்டடத்தையே துரைசாமி அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்து அவருக்கானதான மாற்றிக்கொண்டார் என்பது.

தொழிற்சங்கம் அவர் பெயருக்கு ஏன் மாறியது என்றால் அதற்கு அவர்தான் பொதுச்செயலாளர். தலைவர் வைகோ அவர்கள்தான் இருந்திருக்கணும், ஆனால் தலைவர் வைகோ அவர்கள் அண்ணா காலத்து பொதுக்குழு உறுப்பினர், நமக்கு மூத்தவர், அவர் சொந்தமாக சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் நிற்காமல் இருப்பவர் என்றெல்லாம் புழகாரம் சூட்டி அவரே பொதுச்செயலாளராக இருக்கட்டும் என்று அவரை மகுடம் சூட்டி அழகு பார்த்தார். அப்போது பொதுச்செயலாளார் பெயரில்தான் தொழிற்சங்கம் இருக்கும். அவருக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது. தலைவர் அவரை அண்ணனென்று சொல்லி அழகுபார்த்தார், அதற்கு கைமாறுதான் பெரியவர் செய்தது தன் பெயரில் தொழிற்சங்கத்தை மாற்றி தனது சொத்தாக மாற்றிக்கொண்டது.

அன்று ஓர்நாள் 2021 ல் கூடிய தோப்பு கூடுகையே கூட்டணி வேண்டாமென்று நாடகமாடி அன்றே திமுகவில் ஐக்கியமாகிவிடலாம் என்ற துரோக கனவுதான். ஆனால் காலம் அதற்கு கை கொடுக்காமல் கூட்டணி உருவானது. கூட்டணி தலைவர்கள் கூடுபாயகூடாது என்ற புரிதலால் அவர்கள் அங்கு செல்ல மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. இவ்வளவும் தெரிந்தும் தலைவர் வைகோ அவர்கள் உங்களை அருகிலே வைத்திருந்தார். நீங்களும் தெரியாதது போல சில கூட்டங்களில் கலந்துகொண்டு ஒன்றும் நடக்காதது போல காட்டிக்கொண்டீர்கள். தொழிற்சங்கத்தையும் அபகரிதுக்கொண்டீர்கள்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் துரை வைகோவையும் என்னை போன்ற தொண்டர்கள் கோவில்பட்டி வரவேற்பு தொடங்கி சென்னை தாயகம் வரை பாதுகாத்து அழைத்து வந்து பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வைத்து பொறுப்பையும் ஏற்க கொடுத்துவிட்டார்கள்.

தொழிற்சங்கம் பிரச்சினை கிளம்பிவிட கூடாது, பூதாகாரமாகிவிட கூடாது என்று அதை மறைக்க, அண்ணன் துரை வைகோ வரவு கட்சிக்கு உகந்ததல்ல. ஆகவே ஒரு சிலரை வெளியேற வைத்து கழகத்தில் சல்லி சறுக்கலை ஏற்படுத்தி, துரை வைகோ வருகையால் தொண்டர்கள் மன சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது போன்ற அவதூறுகளை அள்ளி எறிந்து அண்ணன் துரை வைகோவை காரணம் காட்டி கழக கூட்டங்களுக்கு பங்கெடுக்காமல் இருந்தீர்கள்.

தொழிற்சங்கத்தை விடமாட்டார்கள் எப்படியாவது மதிமுக பெற்றுவிடும், தன்னிடமிருந்து போய்விடும் என்ற பதட்டத்தில் திமுகவுடன் சேரவேண்டு என்று போகிற போக்கில் சொல்லி இன்று ஒரு கடிதம் மூலம் இப்போது கழகத்திற்கு ஊறு விளைவிக்க பார்க்கிறீர்கள். இதற்கு ஒத்திகை பார்க்கவே சில தினம் முன்பாக தினமலம் பத்திரிகை மூலம் மதிமுகவிலிருந்து ஒரு தனி கட்சி உருவாகபோகிறது என்று அவதூறை அள்ளி வீசியிருக்கிறீர்கள் என உணர முடிகிறது.

உங்கள் துரோகம் பலிக்காது. உங்கள் மீதுள்ள எங்கள் மரியாதை இன்றோடு காலாவதியாகிவிட்டது.

மதிமுக தனித்தன்மையோடு இயங்கும். உங்களை போன்றவர்கள் இருந்ததாலே வெற்றிக்கனிகளை அறுவடை செய்யாமல் போயிற்று.

ஆனால் நீங்கள் சொன்ன அந்த சின்ன பையன் தலைமை கழக செயலாளார் ஆன பிறகுதான் உங்கள் இடையூறுகளை எல்லாம் தகர்த்து 4 MLA, 1 MP, ஒரு ஒன்றியம், ஒரு துணை மேயர், பல பஞ்சாயத்துகள் என மதிமுகவை மகுடம் சூட வைத்திருக்கிறார். மதிமுக இன்னும் பல அதிகாரங்களை பெறும். தலைவர் வைகோ அவர்கள் அதற்கான வியூகங்களை வகுப்பார். அண்ணன் துரைவைகோ அதை செயல்படுத்துவார். மதிமுக மீண்டும் மணி மகுடம் சூடும்.

முன்பு ஒருவர் அடுக்கு மொழியும் அழகு தமிழும் பேசி தொண்டர்களால் சொந்த வீடும் பெற்றவர் சொல்வார், மதிமுக எங்கு இருக்கு என்று கேட்பர்களுக்கு சொல்லுங்கள் லண்டன், நார்வே, கனடா என்று.... இன்று அதை போல பல நாடுகளில் ஒமான், அமீரகம், குவைத், சவுதி, கத்தார், சிங்கை என்று தலைவர் வைகோ அவர்களின் கண்மணிகள் கழக துணை நிலை அமைப்பான தமிழர் மறுமலர்ச்சி பேரவையையை கட்டமைத்து அயலகத்திலே தமிழர்களுக்காக கடமையாற்றிக்கொண்டிருக்கிறோம்.

நேற்றுதான் கழக 30 ஆம் ஆண்டு உதயத் திருவிழாவுக்காக ஒமான் கழகம் சார்பில் கொடுத்திருந்த வாழ்த்து செய்தி மே 5 பதிப்பாக சங்கொலியில் பிரசுரம் ஆகியிருந்தது. முதல் இரண்டு பக்கம் தலைவர் கழக கண்மணிகளுக்கு கடிதம், கடைசி பக்கம் ஒமான் வாழ்த்து செய்தி, அதில் உதய திருநாள் வாழ்த்தும், 5 ஆம் அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

கழக கண்மணிகள் அயலகத்தில் இருந்தாலும் இயன்றளவு கழகத்தை பற்றி நினைக்கிறோம். நீங்கள் கடந்த 3 வருடங்களாக கழகத்திற்கு பணியாற்றியது என்ன? மேடையில் இடம் கிடைத்தால் பெரிய தலைவர் என்று நினைத்துக்கொள்வதா?

நீங்கள் அன்பு தலைவர் வைகோ அவர்களுடன் இருந்ததால்தானே உங்களுக்கு மதிப்பு.... இல்லையென்றால் உங்களை யாரறிவார்? ஒமானிலிருக்கும் என்னை யாரறிவார்?
வைகோதானே பிராண்ட்.
அந்த பிராண்ட் இல்லையென்றால் சந்தையில் நீங்கள் விலைபெறவே மாட்டீர்கள் என்பதை அருகிலிருந்தும் நீங்கள் அறியாமல் போனதை எண்ணி வேதனை படுகிறேன்.

தலைவர் வைகோ அவர்கள் மேல் அவதூறிகளை வீசி சென்றவர்கள் யாரையாவது மக்கள் அறிவார்களா? அவர்கள் நிலை என்ன? உங்கள் நிலையும் அவர்களை போல ஆகிறதே என்றே கவலை கொள்கிறேன்.

இப்போது சொல்கிறோம், கழக அமைப்பு தேர்தல்களால் கழக கட்டமைப்பு இன்னும் வேரூன்றி வருகிறது. அமைப்பு தேர்தல்கள் சில இடங்களில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. முடிந்ததும், பொதுக்குழு. அந்த பொதுக்குழு யாருக்கெல்லாம் அறுதியிட்டு இறுதி உரை எழுத போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.... அதைகூட தலைவர் வைகோ அவர்கள் பொறுமைகாப்பது அவரது மனிதாபிமானத்தையும், அண்ணா காலத்து எஞ்சியவர் என்பதுமானதாகும் என்றே நான் எண்ணுகிறேன்.

மதிமுக வலுபெறுவதை பார்க்கதான் போகிறீர்கள். தலைவர் வைகோ அவர்களுடன் அண்ணன் துரை வைகோ அவர்கள் கழக கண்மணிகளை உயர் நிலைய அடைய செய்யதான் போகிறார்கள்.

சமரசமில்லா மக்கள் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது.

நீங்கள்தான், இருக்கமாட்டோமே என்று, ஆற்றாமையால் துடிக்காதீர்கள். உங்களுக்கான நிலையை நீங்களே உருவாக்கிக்கொண்டீர்கள். ஆகவே நீங்களே ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.


கழக பணியில்,
மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
துணை நிலை அமைப்பு - மதிமுக
29-04-2023

Wednesday, May 18, 2022

பேரறிவாளன் தூக்கு கயிறை, அவர் அழைத்தால் மட்டுமே வரும் நண்பன் ராம் ஜெத்மலானியின் வாதங்களால் அறுத்து எறிகிறார் வைகோ. தூக்குக் கயிறு அறுந்து வீழ்ந்தது. ராம் ஜெத்மலானிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார் வைகோ. தூக்கு கயிறை அறுத்ததால் இன்றுவரை உயிரோடு இருக்கும் பேரறிவாளன் இன்று விடுதலை. தமிழின காவலர் தலைவர் வைகோ அவர்கள் மகிழ்ச்சி அறிக்கை. தனக்காக கார்மேகம் பொழிவதில்லை. தனக்காக சோழ நதி பாய்வதில்லை. தனக்காக பூங்குயில்கள் இசைப்பதில்லை. தனக்காக செவ்வாழை செழிப்பதில்லை. தனக்காக தலைவர் வைகோ வாழவில்லை. தமிழர்களுக்காக வாழ்கிறார்...


via IFTTT

My Leader is My BRAND. என் தலைவன் எனது பிராண்ட். வைகோதாண்டா என் பிராண்ட். வைகோ. VAIKO எதையுமே அவர்‌ எதிர்பார்த்து செய்ததே இல்லை. செய்ய‌போவதுமில்லை..


via IFTTT

Wednesday, May 11, 2022

கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்! பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும். என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய்‌. தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள். எம் இனத்தை நீ அழித்தாய் அன்று! உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று! எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று. உன் வீடோ‌பற்றி எரிகிறது இன்று. எம் பிஞ்சு‌‌ பாலகனை கொன்றாய். உன்‌‌ பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள். சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய். இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள். இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான். எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால்‌ இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். ஒருவன் செத்துவிட்டான். மிஞ்சியதோ நீதான். சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும். அதை கண்டு‌ நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன். மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான். தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன. எங்கள் நிலம்‌ எமதாகும் ஒரு நாள். புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும். தமிழரின் தாகம், தமிழீழ தாயகம். தாயகம் மலருவதை காண, மைக்கேல் செல்வ குமார் 11-05-2021


via IFTTT

கருப்பு மே-ல் மகிந்த வீடு கருகியதில் சின்ன ஆறுதல்!

பற்றி எரியும் வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவன் நானல்ல. ஆனால் யாருடைய வீடு பற்றி எரியும்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என பார்க்க வேண்டும்.

என் மக்களை கொத்து கொத்தாக சிதற சிதறடித்து கொன்றாய். 90 ஆயிரம் தாய்மார்களை விதவைகளாக்கினாய். எம் இளைஞர்களை காணாமல் ஆக்கினாய்‌. தாய்மார்கள் இன்றளவும் சாலையில் வந்து தனது மகன்கள் எங்கே என நீதி கேட்கிறார்கள்.

எம் இனத்தை நீ அழித்தாய் அன்று!
உன்னையே உன் இனம் அழிக்க துடிக்கிறது இன்று!

எம் மக்கள் வீடில்லாமல் அலைந்தனர் அன்று.
உன் வீடோ‌பற்றி எரிகிறது இன்று.

எம் பிஞ்சு‌‌ பாலகனை கொன்றாய்.
உன்‌‌ பாலகர்கள் ஓடி ஒழிகிறார்கள்.

சிங்களவர்களிடத்தில் இனவெறி தூண்டி தமிழர்களை கொன்றாய்.
இன்று சிங்களவர்களே உன்னை கொல்ல வகை தேடுகிறார்கள்.

இரண்டு சம்பவங்களும் மே மாதம்தான்.

எப்போது எவன் சாவான் என்று நான் நினைப்பதில்லை. ஆனால்‌ இருவர் சாகவேண்டுமென்றே நினைத்தவன். 

ஒருவன் செத்துவிட்டான். 
மிஞ்சியதோ நீதான். 

சிங்களவன் கையாலே உன் சாவு நிகழவேண்டும்.
அதை கண்டு‌ நான் மகிழ வேண்டுமென்றே நினைக்கிறேன்.

மகிந்த ராஜபக்சேவே உன் சாவை நோக்கி நான்.

தமிழினம் உன்னை வரவு வைக்க காத்திருக்கிறது. எங்கள் தியாகங்கள் வரலாறாகின்றன.

எங்கள் நிலம்‌ எமதாகும் ஒரு நாள்.
புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்.

தாயகம் மலருவதை காண,

மைக்கேல் செல்வ குமார்
11-05-2021

Wednesday, March 23, 2022

தமிழீழம் சார்ந்து பேசினால், தொடரும் முகநூல் முடக்கம். காப்புரிமை வாங்கி தந்த தலைவர் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கோரிக்கை!

அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்ததற்காக எனது ஒரு வீடியோ சார்ந்த பதிவை முடக்கினார்கள். 30 நாள் தடை அறிவித்தார்கள். நான் அதை ஏற்கவில்லை. இப்போது அதை மறு பரிசீலனை செய்கிறோம் என்று தகவல் தந்தார்கள். இப்படியே போனால் முழுதாக முடக்கிவிடுவோம் என எச்சரிக்கை செய்துவிட்டு இந்த பதிவு தவறல்ல என்று மன்னுப்பு கோரிவிட்டு இன்று 23-03-2022 காலையில் விடுவித்துள்ளார்கள்.

ஆனாலும் live 90 நாட்களுக்கு செய்ய இயலாது. இன்னும் Account restricted என்ற நிலையிலே இருக்கிறது.

மேலும் 2009 முதல் நான் பதிவிட்ட அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் சார்ந்த அவர் கட்டியெழுப்பிய நாடு சார்ந்த பதிவுகளை முடக்கியிருக்கிறோம் என்றும் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள். அப்படியென்றால் எனது கணக்குகளை முழுதுமாக நோண்டி நோண்டி பார்க்கிறார்கள்.

இதை பார்க்கும்போது அன்பு தலைவர் வைகோ அவர்களின் தலைவர் பெயர் வந்தாலே என் கணக்கு முடக்கப்படவேண்டுமென செட்டப் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்திய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கோ அதன் கட்டமைப்புக்கோ தலைவருக்கோ ஆதரவாக பேசலாம் எழுதலாம் என்று இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு சட்டமாக்கி பேச்சு உரிமைக்கு காப்புரிமை வாங்கி தந்திருக்கிறார் அன்பு தலைவர் வைகோ MP அவர்கள். ஆனால் இன்னும் என்னை போன்ற ஆயிரக்கணக்கான தமிழீழ உணர்வாளர்களை எங்கள் உரிமைகளை முடக்குவது இந்திய ஒன்றிய அரசின் கடமையாக செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் மதிமுகவினர் தினமும் முடக்கப்படுகிறார்கள் எனப்தே வேதனையாக இருக்கிறது.

எத்தனை முறைதான் பலரும் பதிவாக போடுக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். ஆகவே இதை நாடாளுமன்றத்திலே மூர்க்கமாக பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அன்பு தலைவர் வைகோ MP அவர்கள் முகநூல் முடக்கம் பற்றி பேசவேண்டி கோரிக்கையாகவே வைக்கிறேன்...

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக
23-03-2021

Wednesday, March 16, 2022

தம்பி தமிழருணுக்கு திருமண வாழ்த்து!

ன்பு தலைவர் வைகோ அவர்களால் அடையாளம் காணப்பட்ட உரிமை போராளி தம்பி தே.தமிழருண் பெரம்பலூர். பின்புலம் இல்லாது, பொருளாதார கோரப்பிடியிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளராக சிறப்பாக செயலாற்றி தனது களப்பணியால் மாநில துணை அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இன்று அவர் தனது இல்லற வாழ்வில் புகுந்திருக்கிறார். தமிழ் பெயரை தனதாக்கிய அரசியை, தனது பள்ளி பருவ தோழியையே காதலியாக கொண்டு இன்று மனைவியாக்கியிருக்கிறார். அன்புத் தம்பியின் சுகத்திலும், சுகவீனத்திலும் தங்கை தமிழரசி உறுதுணையாக இருந்து குடும்பத்தை மாளிகையாக கட்டியெழுப்ப வேண்டும். தம்பியின் திருமணம், தம்பியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையில் இன்று சிறப்பாக நடைபெற்றிருக்கிறது நினைத்து உள்ளபடியே மனம் மகிழ்கிறேன். தந்தையும் தாயும் இல்லாத நிலையில் தலைவர் வைகோ அவர்களும் டெல்லியில் இருக்கும் நிலையில் கலந்துகொள்ளாத நிலையிலும், இயற்கை அவர்களும் இருக்கிறதென்ற நிலையில் அவர்கள் இல்லற வாழ்வில் வளம் பெற, யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டு தாழ்பணிந்து மகிழ்வுடன் வாழ திருமண நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன், மைக்கேல் செல்வ குமார் செயலாளர் ஒமான் மதிமுக 16-03-2021

Thursday, March 3, 2022

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.

இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.

மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.03.2022