Saturday, February 6, 2021

போராடும் பெண் ஆசிரியர்களின் கழிவறை தண்ணீர் வசதியை நிறுத்திய எடப்பாடி அரசு! கண்டனம்! சமூக ஆர்வலர்கள் கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுகோள்!

நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.


இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். போராடிய முதல் நாளாம் 4 ஆம் தேதி முதலே பெரும்பாலான கழிப்பறையில் தண்ணீர் வசதியை நிறுத்தி வைத்திருந்தனர். ஒன்றிரண்டு கழிப்பறைகளில் மட்டும் தண்ணீர் வசதி இருந்தது.

இந்நிலையில் இன்று 06-02-2021 மாலை முதல் அனைத்து கழிப்பறைகளிலும் தண்ணீர் வசதியை நிறுத்தி வைத்துள்ளது தமிழக எடப்பாடி அடிமை அரசு. கழிவறை இல்லையென்றால் பெண்கள் கண்டிப்பாக போராட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று பிற்போக்கு சிந்தனையுடன் உடல் உபாதைகளுக்கான வசதியை கூட சொந்த மக்களுக்கு கொடுக்காமல் தடுத்து வைத்து மக்களை துன்புறுத்துகிறது இந்த அடிமை அரசு. உடல் உபாதைகளை செய்ய முடியாமல் திணறும் பெண் ஆசிரியர்களின் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இப்படிபட்ட மனித உரிமை மீறல்களை அடிமைஅரசு பாசிச பாசகவுடனே இணைந்து செய்வது அப்பட்டமாக தெரிகிறது. மனித அடிப்படை உரிமைகளை கூட கொடுக்காத எடப்பாடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

மனித உரிமை ஆர்வலர்கள் தலையிட்டு உடனடியாக பெண் ஆசிரியர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்யவும், சமூக ஆர்வலர்கள் தங்களாலான உதவியை செய்திடவும் வேண்டுகிறேன்.

மைக்கேல் செல்வ குமார்.

Monday, February 1, 2021

பெட்ரோல் டீசல் வரி உயர்வு!

இந்திய ஒன்றிய நிதியறிக்கை அமைச்சர் நிர்மலா பேசிய பின்னர், பெட்ரோல் 2.5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

பாசிச பாசக ஆட்சியில் பெட்ரோல் டீசலுக்கு வரியை உயர்த்தியதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வரி உயர்வை பாசிச பாசக அரசு திரும்ப பெற வேண்டும்.


பெட்ரோல் விலை பட்ஜெட்!

பெட்ரோலின் விலை இந்திய ஒன்றியத்தில் அதிகமே...

இந்தியாவை விற்க நிர்மலா பட்ஜெட் தாக்கல்!

பல லாபம் பெறும் அரசு நிறுவனங்களை விற்க இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா 2021-2022 க்கான பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.


அரசு நிறுவனங்களை விற்பதை நிறுத்த வேண்டும். கண்டனம்.

Thursday, January 28, 2021

பாசிச பாசகவின் பிடியில் சிக்கியிருக்கிறதா முகநூல் நிர்வாகம்?

என்னுடைய முகநூல் கணக்கு அபாயத்தில் உள்ளதாக முகநூல் அறிவித்தது இப்போது.

என்னுடைய பின்னூட்டங்களும், பதிவுகளும் மக்களை தவறாக வழிநடத்துவதாக கூறுகிறது...
எத்தனை தடவை முடக்கி மீண்டு வருகிறது. இப்போது மொத்தமாக முடக்க நடவடிக்கை என கூறுகிறது.
விடுதலை புலிகளை உலகறிய பேசினால் சிங்கள கைகூலியின் அடியாளாக மாறி முகநூல் நிர்வாகம் எங்களை முடக்குகிறது.
பாசிச பாசகவின் மக்கள் விரோதங்களை மக்களுக்கு கூறினால், பாசகவின் கைகூலியாக செயல்பட்டு எச்சரிக்கை செய்வது..
இது என்ன மாதிரியான முகநூல் நிர்வாகத்தின் மனநிலை என தெரியவில்லை.
முகநூல் இந்திய அதிகாரியாக இருந்த பாசிச பாசகவின் உளவாளி மாற்றப்பட்டதையடுத்து, வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அப்போதாவது முகநூல் உணர்வு சார்ந்த நேர்மையான பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் என்று நம்பினோம். அதுவும் இப்போது கானல் நீராக உள்ளது.
யாரையும் விலைக்கு வாங்கும் சக்தி பாசிச பாசகவுக்கு இப்போது உள்ளதால் இப்படிபட்ட நிலை இருக்கிறது.
காலம் மாறும், காட்சிகளும் மாறும் என பாசிச பாசக உணர வேண்டும்.
நல்ல அரசு அமைந்தால் முகநூலுக்கே தடை விதிக்க கூடிய நிலை கூட வரலாம் என்பதை அடக்கத்துடன் முன் அறிவிப்பாக முகநூல் நிர்வாகத்துக்கு தெரிவிக்க விளைகிறேன். ஆகவே பாசிச பாசகவின் மகுடிக்கு ஆடுவதை உணர்ந்து செயல்படவும் வேண்டுகிறேன்.
முகநூல் நிர்வாகம் தமிழ் பதிவுகளை கற்றறிந்த தமிழர்கள் மூலம் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நல்ல தரமான சமூக ஊடமாக விளங்க வழிவகுக்கும்.
பாசிச அரசுகளின் கைக்கூலியாக முகநூல் செயல்படகூடாது.
தமிழர்களின் உணர்வுகளை அடக்க முயலும் முகநூல் நிர்வாகத்தை கண்டிக்கிறேன்...


மைக்கேல் செல்வ குமார்

Tuesday, January 19, 2021

மறைந்த மருத்துவர் சாந்தா அவர்களுக்கு புகழஞ்சலி!

புற்றுநோயால் ஆட்பட்ட மக்களுக்கு சிகிச்சை‌ இல்லாமல் இருந்தா காலத்தில், இரத்த புற்றுநோய்க்கு மருந்து கொடுத்து மருத்துவம் மூலம் புற்றுநோய் குணமாக்கலாம் என்று மனிதர்களை காத்தவர்.

புற்றுநோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் புற்றுநோயால் மனம் தளராமல் இருக்க வேண்டுமென்று விளக்கியதோடு அவர்களுக்கு சிகிச்சையளித்து காத்தவர்.

40 ஆண்டுக்கு மேலாக அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட் இயக்குனராக சிறப்பாக பணியாற்றி உலகறிய செய்தவர். மக்கள் பணிக்காகவே திருமணம் செய்துகொள்ளாத மாதரசி இன்று 19-01-2021 மண்ணை விட்டு மறைந்தார் என்ற செய்து மக்களை நிலைகுலைய செய்துள்ளது.

அவர் மருத்துவம் பார்த்த ஒவ்வொரு மனிதரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரது மருத்துவ பணி ஈடிணையில்லாதது. 

அடையாறு கான்சர் மருத்துவமனை இருக்கும் வரை அம்மையார் புகழ் நிலைத்திருக்கும்‌.

அவரை இழந்து வாடும் அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

Monday, January 18, 2021

கொன்றவனை அரவணப்பதா?

தமிழீழத்தில் 146000 தமிழர்களை கொன்றவனுடன் கூட இருந்த முரளீதரன் படத்தில் நடிக்க ஒப்புகொண்டதற்கே தமிழன் மனதிலிருந்து ஒரு நடிகனாக தூக்கியெறிந்த பிறகும், திருந்தவில்லை....

இப்போது வேறு வடிவில் மேலும் சிங்களவனுக்கு சொம்படிக்க,

எல்லோரையும் அரவணைக்க வேண்டும் என்ற தொனியில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று மேலும் மேலும் சிங்களவனை தூக்கிபிடிப்பது தமிழின துரோகத்தையே காட்டுகிறது.

கொன்றவனையும் அரவணைப்பதா? இனத்தையே அழித்தவனை இறுகப்பிடிப்பதா?
திட்டமிட்டு அழித்தவனை தாங்கி பிடிப்பதா?

சகோதரர் Vijay Sethupathi உங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விட்டு தாமதித்து துரோகி முரளிதரன் படத்திலிருந்து விலகினீர்கள்.

இப்போது மீண்டும் சிங்களவனுக்கே சிங்கி அடிக்கும்விதமாக அடுத்த படத்திற்கான போஸ்டர் வலம் வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க வலியுறுத்துகிறேன்.

ஏற்கனவே தமிழர்களின் சினத்திற்கு சிக்கியிருக்கிறீர்கள். உங்கள் மேலுள்ள எங்கள் என்ணங்கள் கலைந்து நிற்கிறது.

மேலும் மேலும் அதற்கு வலுசேர்க்கும் விதமாக தமிழர்களை அழிக்கும் பாதகர்களுக்கு ஆதரவாக ஆடவிரும்புகிறீர்கள். தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களுடன் இணையவேண்டுமென்றால் சிங்கள தேசத்துக்கு குடியேறுங்கள்.

தமிழன் என்ற வேசமிட்டு தமிழர்களுக்கு துரோகமிழைக்க வேண்டாம்.

எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கமாட்டோம். கடைசியாக எச்சரிக்கிறோம் படத்திலிருந்து விலகுங்கள். அடுத்த தடவை இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.


தமிழீழம் எங்கள் உயிர் மூச்சில் கலந்திருக்கிறது.

சிங்கள அரச காடையர்களை என்றும் எதிர்க்கும் தமிழன்,

மைக்கேல் செல்வ குமார்,