புற்றுநோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் புற்றுநோயால் மனம் தளராமல் இருக்க வேண்டுமென்று விளக்கியதோடு அவர்களுக்கு சிகிச்சையளித்து காத்தவர்.
40 ஆண்டுக்கு மேலாக அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட் இயக்குனராக சிறப்பாக பணியாற்றி உலகறிய செய்தவர். மக்கள் பணிக்காகவே திருமணம் செய்துகொள்ளாத மாதரசி இன்று 19-01-2021 மண்ணை விட்டு மறைந்தார் என்ற செய்து மக்களை நிலைகுலைய செய்துள்ளது.
அவர் மருத்துவம் பார்த்த ஒவ்வொரு மனிதரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரது மருத்துவ பணி ஈடிணையில்லாதது.
அடையாறு கான்சர் மருத்துவமனை இருக்கும் வரை அம்மையார் புகழ் நிலைத்திருக்கும்.
அவரை இழந்து வாடும் அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
No comments:
Post a Comment