Monday, February 15, 2016

சீனி போன்ற சுவையுடைய வாசகம் அண்ணனுக்குபிறந்த நாள் வாழ்த்து!

வைகோ என்ற ஒரு தமிழ் போராளியின் பெயருக்காக நட்பு என்ற போர்வையில் இணைந்தோம். வளைகுடா நாட்டிலும் சேர்ந்தே வேறு திசைகளில் இருந்தாலும் கழக உணர்வால் இணைந்தே குழுவாக பணியாற்றுகிறோம். ஆலோசனைகளில் ஆரோக்கியமானவர். அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆற்றல் படைத்தவர். தமிழக அரசியலில் நல்ல கூட்டணி மக்களுக்கான நலன் கொண்டவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்றெண்ணி அதற்காக தனது பங்களிப்பை செலுத்தி பணியாற்றுபவர். நல்ல பண்பாளர். நட்பிற்கு நாடு போற்றும் அளவிற்கு ஆதரவு கொடுக்கும் இதயம் படைத்த அண்ணனுக்கு தனி செய்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், பொது பதிவிலும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

தங்கமான ஈஸ்வரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பல்லாங்குழி விளையாட்டிலிருந்து, கோலி, பம்பரம், தட்டுபிள்ளை, சிங்காம் பிள்ளை, கிரிக்கெட், கபடி, சீட்டு இது போன்ற அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடிய ஞாபகம்தான் வருகிறது என்றாலும், நொங்கு வெட்டி சாப்பிட்டதையும், ஊர் சுற்றியதையும் மறக்க முடியாமல் என் இதயம் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

முகநூலில் வா என்று பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வளவு நாள் என் கண்ணில் தென்படாத உன் முகநூல் கணக்கு, உனது பிறந்த நாளிலே உனது அழைப்பாக வந்தது.

பார்த்ததுமே மகிழ்ச்சி தாண்டவம்தான். அதுவும் உனது பிறந்தநாளில் வந்தது அதை விட எல்லையில்லா மகிழ்ச்சி.

வயதில் மூத்த அண்ணனாக இருந்தாலும், நாங்கள் சிறு வயதிலே கைகோர்த்து வயல் வழியில் நடந்து திரிந்த காலத்திலே நட்பு கலந்த உணர்வால் பெயரை சொல்லி அழைக்கவே தொடங்கியிருக்கிறேன் என் கால்சட்டை பருவத்திலிருந்தே. வயதில் மூத்தவனை இப்படி அழைக்கிறானே என சிலர் கேட்டதுமுண்டு. ஆனாலும் என் நண்பனான அண்ணன் இதுவரை ஏதும் சொன்னதில்லை. இப்போதும் அப்படியே பழகுகிறோம் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல்.

வருடங்கள் கடந்தாலும் தொலை தூரத்தில் இருக்க அந்த உள்ளூரமான நட்பு மட்டும் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. நேற்றிரவு முகநூலை திறந்த போதுதான் உன் முகநூல் அழைப்பு. உடனே அழைக்க எண்ணினேன். ஆனால் இந்திய மணி 11.45. காலையில் அழைக்கலாம் என்றிருந்தேன். என் பணி சுமை என்னை அனுமதிக்கவில்லை. உணவு இடவெளியின் போதே என் உணர்வை எழுத்துக்களால் வடிக்க முடிகிறது.

எங்கள் நட்பு இப்படியே தொலை தூரத்தில் எவ்வளவு நாள்தான் கடக்குமோ என்ற ஏக்கம்தான் என்னை வாட்டுகிறது. வறுமை தீராதா, ஊரோடு வாழ முடியாதா என்ற ஏக்கமும்தான் இன்னும் மேலோங்கி நிற்கிறது.

வயல்வழிகளில் நண்பனோடு கதை பேசி நடக்க முடியாதா, நொங்கு வெட்டி சண்டை போட்டு உண்ண முடியாதா, கிணத்தடியில் நள்ளிரவு வரை பேச முடியாதா, மிதி வண்டியில் பல மைல் செல்ல முடியாதா, வீட்டிற்கு தெரியாமல் தொலை தூரம் பயணிக்க முடியாதா என்ற எண்ணமெல்லாம் உன் ஒரு முகநூல் அழைப்பிலே நிகழ்ந்துவிட்டது.

நண்பனே வாயிலிருந்து வார்த்தைகளால் சொல்லமுடியாதவற்றை என் இதயித்தினூடாக என் கை விரல்கள் கவிதை பாடி விட்டன. உடல் தூரமாக இருந்தாலும், அந்த நட்புகள் உள்ளூர இதயத்திலே எப்போதுமே இருக்கிறது என்பதற்கு நீயும் சன்றாகும்.

நட்பை எவராலும் பிரிக்க முடியாது. நட்பிற்கோ எல்லை கிடையாது. கடல் தாண்டினாலும் கருணையோடு அளவளாவும் அன்பு மட்டும் அப்படியே அசையாமல் ஆட்கொள்கிறது.

வரும் காலம் எபோது நட்பு பாராட்டலாம் என்ற ஒரு எண்ண ஓட்டதிலே நண்பன், சந்தோசமாக நலமோடு வாழ நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.

Tuesday, February 9, 2016

வாழ்வில் வசந்தம் வீச ப்ரியமான தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முகநூலில் முகமறிந்து, ஈரோட்டில் இருகை கொடுத்து தூக்கியெடுத்து ஆராதித்த நேரத்தை எண்ணி நினைத்து பெருமைப்படுகிறேன். வண்டியிலிருந்து இறங்கியபோதும், நண்பர்களிடத்தில் உரையாட அவரை அழைத்து ஓரிடத்தில் விட்டதையும், சகோதரர் சோமு மண மேடையில் கொண்டு சேர்த்ததையும், போகும்போதும் வண்டியில் கைகொடுத்து இருக்கையில் அமர்த்தியதையும் எண்ணி பார்க்கிறேன்.

தம்பி வசந்த ப்ரியன் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்ற திறனுடைய ஒரு போராளி. தமிழகத்தின் தன்னலமில்லா போராளி, தமிழ்நாட்டின் ஊழியன் வைகோவே தம்பியின் எழுத்துக்களை பற்றி பெருமைபட்டது வசந்திற்கு வசந்தம் வீச செய்ததன்றோ.

தம்பியே! உன் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க, உன் எழுத்துக்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க, தொடர்ந்து போராடும் உன் குணத்தால் வாழ்வில் ஒளி வீச பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, January 27, 2016

கருணை நிறைந்த கடவுள் பெயரை கொண்டவருக்கு உதித்த திருநாள் வாழ்த்துக்கள்!


லிங்கம் என்ற கடவுள் பெயரை கொண்டு!

கருணையே வடிவாய் கொண்டு!

கணவன் என்ற பேறு பெற்று!

தந்தையெனும் வரம் கிடைக்க!

நண்பர்கள் என்ற வளம் கொளிக்க!

பாசமென்ற ஊற்றருவியை கொட்ட!

அன்பென்னும் ஆற்றலை அளவிலா காட்டி!

ஆட்கொண்ட நல்லு அண்ணனே!

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



பாசத்துடன் சகோதரன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, January 22, 2016

"தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் சாத்தியமே" உங்கள் பம்பரம் டிவியில்!

உங்கள் பம்பரம் டிவியில் சனிக்கிழமை 23-01-2016 இரவு 8 மணிக்கு "தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் சாத்தியமே" என்கிற தலைப்பில் விறுவிறுப்பான விவாதமேடை நிகழ்ச்சி ஒளிபரப்பபடுகிறது. காண தவறாதீர்கள்.
 
பம்பரம் டிவியை நேரலையாக www.pambaramtv.com என்ற வலை தளத்தின் மூலம் காணலாம்.
 
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, January 20, 2016

ராமநாதபுரம் ரத்தினம் சாதிக் அலி அவர்களுக்கு உதித்த திருநாள் வாழ்த்து!

பெரு வயது குணத்தவராயினும்,

இளம் வயது துடிப்புடனே,

இணையத்தில் ஈட்டி போல,

இமை பொழுதும் ஓய்வில்லாமல்,

வைகோவின் வார்த்தைகளை வல்லமைமிக்க,

வரிகளாக, வாக்கியமாக வாசிக்க வாய்பளிக்கும்,

எங்கள் இளம் போராளி, 

இனிமைக்கு சொந்த காரர்,

எலோருக்கும் உறவுக்காரர்,

கழக உடன்பிறப்புகளின் கருணை இவர்,

பகிர்ந்தளிக்கும் பக்குவமானவர்,

கழகத்தார் கருத்து கேட்க காது கொடுப்பவர்,

ஆதங்கங்களை அமைதியாக கேட்பவர்,

அன்போடு அறிவுரை கூறுபவர்,

அவர் வாழ என் வாழ்த்து அலைபேசி ஒலியிலும்,

நூறாண்டு அவர் வாழ ஊரார் கூடி வாழ்த்த,

நானும் வாழ்த்துகிறேன் நீவிர் பிறந்த நன்னாளில்,

ராமநாதபுரம் ரத்தினமாம் சாதிக் அலி அவர்களுக்கு,

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, January 18, 2016

தன்னிகரற்ற பொதுவுடமைவாதி முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

எவன் பொருட்டும் மக்கள் நலனை காக்கவே படையமைத்து வலிமை சேர்த்துள்ளோம் என்று மக்கள் நலக் கூட்டணி அமைய காரணமாகயிருந்து கூட்டணி உருவானதும், வைகோவை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க முன்னெடுத்தவருமாகிய இந்திய கம்யுனிஸ்டு தமிழ்நாடு மாநில செயலாளர், அன்பிற்குரிய ஐயா இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள்.

அலைபேசியில் அழைத்து நான் மறுமலர்ச்சி மைக்கேல், ஓமன் மதிமுக இணையதள அணியில் இருந்து பேசுகிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. என்றதும், சிரிப்புடன் நன்றி என்றார். வாழ்த்து தெரிவித்த போது அவர் அடைந்த ஆனந்தம் அளவிட இயலாது. 

எங்கள் தலைவர் வைகோவுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்து வெற்றி நடை போடுவதற்கு நன்றி ஐயா என்றேன். சரி என்று சிரித்துகொண்டே சொன்னதாய் உணர்ந்தேன். 

வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும். மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உற்சாகமாக பாடுபடுவோம். சரி என்றார் சிரிப்புடன்.

வெளிநாடுகளில் வாழும் மக்கள் நலக் கூட்டணியினர் தாயகம் திரும்புவார்கள். களப்பணியாற்றுவார்கள் என்றேன், மேலும் சிரித்துகொண்டே சரி என்றார். 

அப்படிபட்ட பெருமகனாரை வாழ்த்துவதும், அவர் சரி என்று சிரித்துகொண்டே ஏற்றுக்கொண்டதும் நெகிழ்ச்சியாகவே இருந்தது. மீண்டொருமுறை இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ என்ற ஈரெழுத்து தாங்கிய பெருமகனை தலைவனாக கொண்ட தொண்டர்கள் கடல் கடந்து வாழ்ந்திருந்தாலும் வாழ்த்து சொல்லியிருப்பார்கள். அவரின் மனம் மிகுந்த ஆனந்தத்தை அடைந்திருக்கும் என்பதை என்னுடைய உரையாடலிலே அறிந்துகொண்டேன். 

உங்கள் பணிகள் சிறக்கட்டும். மக்களிடையே மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவும், அதிமுகவும் வேண்டாமென்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படியிருக்க ஊழலற்ற, நேர்மையாளர்களை கொண்ட மக்கள் நலக் கூட்டணியை வழி நடத்துகின்ற தலைவர்களாகிய உங்களுடன் நாங்களும் பயணிப்போம் என்பதில் பெருமையே.

வரும் காலம் மக்களுக்காக ஆட்சி அமைக்க மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம். காரணமாயிருந்த முத்தரசன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்