Monday, November 7, 2016

கடை விரிக்க, பாய் விரிப்பு?


பால் குணத்தில், வான் புகழ் கண்ட வைகோவை,
வீண் பழி சுமத்தாவிடில் விண்ணதிர விமர்சிப்பானென்று!

நவரசம் பேசி, வைகோவின் வைர சொல் பெற்று,
வார்த்தைகளுக்கு வண்ணம் பூசி, வசைபாடி மகிழ்வதேன்?

சரிந்தழிந்த திமுக வின் செல்வாக்கை நீ நிமிர்த்த,
வைகோ வை பகடை காயாக்க முயலுகிறாயோ?

பாமரன் வீடு எரித்து, குளிர் காயும் குணாளனே! 
நேர்மையாளன் அரசியலை அழிப்பதற்கு ஏன் துடித்தாய்?

அன்று பனை மரக் கீழ் நின்று பால் குடித்த விகடனே!
இன்று! நீ கள் குடித்து கல் மனதை பெற்றதேனோ

சுருட்டு முடியின்கெட்ட வாசம், உனை எட்டப்பனாக்கியது!
சொட்டை தலை சூனியத்தில், நரம்பில்லா நடிகனானாய்!

ராஜ தந்திரி பார்வையியிலே, அவர் சுதியில் உன் தாளம்!
உண்டபின் இலை போல உனை வைப்பார் என்றறியாய்?

கோபாலபுரம் கோபுரமென்று, கோமானாய் உனை அரவணைக்க,
சூட்சமத்தின் சுவை அறியாமல், சயனைடை பெற்றாயே!

தேர்தலையே திசை திருப்ப, தளர்ந்த பாதிகள் துணையிருக்க
நீ பெற்ற 1500 கோடியை மடைமாற்றம் ஏன் செய்தாய்!

வைகோ மேல் வாரியிறைத்தாய், மக்களை நம்ப செய்தாய்!
மாற்று அரசியல் கூட்டணியை, ஏன் நீ மழுங்கடித்தாய்?

நீண்ட செவி கொண்ட, குருட்டு விகடனே,
முரசொலிக்கு மகுடியானதால், காயடித்த காளையாவாய்!

உன் எழுத்தின் அர்த்தங்கள் புரியாத புதிராகினும்!
உன் பால் கொண்ட பற்றினால் உன் தமிழ் பருகினோமே!

விசமென்று புரியாமல், விழித்திருந்து பகிர்ந்தோமே!
விடியலை நீ தேடி, அமாவாசையை அழைத்துக்கொண்டாய்!

தனித்துவம் பெற்றிருந்தாய், தாலாட்டி மகிழ்ந்தார்கள்!
தரந்தாழ்ந்து போய் விட்டாய், உனை தூக்கி எறிவார்கள்.

கொட்டி கொடுத்த தமிழ் சொற்கள், கொஞ்சி விளையாட,
கூட்டிக் கொடுத்த அறிஞர்களால், உன் கூடாரம் காலியாகும்!

காகிதத்தில் எண்கள் வரைந்து, உன் மனதை மலடாக்கினர்!
உன் வாசகங்கள் ஜாலமிட்டால், அணு குண்டின் சுவையறிவாய்!

அந்நேரம் உன் எண்ணம் வைகோவை நினைக்கும் முன்னே!
அவர் குரல் ஒலித்திருக்கும், உனை காக்க கண்டன குரலாக.

மறுமலர்ச்சி மைக்கேல்

#ShameOnYouVikatan

Wednesday, November 2, 2016

தமிழை கொண்ட அருண்-க்கு பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ் பற்றாளன். தன்னை அழைக்கும்போதே தமிழ் தென்பட வேண்டுமென்பதற்காக தமிழருண் என்று வலம் வருபவன். தமிழ் மீதுள்ள காதிலின் வெளிப்பாடு அவன் எழுத்துகளில் வெளிப்படும்.

போராட்ட வாழ்வை சந்திப்பவன். தனியொருவனாக போராட்ட களத்தையும் சந்தித்தவன். நேர்மைதான் என் நாணயம் என்று பொதுவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வைகோவின் வரிப்புலி. பெரம்பலூர் மாணவர் மன்றத்தைன் மாணவ போராட்டங்களில் தளபதியாய் செயல்படுபவன்.

படிப்பில் பல பட்டங்களை வாங்கி வாழ்விலும் உயர்ந்து வாழ்வாங்கு வாழ பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, October 31, 2016

பொருளாதார சுமையில் களை இழந்த எங்கள் Staff Party!

ஒவொரு வருடமும் நான் பணி செய்யும் நிறுவனத்தில் பணி செய்யும் கீழ் நிலை ஊழியர்கள் முதல் மேல் நிலை ஊழியர்களுக்காக பார்ட்டி (Annual Staff Party) நடைபெறும். அது மாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 2 மணி வரை நடக்கும்.

அனைவருக்கும் பரிசுகள், மேலும் காசு கூப்பன்கள் போன்றவை கிடைக்கும். மேலும் பல திறன் சார்ந்த போட்டிகளும் நடக்கும் அதற்கு அருமையான பரிசு பொருட்களும் கிடைக்கும். சந்தோசங்கள் நிறைந்தே காணப்படும். சிரிப்புக்கு அளவே இருக்காது. கை தட்டல்கள் காதுகளை துளையிட முயலும்.

பல விதமான நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றுவோம். ஆனால் இந்த வருடம் ஒன்றிரண்டு திறன் போட்டிகள் ஒரு சில துறைகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது, சில துறைகளுக்கு நடத்தப்படவில்லை நேரமின்மை என கூறப்பட்டது.

ஏனென்றால் இந்த தடவை காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. அதில் ஒரு சில திறன் போட்டிகளுக்கு நேரங்கள் அதிகமாக செலவளிக்கப்பட்டுவிட்டது. சில கலகலப்பான போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

ஒரு சில போட்டிகள் மட்டுமே நடைபெற்றாலும் பரிசுகளும் எப்போதும் போல அல்லாமல் ஆறுதல் பரிசுகள் போலதான் இருந்தன.

உணவு வகைகள் ஒரு சில புது வகைகளே இருந்தன. அதையும் அந்த துறை அல்லாத பணியாளர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்டாலும் சுவை இருந்தது. ஆனால் அதிகமான வைகைகள் காட்சிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் எங்கள் நிறுவனம் 4 நட்சத்திர உணவு விடுதி. அங்கே உணவுகளை காட்சி படுத்துதல் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த தடவை எதுவுமே இல்லாதது போன்ற உணர்வு. ஒரு சில புகைப்படங்கள் கடமைக்கு எடுத்தது போன்ற உணர்வுதான் ஏற்ப்பட்டது.

மொத்தத்தில் இந்த வருடம் ஒரு நிறைவு இல்லாதது போலிருந்தது. எல்லாம் காரணம் கச்சா எண்ணெய் விலை குறைவுதான் என்றால் நம்பவா போகிறீர்கள். ஆம் எங்கள் நிறுவனமும் பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவால் அரசு துறை அதிகாரிகள் எங்கள் ஹோட்டலில் தங்குவதில்லை. ராஜா எங்கள் பகுதியில் உள்ள அரண்மனைக்கு வராததாலும், அதனால் அரசு துறை ஊழியர்கள் தங்குவது குறைந்ததாலும், மேலும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நிகழ்ச்சிகளை இந்த வருடம் குறைத்துக் கொண்டதால் அதன் இழப்பும் அதிகமாகவே இருந்தது. சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் சில அச்சுறுத்துதல்களால்,அவர்களின் வருகையும் மிக குறைந்துவிட்டது.

அதனால் எங்கள் நிறுவன மொத்த வருமானம் மிக குறைந்து பட்ஜெட்டை விட குறைவாகவே காணப்படுகிறது. அதன் தாக்கம் ஊழியர்களின் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் பார்ட்டியிலும் நெருக்கடியை ஏற்ப்படுத்தியது என்பதே நிதர்சனம்.

இது வரை கடன் வாங்காத நான் பணி செய்யும் ஓமன் நாடு இந்த 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கி பட்ஜெட் போட்டது என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகும். மேலும் அனைத்து அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகள் சிறிதளவு தப்பித்திருக்கிறது. உதாரணம் துபாய்.

ஒரு நாட்டில் பொருளாதாரம் இல்லையென்றால் எந்த விடயங்கள் எல்லாம் தடைபடுகிறது. அதனால் மகிழ்ச்சி எவ்வளவு தடைபடுகிறது என்பதற்கு நேற்று நடந்த எங்கள் பார்ட்டியே சான்று.

எண்ணெய் விலை இப்படியே போனால் இன்னும் 3 ஆண்டுகள் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஏற்கனவே குறைக்கப்பட்ட ஊதியம் கூட கிடைக்கப்பெறாமல் போகும் நிலை வரலாம். வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்.

அந்த நிலை உருவானால் எங்களை போன்றோர் நிலை? அடுப்பை கோழி கிண்டும் நிலைதானோ? மோடி விழித்துக்கொள்வாரா?

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, October 29, 2016

தீபாவளி நல் வாழ்த்துக்கள் 2016!

சிறிய மண் விளக்குகளை வரிசையாய் வைத்து அதில் எண்ணையுடன் திரியை வைத்து, விளக்கேற்றி அதிலுள்ள ஒளியின் மூலம் இருள் நீக்கி வெளிச்சம் தரும் நன்நாளே "தீபாவளி" எனும் "தீபஒளி" திருநாளாகும்.

இந்த தீபாவளி திருநாளில், தீய எண்ணங்களை அழித்துவிட்டு நல்ல எண்ணம் எனும் ஒளியை மனதில் ஏற்ற வேண்டும் என்பதையே தீப ஒளியின் மூலம் பறைசாற்றப்படுகிறது.

தீபாவளி திருநாளில் புத்தாடையுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த "தீபஒளி" திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, October 22, 2016

இந்திய கபடி அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்வாதாரத்திற்கும் நடுவன் அரசு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்!

உலக கோப்பை கபடி போட்டி இந்தியாவில் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய கபடி அணி தொடர்ந்து 3 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் அடித்து சாதனை படைத்துள்ளது. இதில் முன்னணி இந்திய வீரர் 14 புள்ளிகள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றார்.

அரையிறுதி போட்டியில் தாய்லாந்துடன் விளையாடி அணி தாய்லாந்து அணியை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்க்கடித்து, இறுதி சுற்றுக்கி தேர்வாகியிருந்த ஈரானுடன் மோத முடிவானது.

இன்று நடந்த போட்டியில் ஈரான் முதலில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா 38-29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை தோற்க்கடித்து வெற்றிக்கொடியை நிலைநாட்டியது.

தொடர்ந்து வெற்றிக்கொடியை நிலைநாட்ட அரும்பாடு பட்ட வீரர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக இருந்து வீரர்களின் உடல் நலனிலும், ஊக்கமும் அளித்த பயிற்ச்சியாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி கோப்பையை கைப்பற்றிய கபடி வீரர்களுக்கு இந்திய நடுவண் அரசு அதிக பரிசு தொகையை அறிவித்து அவர்களது வாழ்வாதாரத்திற்காக மரியாதையான அரசு வேலையையும் வழங்கிட வலியுறுத்துகிறேன்.

வீரர்களை உற்சாகப்படுத்தும் பட்சத்தில், வீரர்கள் இன்னும் வேகமாக தங்கள் திறமைகளை நிரூபிக்க, இப்படிபட்ட ஊக்க பரிசுகள் வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

வைகோவின் களப்புலியை கண்டு இணையமே பயந்துவிட்டதோ?

பல நாட்களாகவே முகநூலில் நண்பர்கள் அழைத்தால் ஒலி எதுமே கேட்காது. பின்னர் நான் தனி செய்தியில் நண்பர்களிடத்தில் சொல்வேன் இந்த நாட்டில் வாய்ஸ் எல்லாம் பிளாக் செய்கிறார்கள் என்று. அப்புறம் நாங்கள் தனிசெய்தியில்தான் பேசுவது வழக்கம்.

ஆனால் சிறுது நேரத்திற்கு முன் வைகோவின் வரிப்புலி அண்ணன் திருப்பதி சாய் அவர்கள் அழைத்தார்கள். நான் எப்போதும் போல அட்டன் செய்தேன். நானும் ஒலி கேட்காது, தனி செய்தியில் ஒலி கேட்கவில்லை என்ற செய்தி சொல்ல மினிமைஸ் செய்கிறேன் ஒலி கேட்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தலைவர் சந்தோசமாக இருந்தார் என்று அண்ணன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

பாருங்கள் என்ன ஆச்சரியம் வைகோவின் வரிப்புலி அழைப்பார் என்று இணையமே அதிர்ந்துவிடும் என பயந்து மார்க் சரி செய்துவிட்டாரோ?

மகிழ்ச்சியான தருணம் திருப்பதிசாய் அண்ணா நன்றி.

தமிழன்புடன்,

மறுமலர்ச்சி மைக்கேல்