சிறிய மண் விளக்குகளை வரிசையாய் வைத்து அதில்
எண்ணையுடன் திரியை வைத்து, விளக்கேற்றி
அதிலுள்ள ஒளியின் மூலம் இருள் நீக்கி வெளிச்சம் தரும் நன்நாளே "தீபாவளி"
எனும் "தீபஒளி" திருநாளாகும்.
இந்த தீபாவளி திருநாளில், தீய எண்ணங்களை அழித்துவிட்டு நல்ல எண்ணம்
எனும் ஒளியை மனதில் ஏற்ற வேண்டும் என்பதையே தீப ஒளியின் மூலம் பறைசாற்றப்படுகிறது.
தீபாவளி திருநாளில் புத்தாடையுடன் பட்டாசு
வெடித்து, இனிப்பு
வழங்கி கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த "தீபஒளி" திருநாள்
நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment